மசாலா வேர்க்கடலை

மசாலா வேர்க்கடலை ஒரு சுவையான மாலை நேர உணவு வகை,  இது தவிர பண்டிகை காலங்களிலும்  செய்யலாம். மசாலா கடலை,  வேர்கடலை, கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.

இது எண்ணெயில் பொரித்து செய்யப்படும் பதார்த்தம், விரைவாக மற்றும் உடனடியாகச் செய்யக்கூடியது. நீங்களும் சுவையான மசாலா வேர்க்கடலை செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் வேர்க்கடலை
  • 2 தேக்கரண்டி கடலை மாவு
  • 1 தேக்கரண்டி அரிசி மாவு
  • 1/2 தேக்கரண்டி சோள மாவு
  • 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  • 1/2 தேக்கரண்டி சோம்பு
  • 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

மசாலா வேர்க்கடலை செய்முறை

1. ஒரு வாணலியில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

2. ஒரு பாத்திரத்தில் பச்சை வேர்க்கடலை எடுத்துக் கொள்ளவும்.

3. அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, சோம்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்க்கவும் .

4. அனைத்தையும் நன்றாக கலந்து விடவும் .

5. அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்து பிசைந்து வைக்கவும்.

6. எண்ணெய் சூடானதும் அதில் வேர்க்கடலை கலவையை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

7. சுவையான மற்றும் மொறுமொறுப்பான மசாலா வேர்க்கடலை தயார்.

Leave a Reply