Soya chunks cutlet in Tamil | சோயா கட்லட் | Mealmaker cutlet in Tamil | Cutlet recipe

See this Recipe in English

சோயா கட்லட் மீல் மேக்கர்,  உருளைக்கிழங்கு ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான மாலை நேர சிற்றுண்டி வகை.  இதனை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுத்தால் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் விரும்பி உண்பார்கள். 

சுவையான சோயா கட்லெட் செய்ய சில குறிப்புகள்

  • மீல் மேக்கர் மற்றும் உருளைக்கிழங்குடன் நீங்கள் விருப்பப்பட்ட மற்ற காய்கறிகளின் சேர்த்துக் கொள்ளலாம் ( கேரட்,  பீட்ரூட்,  பட்டாணி).
  • மீல்மேக்கரை வேக வைத்த பின்னர் மிக்சி ஜாரில் சேர்க்கும்போது தண்ணீரை நன்றாகப் பிழிந்து விட்டு சேர்க்கவும்.
  • மீல்மேக்கரை நைசாக அரைக்க வேண்டாம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • கட்லெட்டை தோசை கல்லில் இட்டு சிறிதளவு எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுக்கலாம்   அல்லது எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்.
  • வழக்கமான கட்லெட் போல் ரவுண்டாக இல்லாமல் இதனை சதுர வடிவமாக, செவ்வகமாக, இதய வடிவம் என விதவிதமாக செய்தால் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.

 

 

See this Recipe in English

சோயா கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்

  • சோயா/ மீல் மேக்கர் – 1  கப் – 50g
  • உருளைக்கிழங்கு –  2 ( வேக வைத்தது)
  • பெரிய வெங்காயம் – 1
  • கேரட் – 1
  • சமையல் எண்ணெய் – 2  தேக்கரண்டி +  பொரிக்க தேவையான அளவு
  • இஞ்சி பூண்டு விழுது – 1  தேக்கரண்டி
  • உப்பு –  தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – ¼  தேக்கரண்டி
  • மல்லித்தூள் – ½  தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் –  1 தேக்கரண்டி
  • கரம் மசாலா –  கால் தேக்கரண்டி
  • கொத்தமல்லி  தழை – சிறிதளவு
  • மைதா மாவு –  இரண்டு தேக்கரண்டி
  • பிரெட் கிரம் –  தேவையான அளவு

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் 2  கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்.

 2. அதனுடன் 1 கப் மீல்மேக்கர்  சேர்த்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

3. 10  நிமிடங்களுக்கு அந்த சூட்டிலேயே மீல்மேக்கரை வேகவிடவும்.

4. 10 நிமிடங்களுக்குப் பின்னர் தண்ணீரை நன்றாகப் பிழிந்து விட்டு மீல்மேக்கரை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.

5. அதனை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

 6. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

7. எண்ணெய் சூடானதும் 1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

8. வெங்காயம் ஓரளவு வதங்கிய பின்னர் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.

9. இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போன பின்னர்,  தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.  மேலும் ¼  தேக்கரண்டி மஞ்சள் தூள், ½ தேக்கரண்டி மல்லித்தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

10. மிளகாய் தூளின் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.

11. பின்னர் ஒரு கேரட்டை துருவி சேர்த்துக் கொள்ளவும்.

12. கேரட் வெந்த பின்னர் அரைத்து வைத்துள்ள மீல்மேக்கரை சேர்த்து கிளறவும்.

13. பின்னர் 2 (வேக வைத்த) உருளை கிழங்குகளை நன்றாக மசித்து சேர்த்துக் கொள்ளவும்.

14. உருளைக்கிழங்கு மசாலாவுடன் நன்கு கலந்து பின்னர் சிறிதளவு கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.

15. தயார் செய்து வைத்துள்ள கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி விருப்பப்பட்ட அளவில்  தட்டிக் கொள்ளவும்.

16. பின்னர் 2 தேக்கரண்டி மைதா மாவில்  தண்ணீர் கலந்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

17. தயார் செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை மைதா மாவில் முக்கி பின்னர் சிறிதளவு பிரெட் கிரம்சில் நன்றாக பிரட்டி எடுக்கவும். 

18. கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக சேர்த்து மிதமான தீயில் வைத்து பொரிக்கவும்.

 19. இரண்டு பக்கங்களும் பொன்னிறமானதும் எண்ணெய் வடித்து எடுக்கவும்.

20.  சுவையான  சோயா கட்லட் தயார்,  இதனை சில்லி சாஸ் கெட்சப் மற்றும் புதினா சட்னியுடன் பரிமாறலாம். 

Leave a Reply