Milk Kova Recipe in Tamil | பால்கோவா| Palkova in Tamil | How to make palkova | Milk Kova

See this Recipe in English

பால்கோவா ஒரு சுவையான சுத்தமான பாலில் செய்யப்பட்ட இனிப்பு வகை, பால்கோவா பல வழிகளில் செய்யலாம். பால் பவுடர், பன்னீர், அல்லது கண்டன்ஸ்டு மில்க், ஆகியவற்றை கொண்டு செய்யலாம். ஆனால் பாரம்பரியமிக்க பால்கோவா, பால், சர்க்கரை, எலுமிச்சம் பழசாறு, ஏலக்காய் பொடி, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இந்த வகையான பால்கோவா செய்வதற்கு 2 லிட்டர் பாலுக்கு, 2 மணி நேரம் ஆகும். இது சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். நீங்களும் பாரம்பரியமிக்க பால்கோவா செய்து சுவைத்து மகிழுங்கள். 

சுவையான பால்கோவா செய்ய சில குறிப்புகள்

  • பால்கோவா செய்யும் பொழுது நீங்கள் பசும்பால் அல்லது எருமைப் பால் பயன்படுத்தலாம்.
  • பசும்பால் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும் மேலும் நிறம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். 
  • எருமைப்பால் பசும்பாலை விடக் குறைவாக இருக்கும் ஆனால் அது கெட்டியாகவும் வெள்ளை நிறத்திலும் இருக்கும்.
  • பால் கோவா செய்வதற்கு அடிகனமான பாத்திரம் பயன்படுத்தலாம்.
  • நான்ஸ்டிக் பாத்திரம் பயன்படுத்தும் பொழுது ஓரங்களில் ஒட்டி வீணாவதைத் தடுக்கலாம்.
  • பால்கோவா செய்ய கொழுப்புச்சத்து அதிகம் உள்ள பாலை பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும். 
  • சுவைக்கு ஏற்றாற்போல் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். 
  • ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா  செய்ய ஏலக்காய் பொடி சேர்க்கமாட்டார்கள்.
  • விருப்பப்பட்டால் ஏலக்காய் பொடி சேர்க்கலாம் அல்லது சேர்க்காமலும் பால்கோவா செய்யலாம்.

இதர வகைகள் – பால் பேடா, மில்க் கேக், ரசமலாய், ரோஸ் ரசகுல்லா, பாதாம் பாயசம், பால் சர்பத், கேரட் மில்க் ஷேக்

See this Recipe in English

பால்கோவா செய்ய தேவையான பொருட்கள்

  • பால்  – 2 லிட்டர்
  • சர்க்கரை – 1 கப்/ 200 கிராம்
  • எலுமிச்சம்  பழம்-1 
  • ஏலக்காய் பொடி- ½  தேக்கரண்டி
  • நெய் – 1  தேக்கரண்டி

பால்கோவா செய்முறை

 1. ஒரு அகன்ற பாத்திரத்தில் 2 லிட்டர் அளவு பாலை சேர்த்து சூடாக்கவும்.

2. அடி பிடிக்காமல் இருப்பதற்கு அவ்வப்போது கிளறி விடவும்.

 3. ஒரு மணி நேரத்திற்கு பிறகு பால் சுண்டி பாதி அளவாக ஆகும் வரை மிதமான சூட்டில் வைக்கவும்.

4. பின்னர் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து அதனுடன் சேர்க்கவும்.

 5. பால் இப்போது திரிந்து வருவதை பார்க்கலாம்.

6. பால் பிரிந்த பிறகு, 1 கப் சர்க்கரை மற்றும் 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்து சர்க்கரை  கரையும் வரை கலக்கவும்.

7. ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு  பால் சுண்டி திரண்டு வருவதை காணலாம்.  ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறவும்.

8. பால்கோவா ஒன்றாக சேர்ந்து வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.

 9. நெய் தடவிய பாத்திரத்தில்  பால்கோவாவை போட்டு, ஒரு ஸ்பூனால் அழுத்தி விடவும். 6 முதல் 8 மணி நேரங்களுக்கு அப்படியே வைக்கவும்.

 10. சிறுசிறு துண்டுகளாக வெட்டி பால்கோவாவை பரிமாறலாம்.

Leave a Reply