Masala Idli recipe in Tamil | மசாலா இட்லி | Masala Idli | Idli masala | Easy masala idli | Leftover idli recipe

See this Recipe in English

மசாலா இட்லி இந்தியாவின் பிரபலமான, ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. இட்லி காலை மற்றும் இரவு நேரங்களில் உணவாக பரிமாறப்படுகிறது. இட்லி உடன் சட்னி, சாம்பார், போன்றவை மிகவும் சுவையாக இருக்கும். இது சாதாரண கடைகள் முதல் விலை உயர்ந்த உணவகங்கள் வரை எல்லா இடங்களிலும் எல்லா வகையான மனிதர்களாலும் சாப்பிடக்கூடிய ஒரு பிரபலமான உணவு. இட்லி தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மற்றும் வட இந்தியாவிலும் நிறைந்துள்ளது.

இட்லி நாம் பல விதமாக செய்யலாம் 1 பங்கு வெள்ளை உளுத்தம்பருப்புக்கு 4 பங்கு அரிசி சேர்த்து அதனுடன் 1 தேக்கரண்டி வெந்தயம் மற்றும் 1/2 பங்கு அவல் ஆகியவற்றை சேர்த்து ஊறவைத்து மென்மையாக அரைத்து 8 மணி நேரம் புளிக்க வைத்து பயன்படுத்தலாம் அல்லது 1 பங்கு வெள்ளை உளுத்தம் பருப்புடன் 2 பங்கு இட்லி ரவா எடுத்துக்கொள்ளவும், உளுத்தம்பருப்பை நன்கு ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும் இட்லி ரவா ஊற வைத்து பிழிந்து கலந்து கொள்ளவும், இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 8 மணி நேரம் புளிக்க வைத்து பயன்படுத்தவும்.

மசாலா இட்லி, மீதமான இட்லி அல்லது ஆரிய இட்லியுடன் வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா, ஆகியவற்றை கொண்டு செய்யப்படும். மசாலாவுடன் கலந்து பரிமாறப்படுகிறது இவ்வாறு செய்யும் பொழுது இட்லியின் சுவை கூடும் அதே சமயத்தில் இட்லி உப்புமா போன்று செய்யாமல் புதுமையாக மசாலா இட்லி அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.

சுவையான மசாலா இட்லி செய்ய சில குறிப்புகள்

  • மசாலா இட்லி செய்ய சாதாரண இட்லி பயன்படுத்தலாம் அல்லது குட்டி இட்லிகள் பயன்படுத்தலாம், சாதாரண இட்லிகளை நான்காக வெட்டி பயன்படுத்திக் கொள்ளவும்.
  • இட்லியை மசாலாவில் சேர்ப்பதற்கு முன்பு அதனை எண்ணெயில் பொரித்து அல்லது லேசாக வறுத்து சேர்த்துக் கொள்ளலாம்.
  • இஞ்சி பூண்டு விழுது  விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது இஞ்சி பூண்டு விழுது சேர்க்காமலும் செய்யலாம்
  • மசாலா செய்யும்பொழுது பச்சை மிளகாய் மற்றும் புதினாவை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளலாம் இது மசாலாவின் சுவையை மேலும் கூட்டும்.

இதர வகைகள் – பாசிப்பருப்பு இட்லி, ரவா இட்லி , சில்லி இட்லி, பொடி இட்லி, ஓட்ஸ் இட்லி, இட்லி மாவு போண்டா.

இதர சட்னிவகைகள் – வேர்க்கடலை சட்னி, பூண்டு இட்லி பொடி,  இட்லி மிளகாய் பொடி, வெங்காய சட்னி, கமகமக்கும் புதினா சட்னி, பீர்க்கங்காய் துவையல், ஹோட்டல் சுவையில் தேங்காய் சட்னி, இஞ்சி சட்னி, புதினா சட்னி, பூண்டு தக்காளி தொக்கு , தக்காளி சட்னி , பருப்பு துவையல், தக்காளி குருமா.

 

See this Recipe in English

மசாலா இட்லி செய்ய தேவையான பொருட்கள்

  • 5 இட்லி அல்லது 20 குட்டி இட்லி
  • 2 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி கை அளவு
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/4 தேக்கரண்டி கரம் மசாலா
  • 2 தக்காளி
  • தேவையான அளவு உப்பு

செய்முறை

1. ஒரு கடாயில்  2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.

2. எண்ணெய் சூடானதும் பொடியாக 1 நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் மென்மையாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.

3. அதனுடன் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

4. அதனுடன்  அதனுடன் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/4 தேக்கரண்டி கரம் மசாலா, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

5. பின்னர் 2 தக்காளி பழங்களை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்து  சேர்த்துக் கொள்ளவும்.

6. நன்கு கலந்த பின்னர் சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும் அல்லது எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவைக்கவும்.

7. பின்னர் ஆரிய இட்லி துண்டுகளை அல்லது குட்டி இட்லிகளை சேர்த்து  உடைந்து விடாமல் மென்மையாக கிளறவும்.

8. மீண்டும் மூடி வைத்து 5-6 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வேக வைக்கவும்.

9. இப்பொழுது சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடவும்.

10. தயிர் பச்சடி அல்லது வெள்ளரிக்காய் பச்சடியுடன் பரிமாறவும் சுவையான மசாலா இட்லி தயார்.

Leave a Reply