Puran Poli | Sweet Poli in Tamil | பருப்பு போளி | How to make Poli in Tamil

பருப்பு போளி மிகவும் சுவையான பாரம்பரிய சுவைமிக்க இனிப்பு வகை. இது கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. பருப்பு போளி & தேங்காய் போளி போன்றவை தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். இது பூரணம் செய்து அதனை மைதாமாவில்  உள்ளே வைத்து  தட்டி வேக வைக்க வேண்டும்.

சுவையான போளி செய்ய சில குறிப்புகள்

  • போளி செய்வதற்கு மைதாமாவு  பயன்படுத்தும் பொழுது சப்பாத்திக்கு பிசைவது விட இலக்கமாக பிசைந்து 2 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை ஊற வைக்கலாம்.
  • மாவு ஊற வைக்கவில்லை என்றால் போளி செய்ய வராது.
  • மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு பயன்படுத்தி இதே முறையில்  போளி செய்யலாம்.
  • கடலைப் பருப்பு மற்றும் வெல்லம் இரண்டையும் சம அளவில் எடுத்துக்கொள்ளலாம் அல்லது உங்கள் சுவைக்கேற்ப வெள்ளத்தை கூடவோ அல்லது குறைத்தோ பயன்படுத்தலாம்.
  • பூரணம் செய்வதற்கு தேங்காயை வறுக்காமல் உபயோகப்படுத்தி உள்ளேன் நீங்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு வைத்து சாப்பிடுவதாக இருந்தால் தேங்காய் வறுத்து சேர்த்துக் கொள்ளவும்.
  • போளியை தட்டி தோசைக்கல்லில் இடும் பொழுது இரண்டு பக்கமும் நெய் தடவி வேக வைக்கவும்,  கூடுதலாகச் நெய் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

இதர வகைகள் – தேங்காய் பூரண கொழுக்கட்டை, கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டைஎள்ளு பூரண கொழுக்கட்டை, உளுந்து பூரண கொழுக்கட்டை, இனிப்பு பிடி கொழுக்கட்டை, பருப்பு பாயசம், கடலை பருப்பு பாயசம், அவல் பாயசம்

 

மேல் மாவு செய்ய தேவையான பொருட்கள்

  • மைதா மாவு –  1 கப் 
  • மஞ்சள் தூள் –  1/2 தேக்கரண்டி
  • உப்பு –  தேவையான அளவு
  • சமையல் எண்ணெய் –  இரண்டு தேக்கரண்டி

 பூரணம் செய்ய தேவையான பொருட்கள்

  • கடலைப்பருப்பு –  1 கப்
  • வெல்லம் –  1 கப்
  • துருவிய தேங்காய் –  1/2 கப்
  • ஏலக்காய் பொடி –  1/2 தேக்கரண்டி

போளி இடுவதற்கு

  • நெய் – தேவையான அளவு

செய்முறை

1. மேல் மாவு செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மைதா மாவு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான உப்பு, இரண்டு தேக்கரண்டி எண்ணெய், ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

2. சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பிசைவதை விட மென்மையாக பிசைந்து கொள்ளவும்.

4. பிசைந்து வைத்த மாவின் மீது சிறிதளவு எண்ணெய் தடவி மூடி வைக்கவும்.

5. அதனை 2 மணி நேரங்களுக்கு ஊற வைக்கவும்.

6. பூரணம் செய்வதற்கு ஒரு பிரஷர் குக்கரில் ஒரு கப் கடலை பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.

7. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிரஷர் குக்கரை மூடி வைத்து மூன்று முதல் நான்கு விசில் வைத்துக் கொள்ளவும்.

8. கடலைப் பருப்பு நன்கு வெந்து பிரஷர் இறங்கியதும் அதனை ஆற வைத்து மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

 9. ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு வெல்லம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

 10. வெல்லம் நன்கு கரைந்து கெட்டியானதும் அடுப்பை அணைத்து தனியே எடுக்கவும்.

11. தயார் செய்து வைத்துள்ள கடலைப்பருப்பை ஒரு கடாயில் சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் வெல்ல பாகை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்.

12. வெல்ல பாகு கலந்ததும் கடலைப்பருப்பு இளகி வரும் 5 – 6 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்தால் மீண்டும் கெட்டியாகிவிடும்.

13. அதனுடன்  அரை கப் துருவிய தேங்காய் மற்றும் அரை தேக்கரண்டி ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

 14. இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

15. பூரணம் ஓரளவு கெட்டியானதும் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

 

16. பிசைந்து வைத்த மாவை 2 மணி நேரங்களுக்கு பிறகு எடுத்துக் கொள்ளவும். ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி ஒரு உருண்டை வைக்கவும்.

17. சிறியதாக தட்டிக் கொள்ளவும்.

18. தயார் செய்து வைத்துள்ள பூரணத்தில் ஒரு உருண்டை எடுத்து வைக்கவும்.

19. மேல் மாவை வைத்து மூடவும்.

20. பூரணம் வெளியே வராமல் விசாக தட்டிக் கொள்ளவும்.

21. தோசை தவாவில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து தயார் செய்து வைத்துள்ள போளி சேர்க்கவும்.

22. ஓரளவு வெந்த பிறகு திருப்பிப் போடவும்.

25.சிறிதளவு நெய் தடவவும்.

24. இரண்டு பக்கமும் சிவந்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு பரிமாறவும்.  சுவையான இனிப்பு பருப்பு போளி தயார். 

Leave a Reply