Carrot and Orange Detox Juice in Tamil | கேரட் ஆரஞ்சு ஜூஸ் | Detox drink for weight loss

கேரட் ஆரஞ்சு ஜூஸ் கேரட் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது. காலை நேரத்தில் வெறும் வயிற்றில் ஆரஞ்சு சாறு குடிப்பது, வயிறு மற்றும் செரிமான பாதையை சுத்தம் செய்கிறது. கல்லீரலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்குகிறது. கேரட் கண் பார்வைக்கும், தூய்மையான மற்றும் அழகான சருமத்திற்கு உதவுவதோடு, கேரட் ஆரஞ்சு இரண்டுமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  இந்த ஜூஸை தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம், தினம்தோறும் காலையில் குடிப்பதால் நச்சுத்தன்மை வெளியேறி வயிறு மற்றும் உடல் ஆரோக்கியமாக விளங்கும்.

சுவையான கேரட் ஆரஞ்சு ஜூஸ் செய்ய சில குறிப்புகள்

  • இந்த ஜூஸை அப்படியே குடிக்கலாம் அல்லது வடிகட்டியும் குடிக்கலாம்.
  • உங்கள் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்ப்பதுடன், விருப்பப்பட்டால் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து செய்யலாம்.
  • இனிப்பு சுவையுடன் குடிக்க விரும்பினால் சிறிதளவு தேன் கலந்து கொள்ளலாம்.
  • சிறிதளவு புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து அரைத்தால் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

இதர வகைகள்

கேரட் மில்க் ஷேக்

தர்பூசணி ஜூஸ்

பழ சர்பத்

ரோஸ் மில்க்

 கேரட் மில்க் ஷேக்

பாதாம் பால்

 

 

 தேவையான பொருட்கள்

  • ஆரஞ்சு பழம் – 3 – 450g
  • கேரட் – 2 – 120g
  • இஞ்சி – 1  சிறிய துண்டு
  • எலுமிச்சை பழம் – ½ 
  • உப்பு –  சுவைக்கு ஏற்ப

செய்முறை

1. ஆரஞ்சு பழத்தை தோல் நீக்கி,  சுலைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை தோல் சீவி,  காம்பு மற்றும் நுனி பகுதிகளை நறுக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

2. ஒரு மிக்ஸி ஜாரில் கேரட் மற்றும் ஆரஞ்சு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

 3. அதனுடன் ஒரு சிறிய துண்டு இஞ்சி தோல் நீக்கி சேர்த்துக் கொள்ளவும்.

4. பாதி எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து கொள்ளவும்.

5. சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

 6. அதனுடன் ஒன்று முதல் ஒன்றரை கப் வரை தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

7. அதனை வடிகட்டி ஒரு ஸ்பூன்  வைத்து முற்றிலுமாக பிழிந்து கொள்ளவும்.

8. விருப்பப்பட்டால் மீண்டும் ஒருமுறை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டிக் கொள்ளலாம்.

9. சுவையான கேரட் ஆரஞ்சு ஜூஸ் தயார்.

Leave a Reply