Milk Peda Recipe in Tamil | பால் பேடா | பால்கோவா | Milk peda recipe | How to make milk peda

See this Recipe in English

பால் பேடா ஒரு சுவையான சுத்தமான பாலில் செய்யப்பட்ட இனிப்பு வகை,  இது பால், சர்க்கரை, ஏலக்காய் பொடி, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.   பால் பேடா செய்வதற்கு ஏறக்குறைய இரண்டு மணி நேரம் வரை ஆகும்.  2 லிட்டர் பாலில் 500 கிராம் வரை கோவா கிடைக்கும் அதிலிருந்து நாம் 15 அல்லது 20 பால் பேடா செய்யலாம். தேவைக்கு தகுந்தாற்போல் பாலின் அளவை முடிவு செய்து கொள்ளலாம்.  சுவையான பால்பேடா நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். 

பாலை கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் பல வகைப்படும். பால்கோவா, பால் பேடா, பால் அல்வா, இப்படி பல பெயர்களில், பல விதமான பாலினால் செய்யப்பட்ட இனிப்பு வகைகள் கிடைக்கின்றன. பொதுவாக பால்கோவா போன்ற இனிப்பு வகைகள் சுத்தமான  பாலில் செய்யும் பொழுது சுவையாக இருக்கும். அது தவிர தற்போதைய காலங்களில் கண்டன்ஸ்டு மில்க் பயன்படுத்தலாம், அதனை பயன்படுத்தினால் நேர விரையம் குறையும். அதுபோல ஃபுல் க்ரீம் மில்க் அதாவது விப்பிங் க்ரீம் செய்ய பயன்படும் பாலை பயன்படுத்தலாம், அதுவும் சுவையாக இருக்கும்.

சுவையான பால்கோவா செய்ய சில குறிப்புகள்

  • பால்கோவா செய்ய நான்ஸ்டிக் பாத்திரம் வைத்து உபயோகப்படுத்தலாம். அது நேர விரயத்தையும், ஓரங்களில் ஒட்டி வீணாவதையும் தவிர்க்கும்.
  • பால் பேடா செய்யும் போது கையில் ஒட்டாமல் இருக்க சிறிதளவு நெய் தடவி கொள்ளலாம்.
  • சர்க்கரை சுவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
  • சிறிதளவு குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளலாம், அது சுவையும் மணமும் கொடுக்கும். 

இதர வகைகள் – குல்பிபால் சர்பத், மதுரை ஸ்பேஷல் ஜிகர்தண்டா, கேரட் மில்க் ஷேக், ரசமலாய் ,  பால்கோவா, ரோஸ் மில்க், பால் கொழுக்கட்டை, பாதாம் பால்

 

See this Recipe in English

பால் பேடா செய்ய தேவையான பொருட்கள்

  • 2 லிட்டர் பால்
  • 1 கப் சர்க்கரை (200 grams)
  • 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் 2 லிட்டர் பாலை சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும். அவ்வபோது கிளறி கொண்டே இருக்கவும் அல்லது அடி பிடிக்க  வாய்ப்புள்ளது.

2. ஒரு மணி நேரத்திற்கு பிறகு பால் பாதியாக குறைந்துவிடும்.

3. இப்பொழுது 1 கப் சர்க்கரை மற்றும் 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

4. சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்கவும்.

5. 1.5 மணி நேரத்திற்கு பிறகு பால் நன்கு சுண்டி இருப்பதை காணலாம்.

6. ஒன்னே முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு பால் திரண்டு பாத்திரத்திலிருந்து தனியே வருவதை காணலாம்.

7. இப்பொழுது மிகக் குறைந்த தீயில் வைத்து மெதுவாக கிளறவும்.

8. பால்கோவா நன்றாக சுருண்டு பாத்திரத்தை விட்டு பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். 

9. பால்கோவா கையிலும் பாத்திரத்தில் ஒட்டாத பக்குவத்தில் இருக்க வேண்டும,  அல்லது பிசுபிசுப்பு தன்மையுடன் இருந்தால் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

10. பால்கோவாவை ஆறவைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

11. இப்பொழுது milk peda stamp கொண்டு அழுத்தவும்.

12. அல்லது ஒரு cookie cutterக்குள் கோவா உருண்டையை வைத்து அதன் மேல் மில்க் பேடா stamp கொண்டு அழுத்தலாம்.

 

13. சுவையான பால் பேடா தயார்.

Leave a Reply