எலுமிச்சை ரசம்

lemon_rasam

ரசம் புளிப்பு, மற்றும் காரம் நிறைந்த சுவையான உணவு வகை. மேலும் பூண்டு மிளகு, மற்றும் சீரகம் சேர்ப்பதால், இதற்கு மருத்துவ குணங்களும் உண்டு.  ரசம் பலவகைகளில் செய்யப்படுகிறது. உதாரணமாக அன்னாசிப்பழ ரசம், மிளகு ரசம், பூண்டு ரசம், தக்காளி ரசம். அதே வகையில் ஒரு வித்தியாசமான ரசம் எலுமிச்சை ரசம். இதற்கு நீங்கள் புளி சேர்க்க தேவையில்லை. மேலும் இது விரைவில் செய்யக் கூடிய உணவு வகை.  நீங்களும் சுவையான எலுமிச்சை ரசம் செய்து சுவைத்து மகிழுங்கள்.

எலுமிச்சை ரசம் செய்ய தேவையான பொருட்கள்

தக்காளி – 1
எலுமிச்சம்பழம் – 1 / எலுமிச்சம்பழச் சாறு – 4 தேக்கரண்டி
ரசப்பொடி – 1 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
பூண்டு பற்கள் – 4
வேகவைத்த துவரம்பருப்பு – ¼ கப்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணெய் – ½ தேக்கரண்டி
கடுகு – ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
வரமிளகாய் -2

எலுமிச்சை ரசம் செய்முறை

1.ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கி கடுகு, கருவேப்பிலை, மற்றும் வறமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

2.அதனுடன் நறுக்கிய தக்காளி மற்றும் நசுக்கிய பூண்டு பற்கள் சேர்த்துசேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கவும்.

lemon_rasam

3.அதனுடன் உப்பு,  மற்றும் ரசப்பொடி சேர்த்து கிளறவும்.

lemon_rasam

4.அதனுடன் ஒரு கப் அளவு தண்ணீர், மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

lemon_rasam

5.கொதித்த பின்னர் வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து கலக்கவும்.

lemon_rasam

 6.ரசம் கலவை கொதித்தவுடன் அதனுடன் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும்.

7.பின்னர் எலுமிச்சம் பழசாறு கொட்டைகளை நீக்கிவிட்டு சேர்க்கவும். எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து உடன் அடுப்பை அணைத்து விடவும்.

8.இறுதியாக 2 தேக்கரண்டி நெய் சேர்த்து பரிமாறவும்.

9.சுவையான எலுமிச்சைபழ ரசம் தயார்.

lemon_rasam

Leave a Reply