See this Recipe in English
பாதாம் பால் பவுடர் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த, இதனை தினமும் குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், எலும்பு வளர்ச்சிக்கு உகந்தது மற்றும் குழந்தைகள் சுறுசுறுப்பாகவும், மூளை திறனுடனும் செயல்படுவார்கள். கடைகளில் கிடைக்கும் பாதாம் மிக்ஸ் களைக் காட்டிலும் சுலபமான முறையில் சுத்தமாக வீட்டிலேயே இதனை செய்து வைத்துக்கொண்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். குறிப்பாக குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் சுறுசுறுப்பு ஏற்றது.
சுவையான பாதாம் பால் பவுடர் செய்ய குறிப்புகள்
- பாதாம் மற்றும் பிஸ்தா உடன் விருப்பப்பட்டால் முந்திரிப்பருப்பு சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.
- பிஸ்தா பருப்புக்கு பதிலாக முந்திரி பருப்பு சேர்த்தும் செய்யலாம்.
- குங்குமப்பூ உங்கள் விருப்பத்திற்கு உட்பட்டது, சேர்க்காமலும் பாதாம் பால் பவுடர் செய்யலாம்.
- சர்க்கரை உங்கள் விருப்பத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.
- பாதாம், பிஸ்தாவை வறுத்த பின்னர் நன்றாக ஆறவிட்டு பின்னர் மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.
- காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்தால் 2 – 3 மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
- பாதாம் பால் பவுடரை வெதுவெதுப்பான பாலில் கலந்து குடிக்கலாம் அல்லது ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று குடிக்கலாம்.
See this Recipe in English
பாதாம் பால் பவுடர் செய்ய தேவையான பொருட்கள்
- பாதாம் – 1 கப் (150g)
- பிஸ்தா – ¼ கப் (30g)
- ஏலக்காய் – 1 தேக்கரண்டி
- சர்க்கரை – 1 கப் (200g)
- மஞ்சள் தூள்- ¼ தேக்கரண்டி
- குங்குமப்பூ – 1 சிட்டிகை
செய்முறை
1. ஒரு பேனில் 1 கப் பாதாம் பருப்பு சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும்.
2. பின்னர் 1/4 கப் பிஸ்தா பருப்பு மற்றும் 1 தேக்கரண்டி ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும்.
3. மிதமான தீயில் வைத்து லேசாக நிறம் மாறி, நல்ல மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
4. வறுத்த பின்னர் ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.
5. ஒரு மிக்ஸி ஜாரில் 1 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
6. அதனுடன் 1/4 tsp மஞ்சள் தூள் மற்றும் 1 சிட்டிகை குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளவும்.
7. அதனை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
8. பின்னர் ஆற வைத்துள்ள பாதாம், பிஸ்தா, மற்றும் ஏலக்காயை சேர்த்து கொள்ளவும்.
9. அதனை லேசான கொரகொரப்பாக அரைக்கவும்.
10. காற்றுப்புகாத டப்பாவில் வைக்க இரண்டு மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
11. சூடான பால் அல்லது வெதுவெதுப்பான பாலில் 1.5 – 2 தேக்கரண்டி வரை பாதாம் பால் பவுடர் சேர்த்து சூடாக குடிக்க லாம் ( தேவைப்பட்டால் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்) அல்லது ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று குடிக்கலாம்.
12. சுவையான பாதாம் பால் தயார்.