Ginger Garlic Paste in Tamil | இஞ்சி பூண்டு விழுது | How to make ginger garlic paste

இஞ்சி பூண்டு விழுது பிரியாணி,  புலாவ்,  குருமா வகைகள்,  போன்ற பலவிதமான உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. இது சாப்பாட்டிற்கு சுவையுடன், செரிமானம் ஆகுவதற்கும் உதவுகிறது. இஞ்சி பூண்டு விழுது கடைகளில் விதவிதமான பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. ஆனால், அவற்றை விட வீட்டிலேயே அரைத்து பயன்படுத்தும் பொழுது சுத்தமாக இருக்கும் இதனை பல மாதங்கள் கெட்டுப் போகாமல் தாராளமாக பயன்படுத்தலாம்.

இஞ்சி பூண்டு விழுது சில குறிப்புகள்

  • இஞ்சி பூண்டு விழுது அரைக்கும் பொழுது  இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை சமமாக எடுத்துக் கொண்டு பயன்படுத்தலாம் அல்லது பூண்டு சற்று கூடுதலாகவும் இஞ்சி சற்று குறைவாகும் சேர்த்து பயன்படுத்தும் பொழுது கூடுதல் சுவையுடனும் மணத்துடனும் இருக்கும். 
  • இஞ்சி பூண்டு விழுது அரைப்பதற்கு 15 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும். அதனை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் தாராளமாக சில வாரங்கள் அல்லது ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் கூட பயன்படுத்தலாம். 
  • கெட்டுப் போகாமல் இருக்க அதில் வினிகர் சேர்த்து அரைக்கலாம். வினிகர் சேர்த்து அரைக்கும் பொழுது சமையல் செய்தால் லேசான வினிகர் வாசனை வரும் ஆனால் அதனை வதக்கும் பொழுது அது மறைந்துவிடும்.
  • உப்பு சேர்த்து அரைக்கலாம் அல்லது மஞ்சள் தூள் சேர்த்து அரைக்கலாம். இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து அரைத்தாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.
  • அது தவிர இஞ்சி, பூண்டு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்த பின்னர் பாட்டிலில் போட்டு அதன் மீது சிறிதளவு எண்ணெய் ஊற்றி மூடி வைத்தாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.
  • எதுவுமே சேர்க்காமல் வெறும் இஞ்சி பூண்டு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்தாலும் கெடாமல் இருக்கும். 
  • இந்த செய்முறையில் உப்பு சேர்த்து அரைத்துள்ளேன். 
  • இஞ்சி பூண்டு விழுது அரைக்கும் பொழுது வெள்ளை நிறமாக இருந்தாலும் சிறிது நாட்களுக்கு பின்னர் அது பச்சை நிறமாகமாற வாய்ப்புள்ளது 
  • நிறமாற்றம் என்பது நாம் பயன்படுத்தும் பூண்டின் அமிலத்தன்மை காற்றில் கலக்கும் பொழுது ஏற்படுகிறது.  வினிகர் அல்லது உப்பு சேர்த்து அரைக்கும் போது நிறம் மாறும். எனவே பச்சை அல்லது நீல நிறமாக மாறுவது முற்றிலும் இயல்பானது மற்றும் சாப்பிட பாதுகாப்பானது.

 காளான் பிரியாணி

தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி

ஐதராபாத் முட்டை பிரியாணி

சிக்கன் பிரியாணி

வெஜிடபிள் பிரியாணி

முட்டை மசாலா

செட்டிநாடு சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்

  • பூண்டு – 300 g
  • இஞ்சி – 250 g
  • உப்பு – 2  தேக்கரண்டி

 செய்முறை

1. இஞ்சி பூண்டு விழுது அரைப்பதற்கு இஞ்சியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்,  பூண்டையும் தோல் நீக்கிய பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். காம்பை பயன்படுத்த வேண்டாம். 

2. ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

3. அதனுடன் 2 தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

4. பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஓரளவிற்கு அரைத்துக் கொள்ளவும்.

5. மீண்டும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

6. சுத்தமான பாட்டிலில் வைத்துக் கொள்ளவும் இதனை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தவும்.

Leave a Reply