Coconut Milk Murukku in Tamil | தேங்காய் பால் முறுக்கு | Murukku recipe in Tamil | How to make murukku

See this Recipe in English

தேங்காய்ப்பால் முறுக்கு தீபாவளிக்கு செய்யப்படும் ஒரு சுவையான மொறுமொறுப்பான முறுக்கு வகை. குறிப்பாக இது தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். தேங்காய்பால் முறுக்கு அரிசி மாவு, உளுந்து மாவு, தேங்காய் பால், வெள்ளை எள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது தவிர பொட்டுக்கடலை முறுக்கு, உளுந்து முறுக்கு ஆகியவை மிகவும் பிரபலம். தேங்காய்ப்பால் முறுக்கு தேங்காய் வாசனையுடன் லேசான இனிப்புச் சுவையுடன் இருக்கும்.

முறுக்கு செய்ய சில குறிப்புகள்

  • உளுந்து மாவு 1 பங்குக்கு 4 பங்கு அரிசி மாவு சேர்த்தால் முருக்கு மொறு மொறுப்பாக இருக்கும்.
  • மென்மையாக முறுக்கு செய்ய சிறிதளவு வெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
  • வெண்ணை அதிகமாக சேர்த்தால் முறுக்கு உடைய வாய்ப்பிருக்கிறது.
  • உளுந்து மாவு, தேங்காய் பால் ஆகியவற்றை வீட்டிலேயே செய்யும் பொழுது அதிக சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இதர தீபாவளி பலகாரங்கள் –  தேங்காய் பால் முறுக்கு, மெது பக்கோடா, ரிப்பன் பக்கோடா,  தட்டை முறுக்கு, முறுக்கு.

இதர தீபாவளி இனிப்பு வகைகள் – ரவா லட்டு , மோட்டிச்சூர் லட்டுபாசிப்பருப்பு உருண்டை, பூந்திலட்டு, ரோஸ் பர்பி , குலாப் ஜாமுன், கோதுமை குலாப் ஜாமுன், கோதுமை அல்வா,  பாதாம் அல்வா, அசோகா அல்வா, திருநெல்வேலி அல்வா,   பால்கோவா, இனிப்பு காஜா, சாக்லேட் பர்ஃபி.

See this Recipe in English

தேங்காய் பால் முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்

  • அரிசி மாவு  – 1 கப்
  • வெள்ளை உளுந்து  – 1/4 கப்
  • வெண்ணை – 1/4 கப்
  • துருவிய தேங்காய்  – 1/4 கப் 
  • சீரகம் – 1 தேக்கரண்டி 
  • வெள்ளை எள் – 1/2 தேக்கரண்டி
  • பெருங்காயத்தூள்  – 1/4 தேக்கரண்டி
  • தேவையான அளவு உப்பு

தேங்காய்பால் முறுக்கு செய்முறை

1. ஒரு வாணலியில் 1/4 கப் உளுந்து சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுக்கவும்.

2. அதனை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

3. அதனை ஒரு சல்லடையில் சலித்து கொள்ளவும்.

4. துருவிய தேங்காயை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சிறிதளவு வெந்நீர் கலந்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

 5. அதனை ஒரு வடிகட்டியில் ஊற்றி கெட்டியான பால் எடுத்துக் கொள்ளவும்.

6. மற்றொரு பாத்திரத்தில் 1 கப் அரிசி மாவு, 1/4 கப் உளுந்து மாவு, 1/4 கப் வெண்ணை, 1 தேக்கரண்டி சீரகம், 1/2 தேக்கரண்டி வெள்ளை எள், 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

7.அதனுடன் 1/2 கப் தேங்காய்ப்பால் சேர்த்து மென்மையான மாவு பிசைந்து கொள்ளவும்.

8. முறுக்கு உரலில் சிறிதளவு எண்ணை தேய்த்து மாவை நிரப்பிக் கொள்ளவும்.

 9. ஒரு கரண்டி அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் பிழிந்து கொள்ளவும்.

 10. சூடான எண்ணெயில் பொரிக்கவும்.

11.  2-3 நிமிடங்களுக்கு பிறகு திருப்பிப் போடவும்.

12. நுரை அடங்கியதும் முறுக்கை எடுத்துவிடவும்.

13. ஆறிய பின்னர் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். 

Leave a Reply