பருப்பு துவையல்

பருப்பு துவையல் புளியோதரை, வத்தல் குழம்பு, ரசம், மற்றும் தயிர் சாதம் ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும்.  அது தவிர சூடான சாதத்தில் பருப்பு துவையல் மற்றும் உருக்கிய நெய் சேர்த்து சாப்பிடலாம்.

பருப்பு துவையல் இட்லி, தோசைவுடனும் சுவையாக இருக்கும்.  இதனை கடலைப்பருப்பு சேர்த்து செய்துள்ளேன். இது தவிர நீங்கள் துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்பு அல்லது இவை இரண்டும் சம அளவு கலந்து செய்யலாம். இதே சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும்.  சுவையான பருப்பு துவையல் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

பருப்பு துவையல் செய்ய தேவையான பொருட்கள்

  • 4 தேக்கரண்டி கடலை பருப்பு
  • 2 பூண்டு பற்கள்
  • 4-6 வரமிளகாய்
  • 4 தேக்கரண்டி துருவிய தேங்காய்
  • சிறிதளவு புளி
  • உப்பு தேவையான அளவு
  • 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய்

தாளிக்க தேவையான பொருட்கள்

  • ஒரு தேக்கரண்டி எண்ணெய்
  • அரை தேக்கரண்டி கடுகு
  • சிறிதளவு கறிவேப்பிலை

பருப்பு துவையல் செய்முறை

1. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

2. அத்துடன் இரண்டு பல் பூண்டு சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.

3. பின்னர் வரமிளகாய் சேர்த்து குறைவான தீயில் நன்கு வறுக்கவும்.

4. வரமிளகாய் வறுபட்டதும் அடுப்பை அணைத்துவிட்டு கலவையை நன்கு ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.

5. அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து புளி மற்றும் தேவையான அளவு உப்பு  சேர்க்கவும்.

6. அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து துவையல் பதத்திற்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

7. ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனை பருப்பு துவையலுடன் சேர்க்கவும்.

8. சுவையான பருப்பு துவையல் தயார்.

 

Leave a Reply