வெஜிடபிள் பிரியாணி காய்கறி பிரியர்களுக்கான மிகச்சிறந்த உணவு வகை. பொதுவாக பிரியாணி என்பது இறைச்சி கொண்டு தயாரிக்கப்படுவதாகும். ஆனால் சமீப காலங்களில் காய்கறி பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டதே வெஜிடபிள் பிரியாணி. இது பல வகையான காய்கறிகள் அரிசி மற்றும் மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பிரஷர்குக்கரில் இதனை எளிய முறையில் செய்யலாம்.
சுவையான பிரியாணி செய்ய சில குறிப்புகள்
- சரியான அரிசியைத் தேர்ந்தெடுங்கள். நீண்ட தானிய பாஸ்மதி அரிசியை பிரியாணி செய்ய பயன்படுத்த வேண்டும்.
- பாசுமதி அரிசியின் தரத்தைப் பொறுத்து தண்ணீரின் அளவு மாறுபடும்.
- நெய்யில் முந்திரி மற்றும் ரொட்டி துண்டுகளை வறுத்து பிரியாணியின் மேல் சேர்த்துக்கொள்ளலாம்.
- உங்களுக்கு விருப்பமான காய்கறிகளைச் சேர்க்கலாம்.
- தண்ணீருக்கு பதிலாக தேங்காய்ப்பாலில் சமைக்கலாம். 1.5 கப் தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக, 3/4 கப் தண்ணீரும், 3/4 கப் தேங்காய் பல் சேர்த்துக்கொள்ளலாம்.
- சுவையான பிரியாணி செய்ய நெய் | எண்ணெய் தாராளமாக சேர்க்கவும்.
இதர பிரியாணி வகைகள்
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி
சிக்கன் பிரியாணி
ஐதராபாத் முட்டை பிரியாணி
வெஜிடபிள் பிரியாணி காய்கறி பிரியர்களுக்கான மிகச்சிறந்த உணவு வகை. பொதுவாக பிரியாணி என்பது இறைச்சி கொண்டு தயாரிக்கப்படுவதாகும். ஆனால் சமீப காலங்களில் காய்கறி பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டதே வெஜிடபிள் பிரியாணி. இது பல வகையான காய்கறிகள், அரிசி மற்றும் மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பிரஷர்குக்கரில் இதனை எளிய முறையில் செய்யலாம்.
- 2 தேக்கரண்டி நெய்
- 1 பிரிஞ்சி இலை
- 3 ஏலக்காய்
- 1 துண்டு பட்டை
- 4 லவங்கம்
- 1 மராத்தி மொக்கு
- 1 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
- உப்பு தேவையான அளவு
- 1 தேக்கரண்டி மல்லித்தூள்
- 1 உருளைக்கிழங்கு
- 2 கேரட்
- 5 பீன்ஸ்
- 1 கப் பாஸ்மதி அரிசி
- 3 பச்சை மிளகாய்
- 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 2 தேக்கரண்டி எண்ணெய்
- 1/4 கப் பச்சை பட்டாணி
- கொத்தமல்லி இலைகள் ஒரு கையளவு
- புதினா இலைகள் சில
- 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் (உங்கள் விருப்பம் )
-
பாஸ்மதி அரிசியை கழுவி 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின்னர் வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.
-
பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
-
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, மற்றும் தக்காளி ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
-
பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய், மற்றும் மராத்தி மொக்கு சேர்த்து தாளிக்கவும்.
-
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
-
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
-
நறுக்கி வைத்த கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள் மற்றும் கீறி வைத்த பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
-
பொடியாக நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.
-
மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
-
கால் கப் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
-
இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்த கேரட், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, மற்றும் பீன்ஸ் சேர்த்து கலக்கவும்.
-
பின்னர் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கலக்கவும்.
-
ஒரு கப் பாசுமதி அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பிரஷர் குக்கரை மூடுவதற்கு முன்பு 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்/நெய் சேர்க்கலாம்.
-
பிரஷர் குக்கரை மூடி 2 சத்தம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பிரஷர் ரிலீசாகும் வரை காத்திருக்கவும், சுவையான வெஜிடபிள் பிரியாணி தயார்.
செய்முறை
1. பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய், மற்றும் மராத்தி மொக்கு சேர்த்து தாளிக்கவும்.
2. நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
4. நறுக்கி வைத்த கொத்தமல்லி இலைகள் புதினா இலைகள் மற்றும் கீறி வைத்த பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
5. பொடியாக நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. மிளகாய் தூள் கொத்தமல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
7. கால் கப் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
8. இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்த கேரட் உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி மற்றும் பீன்ஸ் சேர்த்து கலக்கவும்.
9. பின்னர் ஊறவைத்து வடித்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கலக்கவும்.
10. ஒரு கப் பாசுமதி அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பிரஷர் குக்கரை மூடுவதற்கு முன்பு 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்/நெய் சேர்க்கலாம்.
11. பிரஷர் குக்கரை மூடி 2 சத்தம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பிரஷர் ரிலீசாகும் வரை காத்திருக்கவும், தற்பொழுது சுவையான வெஜிடபிள் பிரியாணி தயார்.
Simple and easy for beginners