Tomato Thokku in Tamil | பூண்டு தக்காளி தொக்கு | Garlic tomato chutney recipe

பூண்டு தக்காளி தொக்கு இட்லி, தோசை, மட்டுமல்லாது சாதம், சப்பாத்தி, பூரி, தயிர் சாதம், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும். இது பூண்டு மற்றும் தக்காளியை கொண்டு செய்யப்படும் ஆந்திரா ஸ்பெஷல்  தொக்கு.  இதனை ஊறுகாய்  போன்று பயன்படுத்தலாம் அல்லது தொக்கு / சட்னி போன்றும் பயன்படுத்தலாம்.  பருப்பு பொடி போன்று இதனை சூடான சாதத்தில் போட்டு அதனுடன் சிறிதளவு நெய் கலந்து பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

 சுவையான பூண்டு தக்காளி தொக்கு செய்ய சில குறிப்புகள்

  • பூண்டு தக்காளி தொக்கு செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்தினால் சுவை அபாரமாக இருக்கும்.
  • 50 கிராம் பூண்டிற்கு 300 கிராம் அளவில் தக்காளி சேர்க்க வேண்டும்.
  • இதற்கு புளிப்பான நாட்டுத் தக்காளி பயன்படுத்தலாம் அல்லது புளிப்பில்லாத தக்காளி பயன்படுத்தலாம்.
  • புளிப்பில்லாத தக்காளி பயன்படுத்தினால் அதற்கு ஏற்றார் போல்  புளி சேர்த்து கொள்ளவும்.
  • இதனை சுத்தமான கண்ணாடி டப்பாவில் அடைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். ஃப்ரிட்ஜில் வைத்தால் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு நன்றாக இருக்கும்.
  • தொக்கு செய்வதற்கு நான்  2  தேக்கரண்டி கலந்த மிளகாய் தூள் பயன்படுத்தியுள்ளேன், வெறும் மிளகாய்த்தூள் பயன்படுத்துவதாக இருந்தால் 1.5 தேக்கரண்டி பயன்படுத்திக் கொள்ளவும். 

 பூண்டு தக்காளி தொக்கு செய்ய தேவையான பொருட்கள்

  • கடுகு –  1 தேக்கரண்டி
  • வெந்தயம் –  ½  தேக்கரண்டி
  • பூண்டு –  60 கிராம்
  • தக்காளி –  300 கிராம்
  • புளி – சிறிய நெல்லிக்காய் அளவு 
  • நல்லெண்ணெய் – 7  தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் – 2 
  • உப்பு –  தேவையான அளவு
  • மஞ்சள் தூள் –  ¼  தேக்கரண்டி
  • மிளகாய் தூள் –  2 தேக்கரண்டி

செய்முறை

  • ஒரு வானலியில் ½  தேக்கரண்டி கடுகு மற்றும் ½  தேக்கரண்டி வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும்.
  • கடுகு வெடித்து வெந்தயம் ஓரளவு  சிவந்த பின்னர் அதனை மிக்ஸி ஜாரில் மாற்றிக் கொள்ளவும்.
  • இதனை நைஸாக பொடித்துக் கொள்ளவும்.
  • ஒரு பேனில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் 50 கிராம்  தோல் நீக்கிய பூண்டு சேர்த்துக் கொள்ளவும்.
  • பூண்டு நன்றாக வதங்கிய பின்னர் 300 கிராம் தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
  • தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி கொள்ளவும்.
  • அதனுடன் 1 நெல்லிக்காய் அளவு புளியை கொட்டை மற்றும் நார் நீக்கி விட்டு சேர்த்துக் கொள்ளவும்.
  • ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து ஆற விடவும்.  ஆறிய பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் 6 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  • அதனுடன் 1/2 தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரிந்தவுடன் 10 பல் பூண்டு மற்றும் 2 காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் அரைத்து வைத்துள்ள பூண்டு தக்காளி விழுதை சேர்த்துக் கொள்ளவும்.
  • அதனுடன் இந்தத் தொக்கு செய்வதற்கு தேவையான அளவு உப்பு, ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், மற்றும் 2 தேக்கரண்டி கலந்த மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
  • குறைவான தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்.  அவ்வப்போது கிளறி விடவும்.
  • ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும்வரை வேக வைத்த பின்னர் தயார் செய்து வைத்துள்ள கடுகு வெந்தயப் பொடியை சேர்க்கவும்.
  • ஒரு முறை கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
  • சுவையான பூண்டு தக்காளி தொக்கு தயார். 

செய்முறை

1. ஒரு வானலியில் ½  தேக்கரண்டி கடுகு மற்றும் ½  தேக்கரண்டி வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும்.

2. கடுகு வெடித்து வெந்தயம் ஓரளவு  சிவந்த பின்னர் அதனை மிக்ஸி ஜாரில் மாற்றிக் கொள்ளவும்.

3. இதனை நைஸாக பொடித்துக் கொள்ளவும்.

4. ஒரு பேனில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் 50 கிராம்  தோல் நீக்கிய பூண்டு சேர்த்துக் கொள்ளவும்.

5. பூண்டு நன்றாக வதங்கிய பின்னர் 300 கிராம் தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

6. தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி கொள்ளவும். அதனுடன் 1 நெல்லிக்காய் அளவு புளியை கொட்டை மற்றும் நார் நீக்கி விட்டு சேர்த்துக் கொள்ளவும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து ஆற விடவும்.  ஆறிய பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

7. ஒரு வாணலியில் 6 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

8. அதனுடன் 1/2 தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரிந்தவுடன் 10 பல் பூண்டு மற்றும் 2 காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

9. பின்னர் அரைத்து வைத்துள்ள பூண்டு தக்காளி விழுதை சேர்த்துக் கொள்ளவும்.

10. அதனுடன் இந்தத் தொக்கு செய்வதற்கு தேவையான அளவு உப்பு, ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், மற்றும் 2 தேக்கரண்டி கலந்த மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

11. குறைவான தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்.  அவ்வப்போது கிளறி விடவும்.

12. ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும்வரை வேக வைத்த பின்னர் தயார் செய்து வைத்துள்ள கடுகு வெந்தயப் பொடியை சேர்க்கவும். ஒரு முறை கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

13. சுவையான பூண்டு தக்காளி தொக்கு தயார். 

 

Leave a Reply