முருங்கைக் கீரை கூட்டு

முருங்கைக் கீரை உடலுக்கு மிகவும் நன்மை சேர்க்கக் கூடிய கீரை வகை.  முருங்கைக் கீரையை வாரம் ஒரு நாள் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.   முருங்கைக்கீரையை சேர்த்து நாம் பலவிதமான உணவுகளை செய்யலாம் முருங்கைக்கீரை சாம்பார்,  முருங்கைக் கீரை பொரியல், ஆகியவை தினம்தோறும் வீடுகளில் செய்யப்படுகிறது. முருங்கைக் கீரை கூட்டு, முருங்கைகீரை, பருப்பு, மற்றும் தேங்காய் விழுது சேர்த்து செய்யப்படுகிறது.

Drumstick_leaves_kootu

இது சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் மிகவும் சுவையாக இருக்கும் அல்லது சூடான சாதத்தில் கூட்டு, மற்றும் நெய் கலந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். ஆரோக்கியமான முருங்கைக்கீரை கூட்டு செய்து சுவைத்து மகிழுங்கள்.

Drumstick_leaves_kootu

முருங்கைக் கீரை கூட்டு செய்ய தேவையான பொருட்கள்

  • முருங்கைக்கீரை –  ஒரு கட்டு
  • சின்ன வெங்காயம் – 10
  • துவரம் பருப்பு – ½ கப்
  • சாம்பார் தூள் – ½  தேக்கரண்டி
  • பெருங்காயத்தூள் – ½  தேக்கரண்டி
  • எண்ணெய் – 1 தேக்கரண்டி
  • கடுகு – ½ தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு – ½ தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • காய்ந்த மிளகாய் – 1

அரைக்க தேவையான பொருட்கள்

  • துருவிய தேங்காய் –  4 தேக்கரண்டி
  • சீரகம் – தேக்கரண்டி
  • முந்திரி பருப்பு – 2

முன் தயாரிப்பு

1. முருங்கைக்கீரையை உதிர்த்து, பின்னர் பொடியான காம்புகளை நீக்கி சுத்தமான தண்ணீரில் இரண்டு, மூன்று முறை அலசி ,தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.

2. ஒரு பிரஷர் குக்கரில் துவரம்பருப்பை சேர்த்து சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து இரண்டு விசில் வைத்து வேக வைக்கவும்.

3. ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம், மற்றும் முந்திரி பருப்பு, சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

Drumstick_Leaves_kootu

முருங்கைக் கீரை கூட்டு செய்முறை

1. ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின்னர் வர மிளகாய் சேர்க்கவும்.

Drumstick_leaves_kootu

2. அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு  வதக்கவும்.

Drumstick_leaves_kootu

3. அதனுடன் சுத்தம் செய்து வைத்த முருங்கைக் கீரையை சேர்த்து கிளறவும்.

Drumstick_leaves_kootu

4. பின்னர் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.

Drumstick_leaves

5. அதனுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

Drumstick_leaves

6. இப்பொழுது வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து கிளறவும்.

Drumstick_leaves_kootu

7. அதனுடன் மிளகாய் தூள் மற்றும் பெருங்காயத் தூள் கலந்து 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

Drumstick_leaves_kootu

Drumstick_leaves_kootu

8. மிளகாய் தூள் பச்சை வாசனை போனபின், அரைத்து வைத்த தேங்காய் விழுது சேர்த்து கலக்கவும்.

Drumstick_Leaves_kootu

 

9. தேங்காய் சேர்த்து  ஒரு நிமிடத்திற்கு கொதிக்க வைத்து பின் அடுப்பை அணைத்து விடவும். சுவையான முருங்கைக் கீரை கூட்டு தயார்.

 

Leave a Reply