Idli podi recipe in Tamil | இட்லி மிளகாய் பொடி | Chutney powder recipe | Gun powder for Idli

இட்லி மிளகாய் பொடி  உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான பொடி வகை.  இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். எப்பொழுதும் சட்னி, சாம்பார் என  சாப்பிடுவதை விட அவ்வப்போது இதுபோன்ற  இட்லி பொடி சேர்த்துக் கொள்ளலாம்,  அதேசமயம் அரைத்து வைத்துக் கொண்டால் 3 – 4 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். சோம்பலான  நேரங்களில் இட்லி,தோசையுடன் பொடி வைத்துக் கொடுத்தால் வேலையும் குறைவு, நேரமும் மிச்சம்.

 சுவையான இட்லி பொடி செய்ய சில குறிப்புகள்

  • உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போன்றவற்றை பச்சை வாசனை போகும் வரை வறுத்துக் கொள்ளவும்/ லேசான பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  • பருப்பு வகைகளை வறுக்கும் பொழுது மிதமான தீயில் வைக்கவும் அல்லது அதைவிட குறைவான தீயில் வைத்து வறுக்கவும் அல்லது கருகி விடும் வாய்ப்புள்ளது.
  • கறிவேப்பிலையை கழுவி காய வைத்து சுத்தம் செய்து அதன் பின்னர் வறுத்து சேர்த்துக் கொள்ளவும்.
  • பொடி அரைக்கும் பொழுது மிக்ஸி ஜாரில் துளியும் ஈரம் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்  அல்லது பொடி நமத்து போய்விடும் வாய்ப்புள்ளது.
  • மிளகாயை குறைவான தீயில் நிறம் மாறாமல் வறுத்துக் கொள்ளவும் அல்லது மிளகாய் கருப்பாகி விடும்.
  • இட்லி மிளகாய் பொடியை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்,  நைசாக அரைப்பதை விட சற்று கொரகொரப்பாக இருந்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
  • இதனை நல்லெண்ணெய் அல்லது நெய்யுடன் கலந்து இட்லி தோசையுடன் பரிமாறலாம்.
  • உப்பு உங்கள் சுவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
  • இட்லி பொடி அரைக்கும் போது சிறிதளவு பெருங்காயம் சேர்த்துக் கொண்டால் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.

இதர பொடி/சட்னி வகைகள் – ஆந்திரா ஸ்டைல் பருப்பு இட்லி பொடி,ஆந்திரா ஸ்டைல் வேர்கடலை இட்லி பொடி, பூண்டு இட்லி பொடி,  இட்லி மிளகாய் பொடி, வெங்காய சட்னி, கமகமக்கும் புதினா சட்னி, பீர்க்கங்காய் துவையல், ஹோட்டல் சுவையில் தேங்காய் சட்னி, இஞ்சி சட்னி, புதினா சட்னி, பூண்டு தக்காளி தொக்கு , தக்காளி சட்னி , பருப்பு துவையல்.

இதர வகைகள் –  வடைகறி, பாசிப்பருப்பு இட்லி, மசாலா பாஸ்தா, மசாலா பாஸ்தா,  உடனடி மெதுவடை, உடனடி தோசை, சேமியா போண்டா, மொரு மொரு வடை, கார போளி, சாம்பார் வடை, இட்லி மாவு போண்டா, இடியாப்பம், ரவா இட்ல, மசாலா இட்லி , பஞ்சாபி பட்டூரா, சத்தான வரகரிசி இட்லி, பொடி இட்லி, பூரி.

 

 

இட்லி மிளகாய் பொடி செய்ய தேவையான பொருட்கள் 

  • கருவேப்பிலை – ¼  கப்
  • காய்ந்த மிளகாய் – 20
  • உளுத்தம் பருப்பு – ¼ கப்
  • வெள்ளை எள் – ¼ கப்
  • கடலை பருப்பு – ¼ கப்
  • மிளகு – 3  தேக்கரண்டி
  • சீரகம் – 2  தேக்கரண்டி 
  • கல்லுப்பு – ½  தேக்கரண்டி

செய்முறை

1. இட்லி மிளகாய் பொடி செய்வதற்கு ஒரு அடி கனமான கடாயில் ¼ கப் கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்,  மிதமான தீயில் வைத்து வறுத்துக்கொள்ளவும்,  கறிவேப்பிலை நன்கு வறுபட்டதும் தனியே எடுத்து வைக்கவும்.

2.  அதே கடாயில் 20 காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்,  குறைவான தீயில் வைத்து வரும் வரை வறுத்துக் கொள்ளவும்,  பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

3. கடாயில் ¼ கப் குண்டு உளுத்தம் பருப்பு சேர்த்துக் கொள்ளவும்,  மிதமான தீயில் வைத்து லேசான பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்,  பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

4. இப்பொழுது ¼ கப் வெள்ளை எள் சேர்த்துக் கொள்ளவும்,  மிதமான தீயில் வைத்து கொள்ளவும், எள்  நன்றாக பொரிந்து வாசனை வந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.

5. அதே கடாயில் ¼ கப் கடலை பருப்பு சேர்த்துக் கொள்ளவும், மிதமான தீயில் வைத்து நிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்,  பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

6. இப்பொழுது  3 தேக்கரண்டி மிளகு சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் 2 தேக்கரண்டி சீரகம் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.  பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

7.  வறுத்து வைத்துள்ள வற்றை ஒரு காற்றோட்டமான இடத்தில் வைத்து நன்றாக ஆறவிடவும்.

 8. ஆறிய பின்னர் ஒரு சுத்தமான மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.

9. அதனுடன் ½  தேக்கரண்டி கல் உப்பு சேர்த்துக் கொள்ளவும்,  அதனை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

10. ஆறவிட்டு டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்,  சுவையான இட்லி மிளகாய் பொடி தயார். 

Leave a Reply