Kara Kozhukattai in Tamil | கார பிடி கொழுக்கட்டை | Kozhukattai in Tamil | How to make kara pidi kozhukattai

See this Recipe in English

காரக்கொழுக்கட்டை மிகவும் சுலபமான முறையில் விரைவாக செய்யகூடிய விநாயகர் சதுர்த்தி பலகாரம்.  விநாயகர் சதுர்த்தி நாளில் பல விதமான பிரசாதங்கள் விநாயகருக்கு படைக்கப்படுகின்றன கொழுக்கட்டைகள் அதில் மிகவும் முக்கியமானவை.  பருப்பு பூரணம்,  தேங்காய்  பூரணம்,  எள்ளு பூரணம்,  உளுந்து பூரணம்,  என பலவிதமான கொழுக்கட்டைகள் செய்யப்படுகின்றன.  பூரண கொழுக்கட்டை களைக் காட்டிலும் பிடி கொழுக்கட்டை செய்வது சுலபமானது இதனை 10 – 15 நிமிடங்களுக்குள் ஆகவே சுலபமாக செய்யலாம். 

 சுவையான கார பிடி கொழுக்கட்டை செய்ய சில குறிப்கள்

  • கொழுக்கட்டைக்கு செய்வதற்கு கொழுக்கட்டை மாவு அல்லது இடியாப்பம் மாவு பயன்படுத்தலாம். 
  • அரிசிமாவு பயன்படுத்துவதாக இருந்தால் வறுத்த பின்னர் பயன்படுத்தவும்.
  • தேங்காய் விருப்பபட்டால் சேர்க்கலாம் அல்லது சேர்க்காமலும் செய்யலாம்.
  • தண்ணீர் நன்றாக கொதித்த பின்னர் அரிசி மாவு சேர்க்கவும்.
  • அரிசி மாவு சேர்த்து உடன் அடுப்பை அணைத்து விடவும்.

இதர வகைகள்

மணி கொழுக்கட்டை

இனிப்பு பிடி கொழுக்கட்டை

தேங்காய் பூரண கொழுக்கட்டை

 எள்ளு பூரண கொழுக்கட்டை

பால் கொழுக்கட்டை

எள்ளு உருண்டை

 பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயசம்

 

 தேவையான பொருட்கள்

  • கொழுக்கட்டை மாவு – ½  கப் 
  • சமையல் எண்ணெய் – 1  தேக்கரண்டி
  • கடுகு – ½  தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு- ½  தேக்கரண்டி
  • கருவேப்பிலை –  சிறிது
  • காய்ந்த மிளகாய் – 1
  • பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
  • உப்பு –  தேவையான அளவு
  • துருவிய தேங்காய் – 4  தேக்கரண்டி

செய்முறை

1. ஒரு வாணலியில் 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ½ தேக்கரண்டி கடுகு,  ½ தேக்கரண்டி உளுத்தம் பருப்பு,  கருவேப்பிலை சிறிது,  காய்ந்த மிளகாய் ஒன்று,  பெருங்காயம் சிறிதளவு,  ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

 2. பின்னர் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

3. தண்ணீர் கொதிக்கும் பொழுது கொழுக்கட்டை தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

4. பின்னர் 4 தேக்கரண்டி தேங்காயை துருவி சேர்த்துக் கொள்ளவும்.

 5. அதனுடன் 1/2 கப்  கொழுக்கட்டை மாவு சேர்த்து கிளறவும். 

6. மாவு இறுகி வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

7. ஓரளவு ஆறிய பின்னர் கைகளால் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

8. பின்னர் அதனை நான்கு விரலால் அழுத்தி பிடித்துக் கொள்ளவும்.

9. ஒரு இட்லி தட்டு அல்லது ஸ்டீமர் தட்டில் எண்ணெய் தடவி அதன் மீது கொழுக்கட்டைகளை வைக்கவும்.

10. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் இட்லி தட்டை வைத்து வேக வைக்கவும்.

 

11. 5 – 7 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். ஓரளவு ஆறிய பின்னர் எடுக்கவும்.  சுவையான கார கொழுக்கட்டை தயார். 

 

Leave a Reply