Wheat Gulab Jamun | கோதுமை குலாப் ஜாமுன் | Gulab Jamun recipe in Tamil

See this Recipe in English

கோதுமை குலாப் ஜாமுன் பொதுவாக குலோப்ஜாமுன், பால் பவுடர், மைதா மாவு, அல்லது கடைகளில் கிடைக்கும் குலோப் ஜாமுன் மிக்ஸ் கொண்டு செய்யப்படுகிறது, ஆனால் நாம் வீட்டில் எப்போதும் இருக்கும் சப்பாத்திக்கு பயன்படுத்தக்கூடிய கோதுமை மாவைப் பயன்படுத்தி ஜாமுன் செய்யலாம். சுவை குலோப்ஜாமுன் போன்றே இருக்கும் மிகவும் சுவையாகவும் செய்யலாம்.

கோதுமை குலோப்ஜாமுன் செய்ய சில குறிப்புகள்

  • சப்பாத்திக்கு பயன்படுத்தக்கூடிய கோதுமை மாவை பயன்படுத்தலாம்,  இதில் மைதா சேர்க்கக்கூடாது கோதுமை மாவு மட்டும் பயன்படுத்தவும்.
  • சர்க்கரை பாகு செய்யும் பொழுது கம்பி பதம் பார்க்க தேவையில்லை,  ஆனால் ஓரளவுக்கு  திக்கான சர்க்கரைப்பாகு செய்து கொள்ளவும்.
  • ஜாமுன் சர்க்கரை பாகில் ஊற வைக்கும் பொழுது 6 முதல் 8 மணி நேரம் ஊற வைக்கவும் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கலாம்.
  • சர்க்கரை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் கூடவோ அல்லது குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம்.
  • ஜாமுன் பொரிக்கும் போது மிதமான தீயில் வைத்து பொரிக்கவும் அல்லது  கரிந்துவிடும் வாய்ப்புள்ளது.
  • கட்டாயம் இரண்டு தேக்கரண்டி பால் பவுடர் சேர்த்துக் கொள்ளவும் அப்பொழுது ஜாமுன் மிகவும் மென்மையாக இருக்கும்.
  • சர்க்கரை பாகில் ஆரஞ்சு நிறம் சேர்த்துள்ளேன்,  நீங்கள் விருப்பப்பட்டால் நிறம் சேர்க்கலாம் அல்லது ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளலாம். 

இதர வட இந்திய இனிப்பு வகைகள் – பால் பவுடர் குலாப் ஜாமுன், மோத்திசூர் லட்டு, கேரட் அல்வா ,  ஹல்கோவா, குல்பி, கேரட் மில்க் ஷேக், கோதுமைரவை கேசரி, பிரட் குலாப் ஜாமுன், கோதுமை ரவை கேசரி, கோதுமை அல்வா, இனிப்பு காஜா, ரோஸ் ரசகுல்லா, ரசமலாய், பெங்காலி ஸ்வீட் புடிங், கோதுமை குலாப் ஜாமுன், பாதாம் அல்வா, பலுடா, பாதாம் பால்.

 

 

See this Recipe in English

கோதுமை குலாப் ஜாமுன் செய்ய தேவையான பொருட்கள் 

  • 1 கப் கோதுமை மாவு
  • 6 தேக்கரண்டி நெய் 
  • 4 ஸ்பூன் பால் பவுடர்
  • 1/4 கப் பால் 
  • 1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா
  • 1 கப் சர்க்கரை 
  • 3 ஏலக்காய்
  • 1 சிட்டிகை ஆரஞ்ச் கலர் 
  • பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

செய்முறை

1. ஒரு கடாயில்  இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும்,  அதனுடன் ஒரு கப் கோதுமை மாவு சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.

2. மீண்டும் இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும் அல்லது கோதுமை மாவின் பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும்.

3. நன்கு வறுத்த பின்னர், ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற வைக்கவும்.

4. கோதுமை மாவு ஆறிய பின்னர் 4 தேக்கரண்டி பால் பவுடர்,  அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா. 

5. 2 தேக்கரண்டி நெய், 1/4 கப் பால் சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ளவும்.

 6. பிசைந்த பின்னர்,  10 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.

7. பத்து நிமிடங்களுக்குப் பின்னர் மாவை சிறு சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ளவும்.

8. ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்,  தயாராக உள்ள மாவு உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.

9. மிதமான சூட்டில் இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும்.

 10. பொன்னிறமானதும் எண்ணெய் வடித்து தனியே வைக்கவும்.

 11. இப்பொழுது மற்றொரு பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

12. அதனுடன் அரை கப் அல்லது சர்க்கரை முழுகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

13. சர்க்கரைப்பாகு  ஓரளவு திக்கானதும்,  மூன்று ஏலக்காயைத் தட்டி சேர்த்துக்கொள்ளவும்.

 14. ஒரு சிட்டிகை ஆரஞ்சு கலர் 2 தேக்கரண்டி தண்ணீரில் கரைத்து சேர்த்துக் கொள்ளவும்.

15. இப்போது வறுத்து வைத்துள்ள ஜாமூன்களை சேர்த்துக் கொள்ளவும்.

16. நன்கு கலந்து 6 முதல் 8 மணி நேரம் ஊறவைக்கவும்.

17. ஊறிய பின்னர் பரிமாறவும் சுவையான கோதுமை மாவு குலோப் ஜாமுன் தயார்.

 

Leave a Reply