See this Recipe in English
ஓரியோ கேக் ஒரு சுலபமான, மிகவும் சுவையான, மிக மென்மையான கேக் . இது மைதா, சர்க்கரை, முட்டை, கண்டன்ஸ்டு மில்க், வெண்ணெய், போன்றவற்றை சேர்க்காமல் சுலபமான முறையில் செய்யலாம். இந்தக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஓரியோ பிஸ்கட், பால், மற்றும் பேக்கிங் பவுடர், ஆகிய மூன்று பொருட்கள் மட்டும் போதும். இந்த கேக் செய்வதற்கு ஓவன் தேவையில்லை. நாம் இட்லி பாத்திரம் போன்று அகலமான பாத்திரத்தில் செய்யலாம். இது செய்யும் நேரமும் குறைவு 30 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யலாம்.
சுவையான ஓரியோ கேக் செய்ய சில குறிப்புகள்
- ஓரியோ பிஸ்கட் கேக் செய்ய பிஸ்கட்டுகளை நைஸாக கட்டியில்லாமல் அரைத்துக் கொள்ளவும்.
- இது போன்ற கேக் ஓரியோ பிஸ்கட் தவிர பிரிட்டானியா பிஸ்கட், போர்பன் பிஸ்கட், குட் டே, மற்றும் போன்றவற்றிலும் செய்யலாம்.
- பேக்கிங் பவுடர் இல்லாதவர்கள் அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளலாம்.
இதர கேக் வகைகள் – முட்டை சேர்க்காத சாக்லெட் ரவா கேக், ஹனி கேக், ரவா கேக், முட்டை சேர்க்காத சாக்லேட் கேக், ஓவன் இல்லாமல் கப் கேக் செய்வது எப்படி? ஓவன் இல்லாமல் வெண்ணிலா கேக், பாவ் பன், பால் பன், முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக் முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக்
See this Recipe in English
ஓரியோ கேக் செய்ய தேவையான பொருட்கள்
- 20 ஓரியோ பிஸ்கட் (240 grams)
- 100 ml பால்
- 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
- 2 ஓரியோ பிஸ்கட் மேலே உடைத்துப் சேர்ப்பதற்கு
செய்முறை
1. ஒரு மிக்ஸி ஜாரில் 20 ஓரியோ பிஸ்கெட்களை சேர்க்கவும்.
2. அதனை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
3. இப்பொழுது அதனை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் 100 எம்எல் பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
4. மேலும் ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் சேர்த்து கலக்கவும்.
5. இப்பொழுது கேக் மாவு தயாராக உள்ளது.
6. ஒரு அகலமான பாத்திரத்தில் உள்ளே ஸ்டாண்ட் வைத்து மூடி வைக்கவும் அல்லது ஓவன் இருந்தால் 180C/360F ப்ரீ ஹீட் செய்து கொள்ளவும்.
7. ஒரு சிறிய பாத்திரத்தில் வெண்ணெய் தடவி கொள்ளவும். அதில் அந்த பாத்திரத்திற்கு ஏற்றவாறு பட்டர் பேப்பரை வைக்கவும்.
8. இப்பொழுது தயாராக வைத்துள்ள கேக் மாவை ஊற்றவும்.
9. அதற்குமேல் இரண்டு ஓரியோ பிஸ்கட் களை சிறு சிறு துண்டுகளாக உடைத்து மேலே அடுக்கவும்.
10.அதனை ஓவன் அல்லது சூடான பாத்திரத்தில் வைத்து மூடவும்.
11. இப்பொழுது 30 – 40 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்/ ஓவனில் 30 நிமிடங்களுக்கு வைக்கவும்.
12. சுவையான மிக மிக மென்மையான ஓரியோ கேக் தயார்.