See this Recipe in English
கொத்தமல்லி சட்னி வெங்காயம், தக்காளி, தேங்காய், கொத்தமல்லி, ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான சட்னி. இது இட்லி, தோசை, ஊத்தப்பம், பணியாரம், பொங்கல் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். மேலும் போண்டா, சமோசா ஆகியவற்றுடனும் சுவையாக இருக்கும்.
சுவையான கொத்தமல்லி சட்னி செய்ய சில குறிப்புகள்
- வரமிளகாய் சேர்க்கும்போது உங்கள் காரத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளவும், காரம் குறைவான மிளகாய் என்பதால் 10 மிளகாய் சேர்த்துள்ளேன். காரமான காரமான மிளகாய் என்றால் 3 – 4 மிளகாய் சேர்த்தால் போதுமானது.
- சின்ன வெங்காயம் சேர்ப்பதற்கு பதிலாக, ஒரு பெரிய வெங்காயம் சேர்த்தும் இதே முறையில் சட்னி செய்யலாம்.
- தாளிப்பதற்கு நல்லெண்ணெய் சேர்த்து கொள்ளவும், வதக்கும் போதும் நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
இதர வகைகள்
கத்திரிக்காய் சட்னி
ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி
வேர்க்கடலை சட்னி
இட்லி மிளகாய் பொடி
பூண்டு தக்காளி தொக்கு
தக்காளி சட்னி
See this Recipe in English
தேவையான பொருட்கள்
- நல்லெண்ணெய் | கடலை எண்ணெய் – 2 மேஜை கரண்டி
- உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
- கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை – சிறிதளவு
- காய்ந்த மிளகாய் – 10/தேவையான அளவு
- பூண்டு – 2 பற்கள்
- சின்ன வெங்காயம் – 15
- தக்காளி – 1
- துருவிய தேங்காய் – ¼ கப்
- கொத்தமல்லி தழை – ¼ கட்டு
- உப்பு – தேவையான அளவு
- புளி – சிறிது
தாளிக்க தேவையான பொருட்கள்
- நல்லெண்ணெய் – 2 மேஜை கரண்டி
- கடுகு – ½ தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் – 1
- கறிவேப்பிலை – சிறிது
செய்முறை
1. ஒரு கடாயில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
2. எண்ணெய் சூடானதும், இ2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
3. உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு ஓரளவு சிவந்ததும், சிறிது கறிவேப்பிலை சேர்த்து கொள்ளவும், அதனுடன் தேவையான அளவு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
2. பற்கள் பூண்டு மற்றும் 15 சின்ன வெங்காயம் சேர்த்து, வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கவும்.
3. அதனுடன் 1 தக்காளி சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
4. கால் மூடி துருவிய தேங்காயை சேர்த்து கொள்ளவும்.
5. கொத்தமல்லியை காம்புகள் நீக்கி இலையை மட்டும் ஆய்ந்து கொள்ளவும், பின்னர் சுத்தம் செய்து கழுவி விட்டு சேர்க்கவும்.
6. கொத்தமல்லி இலைகள் சுருண்டு வரும் வரை வதக்கவும். அதனுடன் இந்த சட்னிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். சிறிதளவு புளி சேர்த்துக் கொள்ளவும்.
7. ஒரு நிமிடத்திற்கு வதக்கிய பின்னர், அடுப்பை அணைத்து ஆற விடவும். ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
8. தாளிப்பதற்கு, ஒரு கடாயில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்க்கவும். அதனுடன் ½ தேக்கரண்டி கடுகு, ½ தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்துக் கொள்ளவும். மேலும் ஒரு காய்ந்த மிளகாய், மற்றும் சிறிதளவு கறிவேப்பிலையை கில்லி சேர்த்துக்கொள்ளவும்.
9. கடுகு பொரிந்து, உளுத்தம் பருப்பு சிவந்ததும் தாளிப்பு கலவையைச் சட்னியுடன் சேர்க்கவும். சுவையான கொத்தமல்லி சட்னி தயார்.
10. நன்றாக கலந்து இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.