Thengai Poornam Kozhukattai in Tamil | தேங்காய் பூர்ண கொழுக்கட்டை | Coconut Poornam Kozhukattai in Tamil | Pooran Kozhukattai Recipe

See this Recipe in English

தேங்காய் பூர்ண கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தி அன்று செய்யப்படும் மிகவும் பிரபலமான கொழுக்கட்டை வகை.  தேங்காய், வெல்லம், ஏலக்காய், நெய், ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் சுவையான பூரண வகை.  சுவையான தேங்காய் பூர்ண கொழுக்கட்டை இந்த விநாயகர் சதுர்த்திக்கு நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

சுவையான  தேங்காய் பூர்ண கொழுக்கட்டை செய்ய சில குறிப்புகள்

  • புதிதாக உடைத்த இளம் தேங்காயை துருவி பயன்படுத்தினால் பூரணம் சுவையாக இருக்கும்.
  • வெல்லம் உங்கள் சுவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • பூரணம் செய்யும் பொழுது ஓரளவு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்.  அல்லது ஆறியவுடன் அதிக கெட்டி தன்மையுடன் மாற வாய்ப்புள்ளது.
  • விருப்பப்பட்டால் கடைசியாக ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இடியாப்ப மாவு அல்லது கொழுக்கட்டை மாவு பயன்படுத்தலாம்.
  • அரிசி மாவு பயன்படுத்துவதாக இருந்தால் அதனை வறுத்த பின்னர் பயன்படுத்தவும்.
  • கொழுக்கட்டைகள் வெந்தபிறகு சூடாக இருக்கும் பொழுது எடுக்காமல் ஓரளவு ஆறிய பின்னர் எடுத்தால் ஒட்டாமல் வரும்.

இதர வகைகள்

மணி கொழுக்கட்டை

ராகி பிடி கொழுக்கட்டை

இனிப்பு பிடி கொழுக்கட்டை

தேங்காய் பூரண கொழுக்கட்டை

கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை

எள்ளு பூரண கொழுக்கட்டை

 பால் கொழுக்கட்டை

 

 தேவையான பொருட்கள்

  • வெல்லம் – ½  கப்
  • துருவிய தேங்காய் – ½ கப்
  • ஏலக்காய் பொடி – ¼  தேக்கரண்டி

மேல் மாவு செய்ய தேவையான பொருட்கள்

  • கொழுக்கட்டை/இடியாப்ப மாவு – 1  கப்
  •  உப்பு –  தேவையான அளவு
  •  சமையல் எண்ணெய் – 1  தேக்கரண்டி

செய்முறை

1. ஒரு பானில் ½  கப் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்.

2. அதனுடன் ¼  தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

3. வெல்லம் கரைந்ததும் அதனை வடிகட்டிக் கொள்ளவும்.

4. கால் தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

5. வெல்லம் கொதிக்கும் பொழுது  ½  கப் துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்.

6. மிதமான தீயில் வைத்து தண்ணீர் வற்றி கலவை ஓரளவு கெட்டியாகும் வரை வேக வைக்கவும்.

7. தேங்காய் பூரணம் தயார், தனியே எடுத்து வைக்கவும்.

8. மேல் மாவு செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் 1.5 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் தண்ணீர் சூடானதும் சிறிதளவு உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்க்கவும்.

9. அதனுடன் 1 கப் கொழுக்கட்டை மாவு சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

10. கரண்டியின் காம்பு கொண்டு மென்மையாக  திரண்டு வரும் வரை கலக்கவும்.

11. பின்னர் ஒரு பௌலில் கொட்டி ஆறவிடவும். கை தாங்கும் சூடு வந்தபிறகு அதனை மென்மையாக பிசைந்து வைக்கவும்.

12. கொழுக்கட்டை செய்வதற்கு  ஒரு வாழை  இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் சிறிதளவு எண்ணெய் தடவி ஒரு உருண்டை மாவை வைத்து தட்டி கொள்ளவும்.

13.  அதன் மீது ஒரு தேக்கரண்டி அல்லது சிறிதளவு பூரணம் வைத்து மடித்து ஓரங்களை ஒட்டவும்.

14. ஒரு இட்லி தட்டில் எண்ணெய் தடவிக் கொள்ளவும்,  பின்னர் தயார் செய்துள்ள கொழுக்கட்டைகளை வைத்து இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி வைத்து 5 முதல் 7 நிமிடங்கள் வேக வைக்கவும்.

15. ஓரளவு ஆறிய பின்னர் கொழுக்கட்டைகளை எடுக்கவும். சுவையான தேங்காய் பூரண கொழுக்கட்டை தயார்.

Leave a Reply