Chicken Gravy in Tamil ஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி | சிக்கன் குழம்பு | Chicken Curry recipe | How to make Chicken Gravy

See this Recipe in English

சிக்கன் குழம்பு வெங்காயம், தக்காளி, மசாலா பொருட்கள், இஞ்சி பூண்டு விழுது, மற்றும் சிக்கன் துண்டுகள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது ரொட்டி, சப்பாத்தி, பரோட்டா, நான், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும். சிக்கன் குழம்பு பலவிதங்களில் செய்யப்படுகிறது. குறிப்பாக வட இந்திய மற்றும்  தென்னிந்திய சுவைகளில் மிகுந்த மாறுபாடு இருக்கும்.

காய்கறிகள், சிக்கன், மட்டன், போன்றவற்றில் பலவிதமான குழம்புவகைகள் செய்தாலும், சிக்கன் கிரேவி எனப்படும் சிக்கன் குழம்பு இந்தியா மட்டுமின்றி ஆசியா முழுவதும் மிகவும் பிரபலமானது. இந்த சிக்கன் குழம்பு மிகவும் விரைவாக செய்யகூடிய, மிகவும் சுலபமான உணவு வகை. பிரஷர் குக்கரில் செய்யும்பொழுது 30 நிமிடங்களுக்குள் செய்யக்கூடியது.

ஹோட்டல் சுவையில் சிக்கன் குழம்பு செய்வது மிகவும் சுலபமானது. இதற்கு தனியாக மசாலா பொருட்கள் அரைக்கத் தேவையில்லை. பொதுவாக ஹோட்டல்களில் ஒவ்வொரு முறையும் தனியாக மசாலா அரைத்து செய்யப்படுவதில்லை. ஒருசில குழம்பு வகைகளுக்கு மட்டுமே மாசாலா அரைக்கப்படும். அதுபோலவே தனிப்பட்ட எந்த மசாலாவும் அரைக்காமல் வீட்டில் இருக்கும் பொதுவான மசாலா பொருட்களை கொண்டு சுவையான சிக்கன் குழம்பு செய்யலாம்.

சுவையான சிக்கன் குழம்பு செய்ய சில குறிப்புகள்

  • சிக்கன் குழம்பு எலும்புடன் கூடிய சிக்கனை கொண்டு செய்யுங்கள், அப்போது குழம்பு சுவையாக இருக்கும்.
  • சிக்கன் குழம்பு செய்யும் பொழுது 1-2 உருளைக்கிழங்குகளை தோலுரித்து, நீளவாக்கில் வெட்டி, சேர்த்துக் கொள்ளலாம். இது குழம்பின் சுவையை கூட்டும்.
  • மேலும் சிக்கன் குழம்பை இறக்குவதற்கு  1-2 நிமிடங்களுக்கு முன்பு, 4 தேக்கரண்டி தேங்காய் 4 முந்திரிபருப்பு, 1/2 தேக்கரண்டி கசகசா, ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்து சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்தால் குழம்பு கெட்டியாகும் சுவையாகவும் இருக்கும்.
  • பச்சை மிளகாய், கொத்தமல்லி, ஆகியவற்றுடன்  ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்துக் கொண்டால் சிக்கன் குழம்பு மிகவும் மணமாக மற்றும் சுவை கூடுதலாக இருக்கும்.

இதர வகைகள் – சிக்கன் பிரியாணி,   சிக்கன் கிரேவி,  தலப்பாகட்டி பிரியாணிஇறால் தொக்கு, சிக்கன் வருவல்முட்டை மசாலா, முட்டை தம் பிரியாணி, சிக்கன் 65முட்டை ஃப்ரைட் ரைஸ், சில்லி சிக்கன், முட்டை குழம்பு,  முட்டை கொத்து பரோட்டா.

See this Recipe in English

தேவையான பொருட்கள்

ஊறவைக்க தேவையான பொருட்கள்

  • 750 கிராம் சிக்கன்
  • 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • தேவையான அளவு உப்பு

சிக்கன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

  •  2 தேக்கரண்டி எண்ணெய்
  •  3 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
  •  2 பெரிய தக்காளி
  •  1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  •  3 பச்சை மிளகாய்
  •  1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  •  2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  •  1 தேக்கரண்டி மல்லித்தூள்
  •  1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  •  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு
  •  உப்பு தேவையான அளவு

 செய்முறை

  1. ஒரு பாத்திரத்தில் 750 கிராம் சிக்கன் எடுத்துக்கொள்ளவும். அதில் தேவையான அளவு உப்பு, 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 2 தேக்கரண்டி மிளகாய் தூள், ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

  1. இப்போது அதனை 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். 

சிக்கன் குழம்பு செய்முறை

  1. ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். அதனுடன் 3 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

  1. வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும்.

  1. அதனுடன் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 3 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு ஆகியவற்றை சேர்க்கவும்.

  1. இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வேக வைக்கவும்.

5.இப்பொழுது தேவையான அளவு உப்பு, 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மல்லித்தூள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா, 2 தேக்கரண்டி மிளகாய் தூள், ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

  1. நன்கு கலந்த பின்னர் 2  தக்காளி பழத்தை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.

7.தக்காளி விழுது சேர்த்து நன்கு கலக்கவும்.

  1. மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும் அல்லது எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவைக்கவும்.

  1. மசாலா நன்கு வெந்த பின்னர் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து கலக்கவும்.

  1. மூடி வைத்து 20 முதல் 30 நிமிடங்களுக்கு வேக வைக்கவும் அல்லது பிரஷர் குக்கரில் 3 விசில் வைத்து வேக வைக்கவும்.

  1. சிக்கன் நன்கு வெந்த பின்னர் சிறிதளவு கொத்தமல்லி இலைகள் தூவி பரிமாறவும்.

12.சுவையான ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் குழம்பு தயார். 

Leave a Reply