See this Recipe in English
சிக்கன் கிரேவி பிரியாணி, சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு மிகவும் சுலபமான முறையில் குறைந்த விலையில் செய்யலாம். சுவையான ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் கிரேவியை நீங்களும் சுலபமான முறையில் வீட்டில் செய்து சுவைத்து மகிழுங்கள்.
இதர வகைகள் – சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவி, செட்டிநாடு சிக்கன் குழம்பு, தலப்பாகட்டி பிரியாணி, இறால் தொக்கு, சிக்கன் வருவல், முட்டை மசாலா, முட்டை தம் பிரியாணி, சிக்கன் 65, முட்டை ஃப்ரைட் ரைஸ், சில்லி சிக்கன், முட்டை குழம்பு, முட்டை கொத்து பரோட்டா.
See this Recipe in English
சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்
- சிக்கன் – 500g
- சமையல் எண்ணெய் – 2 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் – 1
- தக்காளி – 1
- முந்திரிப் பருப்பு – 10
- காய்ந்த மிளகாய் – 4
- பூண்டு பற்கள் – 3
- இஞ்சி – 1 துண்டு
- கொத்தமல்லி தழை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
- மல்லித் தூள் – 1 மல்லித்தூள் தேக்கரண்டி
- கரம் மசாலா – ½ தேக்கரண்டி
செய்முறை
1. ஒரு கடாயில் 10 முந்திரி பருப்புகளை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.
2. அதனுடன் 4 காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
3. வறுத்த பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றிக் கொள்ளவும்.
4. அதனை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். 1 பழுத்த தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
5. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
6. எண்ணெய் சூடானதும் 1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
7. வெங்காயம் வதங்கிய பின்னர் 3 பூண்டு பற்கள் மற்றும் 1 துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும், அதனுடன் சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
8. பின்னர் தேவையான அளவு உப்பு, ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி மல்லித்தூள், ½ தேக்கரண்டி கரம் மசாலா, ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
9. சிறிதளவு தண்ணீர் தெளித்து வேக வைத்துக் கொள்ளவும்.
10. ½ கிலோ சிக்கனை சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ளவும்.
11. சிக்கன் மசாலா உடன் கலக்கும் படி நன்றாக கலந்து விடவும்.
12. அதனை மூடி வைத்து சிறிது நேரம் வேக வைக்கவும்.
13. சிக்கன் ஓரளவு வெந்த பின்னர் அரைத்து வைத்துள்ள முந்திரி விழுதை சேர்த்து கலக்கவும்.
14. பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 15 முதல் 20 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
15. நன்றாக வெந்த பின்னர் ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்த பின்னர் சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
16. சுவையான சிக்கன் கிரேவி தயார்.