Mayonnaise in Tamil | மயோனைஸ் | Mayonnaise recipe with Egg | how to make mayonnaise

See this Recipe in English

மயோனைஸ் முட்டை, சமையல் எண்ணெய்,  வினிகர்,  எலுமிச்சை  பழ சாறு,  ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.  இது சிக்கன் மற்றும் எல்லாவிதமான பொரித்த உணவுகளுடன் சுவையாக இருக்கும், அதுதவிர சாண்ட்விச், சவர்மா, போன்றவற்றிலும் வைத்து சாப்பிடலாம்.  சுவையான மயோனைஸ் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்காமல் மிகவும் சுலபமான முறையில் வீட்டில் இருக்கும் மிக்ஸியிலேயே 1 – 2 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யலாம்.  வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்வதால் விலையும் குறைவு அதேசமயத்தில் சுவையும்,  ஆரோக்கியமும் நிறைந்ததாக இருக்கும்.

 சுவையான மயோனைஸ்  செய்ய சில  குறிப்புகள்

  • மயோனைஸ், முட்டையின் மஞ்சள் கருவை பயன்படுத்தி செய்யப்படுகிறது, ஆனால்  விரைவாக  செய்யும் முறையை குறிப்பிட்டுள்ளதால்,  முழு முட்டையைப் பயன்படுத்தி மயோனைஸ் செய்துள்ளேன். 
  • மயோனைஸ் செய்வதற்கு ஆலிவ் ஆயில் பயன்படுத்த வேண்டும், அல்லது வாசனை இல்லாத சமையல் எண்ணெய் பயன்படுத்திக்கொள்ளலாம்.  நல்லெண்ணெய்,  கடலை எண்ணெய், தேங்காய்  எண்ணெய்  போன்றவற்றை பயன்படுத்தவேண்டாம்.
  •  பூண்டு விருப்பபட்டால் சேர்க்கலாம் அல்லது சேர்க்காமலும் செய்யலாம்.
  • மிளகு அல்லது விருப்பப்பட்ட வற்றை சேர்த்துக்கொண்டால் சுவையும் மணமும் பிரமாதமாக இருக்கும்.
  • பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் ஒரு வாரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
  • மயோனைஸ் செய்வதற்கு முட்டையை பிரிட்ஜில் இருந்து எடுத்து நேரடியாக பயன்படுத்த வேண்டாம்,  4 முதல் 5 மணி நேரம் முன்னதாகவே எடுத்து ரூம் டெம்பரேச்சர் (room temparature) இருக்கும் முட்டையை பயன்படுத்தவும்.
  • எண்ணெய், நீங்கள் பயன் படுத்தும் எண்ணை மற்றும் அதன் தரத்திற்கு ஏற்ப  குறிப்பிட்டுள்ள அளவைவிட சற்று கூடுதலாகவோ அல்லது சற்று குறைவாகவோ தேவைப்படும்.
  • உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை உங்கள் சுவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.
  • வினிகர் சேர்ப்பதற்கு பதிலாக அதே அளவு எலுமிச்சை பழ சாறு சேர்த்துக்கொள்ளலாம்.
  • மயோனைஸ் செய்யும்பொழுது எண்ணையை ஒட்டுமொத்தமாக சேர்க்காமல் சிறிது சிறிதாக சேர்த்து அடித்துக் கொள்ளவும்.  ஒட்டுமொத்தமாக சேர்க்கும் பொழுது மயோனைஸ் கெட்டித்தன்மை கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.

 

கோடை கால உணவுகள்

கஸ்டர்ட் சர்பத்

பால் சர்பத்

நன்னாரி சர்பத்

 பலுடா

கேரட் மில்க் ஷேக்

 

 

தேவையான பொருட்கள் 

  • முட்டை – 2
  • பூண்டு பற்கள் – 2
  • வினிகர் – 1  தேக்கரண்டி
  • சர்க்கரை- 1  தேக்கரண்டி
  • உப்பு – 1  தேக்கரண்டி
  • எலுமிச்சை பழச்சாறு – 1  தேக்கரண்டி
  • சமையல் எண்ணெய் – ¾  கப் – 180 ml 

 

செய்முறை

1. ஒரு மிக்ஸி ஜாரில் 2 முட்டைகளை உடைத்து சேர்த்துக் கொள்ளவும்.

2. அதனுடன் 2 பல் பூண்டு சேர்த்துக் கொள்ளவும்.

3. குறைவான  வேகத்தில் வைத்து 10  வினாடிகள் அடித்துக் கொள்ளவும்.

4. அதனுடன் 1  தேக்கரண்டி வினிகர் சேர்த்துக் கொள்ளவும்.

5. பின்னர் 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

6. 1 தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

7. 1 தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு சேர்க்கவும்.

8. அதனுடன் ¼  கப் சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

9. பல்ஸ் (pulse) இல் வைத்து 10 வினாடிகள் விட்டுவிட்டு அடித்துக்கொள்ளவும். 

10. அதனுடன் ¼  கப் சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

11. 10 – 20 வினாடிகள் அதிக வேகத்தில் வைத்து அடித்துக்கொள்ளவும். 

12. இப்பொழுது மயோனைஸ் ஓரளவு கெட்டியாக இருப்பதை காணலாம்.

13. அதனுடன் ¼  கப் சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

14. பல்ஸ் (pulse) இல் வைத்து 10 வினாடிகள் விட்டுவிட்டு அடித்துக்கொள்ளவும். 

15. மயோனைஸ்  கெட்டியாக இருப்பதை காணலாம்,  தேவைப்பட்டால் மீண்டும் எண்ணெய் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.

16. சுவையான மயோனைஸ் தயார்.

Leave a Reply