See this Recipe in English
மார்பில் கேக் சாக்லேட் கேக் மற்றும் வெண்ணிலா கேக் இவை இரண்டும் கலந்த சுவையில் பிரமாதமாக இருக்கும். இதனை மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். கேக் செய்ய தேவைப்படும் அடிப்படையான பொருட்களை கொண்டு சுவையான மார்பில் கேக் செய்யலாம். இது ஜீப்ரா கேட்கின்றோம் கூறப்படுகிறது.
இந்தப் பதிவில் முட்டை சேர்த்த கேக் செய்துள்ளேன். இதற்கு பதிலாக முட்டை சேர்க்காமலும் கேக் செய்யலாம். முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக் மற்றும் சாக்லெட் கேக் செய்முறை நமது வலைதளத்தில் உள்ளது. மேலும் ஓவன் இல்லாமல் பாத்திரத்தில் கேக் செய்யும் முறையும் நமது வலைதளத்தில் உள்ளது. சுலபமான மார்பில் கேக்கை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான மார்பில் கேக் செய்ய சில குறிப்புகள்
- கேக் செய்வதற்கு முன் முட்டை, பால், வெண்ணெய் ஆகியவற்றை ரூம் டெம்பரேச்சர் (room temperature) வரும்வரை பிரிட்ஜில் இருந்து எடுத்து வெளியில் வைக்கவும்.
- வெண்ணெயுடன் சேர்த்து சர்க்கரையை அடிக்கும் பொழுது அதனை சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளவும். சுலபமாக கரைவதற்கு சர்க்கரையை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக் கொள்ளலாம்.
- வெண்ணை சேர்ப்பதற்கு பதிலாக அதே அளவு வாசனை இல்லாத சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
- முட்டை மற்றும் வெண்ணை கலவையுடன் பால் சேர்க்கும் பொழுது திரிந்து போல காணப்படும், பயப்பட தேவையில்லை இது சாதாரணமானது.
- கேக் பொன்னிறமாகவும், அதே சமயத்தில் ஒரு டூத் பிக் கொண்டு குத்தும் பொழுது மாவு ஒட்டாமல் வந்தால் கேக் தயாராக உள்ளது, இல்லையேல் 5 முதல் 10 நிமிடம் வைத்து வேக வைக்கவும்.
- கேக் வெந்த பின்னர் கூலிங் ரேக்கில் (cooling rack) வைத்து நன்றாக ஆறவிடவும்.
- கேக் ஆறிய பின்னர் வெட்டவும் அல்லது கேக் உடையும் வாய்ப்புள்ளது.
இதர கேக் வகைகள்
டூட்டி ஃப்ரூட்டி கேக்
முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக்
முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக்
ஹனி கேக்
ரவா கேக்
முட்டை சேர்க்காத சாக்லேட் கேக்
ஓவன் இல்லாமல் கப் கேக் செய்வது எப்படி?
ஓவன் இல்லாமல் வெண்ணிலா கேக்
தேவையான பொருட்கள்
- வெண்ணை – 150g
- சர்க்கரை – 1.25 கப் – 250g
- வெண்ணிலா எசன்ஸ் – 1 தேக்கரண்டி
- முட்டை – 4
- பால் – ½ கப் – 125ml
- மைதா – 2 கப் – 280g
- பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
- கொக்கோ பவுடர் – 3 மேஜைக்கரண்டி
செய்முறை
1. ஒரு பவுலில் 150g வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
2. அதனுடன் ¼ கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். ஒரு ஹேண்ட் மிக்ஸர் (hand mixer) கொண்டு மென்மையாக அடித்துக் கொள்ளவும்.
3. பின்னர் மீதமுள்ள சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து மென்மையாக அடித்துக் கொள்ளவும்.
4. பின்னர் 1 தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் மற்றும் 1 முட்டை சேர்த்துக் கொள்ளவும்.
5. முடியை மென்மையாக அடித்த பிறகு மீதமுள்ள முட்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து மாவு பஞ்சு போன்று (fluffy) ஆகும் வரை அடிக்கவும்.
6. பின்னர் ½ கப் பால் சேர்த்து கலக்கவும்.
7. இதனுடன் 2 மைதா மாவு சலித்து சேர்த்துக் கொள்ளவும்.
8. பின்னர் 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் சேர்த்துக் கொள்ளவும்.
9. இவற்றை மென்மையாக கலக்கவும்.
10. கலந்த பின்னர் பாதி மாவை எடுத்து தனியே வைக்கவும்.
11. அதில் 3 மேஜைக்கரண்டி கோகோ பவுடர் சேர்த்து கலக்கவும்.
12. இப்போது ஓவனில் 360F/180 C பிரிஹீட் செய்யவும். ஒரு கேக் டின்னில் லேசாக எண்ணை தடவி அதன்மீது பார்சிமெண்ட் பேப்பர்/லைனர் போடவும். தயாராக உள்ள வெண்ணிலா கேக் மாவு மற்றும் சாக்லேட் கேக் மாவு இரண்டையும் ஒன்று மாற்றி ஒன்றாக லேயராக வைக்கவும்.
13. பின்னர் ஒரு நீளமான குச்சி வைத்து அளக்கவும் கலக்கவும்.
14. ஓவனில் வைத்து 45 முதல் 55 நிமிடம் வரை வைத்து வேக வைக்கவும்.
15. பின்னர் ஆற வைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
16. சுவையான மார்பில் கேக் தயார்.