Falooda Recipe in Tamil | பலுடா | Falooda in Tamil | How to make Falooda | Summer Drink in Tamil

See this Recipe in English

பலுடா வட இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இனிப்பு வகை. இது ரோஸ் எசன்ஸ், பால், வெண்ணிலா ஐஸ்கிரீம், துளசி விதை, சேமியா, ஜெல்லி, டூட்டி ஃப்ரூட்டி, ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது. பலுடாவில் பலவிதங்கள் உண்டு. உதாரணமாக பாதாம் பலுடா, மேங்கோ பலுடா, பைனாப்பிள் பலுடா, மிக்ஸ்டு ஃப்ரூட் பலுடா, போன்றவை மிகவும் புகழ்பெற்றது.

சுவையான பலுடா செய்ய சில குறிப்புகள்

  • பலூடா செய்ய ரோஸ் சிரப் பயன்படுத்தப்படுகிறது. ரோஸ் சிரப்கு பதிலாக 2 அல்லது 3 சொட்டு ரோஸ் எசன்ஸ் பாலில் சேர்த்துக் கொள்ளலாம். 
  • பலூடா சேமியா என்பது கடைகளில் கிடைக்கும். பலூடா சேமியாக்கு பதிலாக வீட்டில் இருக்கும் வறுத்த சேமியா பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • பலுடா சேமியா பலவிதமான நிறம் மற்றும்  சுவைகளில் கிடைக்கும். விருப்பப்பட்ட நிறம் மற்றும் சுவை கொண்ட சேமியா வாங்கிக் கொள்ளலாம் அல்லது சாதாரண சேமியா பயன்படுத்தலாம்.
  • பலூடா செய்ய பால் காய்ச்சும் பொழுது உங்கள் தேவைக்கு தகுந்தவாறு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
  • வெண்ணிலா ஐஸ்கிரீம் க்கு பதிலாக நீங்கள் ஸ்டாபெரி மேங்கோ போன்ற விதவிதமான   சுவைகளில் ஐஸ்கிரீம் பயன்படுத்தலாம்.
  • மேலும் துளசி விதைகளுக்கு பதிலாக நீங்கள் ஆளி விதைகள் பயன்படுத்தலாம்.
  • மேலும் பாதாம் பிஸ்தா போன்றவற்றை பொடியாக நறுக்கி கடைசியாக தூவி விடலாம்.
  • ஜெல்லி செய்யும் பொழுது ஸ்ட்ராபெர்ரி மற்றும் லெமன் சுவைகளை பயன்படுத்தி உள்ளேன்.விருப்பப்பட்டால் ஒன்றுக்கு மேற்பட்டவற்றை பயன்படுத்தலாம் அல்லது ஒரு ஜெல்லி இருந்தால் கூட போதும்.

இதர குளிர் பானங்கள் – கோடை காலத்திற்கு 5 விதமான பானங்கள், பால் சர்பத், தர்பூசணி ஜூஸ், பழ சர்பத், கேரட் மில்க் ஷேக்

 

See this Recipe in English

பலூடா செய்ய தேவையான பொருட்கள்

  •  2 கப் பால்
  • 1/4 கப் சர்க்கரை
  • 2 தேக்கரண்டி துளசி விதை 
  • 1 பாக்கெட் ஸ்டாபெரி ஜெலட்டின் பவுடர்
  • 1 பாக்கெட் லெமன் ஜெலட்டின் பவுடர்
  • 1 பாக்கெட் பலூடா சேமியா
  • 1/4 கப்  ரோஸ் சிரப்
  • 2 தேக்கரண்டி டூட்டி ஃப்ரூட்டி
  • 2 கரண்டி வெண்ணிலா ஐஸ்கிரீம்

 பலுடா செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் 2 கப் பால் சேர்த்து மிதமான சூட்டில் சூடாக்கவும். அதனுடன் 1/4  கப் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

2. இதனை நன்கு ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

3. ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி துளசி விதைகள் சேர்த்து கொள்ளவும்.

4. அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

5. பின்னர் 2 அகலமான பாத்திரம் எடுத்துக் கொள்ளவும். ஒன்றில் ஸ்ட்ராபெர்ரி ஜெலட்டின் பவுடர் சேர்க்கவும்,  மற்றொன்றில் லெமன் ஜெலட்டின் பவுடர் சேர்க்கவும்.

6. இப்பொழுது ஒன்றிலும் 1 கப் கொதிக்கும் தண்ணீர் சேர்க்கவும்.

7. 2 நிமிடங்ளுக்கு கைவிடாமல் கலக்கவும்.

8. இப்பொழுது ஒவ்வொன்றிலும் 1 கப் சாதாரண தண்ணீர் சேர்க்கவும்.

9. இதனை பிரிட்ஜில்  4 மணி நேரம் வைக்கவும்.

10. 4 மணி நேரத்திற்கு பிறகு  ஜெல்லி தயாராகிவிடும், அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

11. மற்றொரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து ஒரு பாக்கெட் பலூடா  சேமியா சேர்க்கவும்.

12. 2-3  நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

13. அதனை ஒரு வடிகட்டியில் ஊற்றி வடிகட்டவும். பின்னர் குளிர்ச்சியான நீர் சேர்த்து  கழுவவும்.

செய்முறை

1. ஒரு நீளமான கிளாஸ் டம்ளரில் 3 தேக்கரண்டி ரோஸ் சிரப் சேர்த்துக் கொள்ளவும்.

 2. அதனுடன் 3 தேக்கரண்டி ஊற வைத்த துளசி விதைகள் சேர்த்துக் கொள்ளவும்.

3. இப்பொழுது 2 தேக்கரண்டி சேமியா சேர்த்துக் கொள்ளவும்.

4. 3 தேக்கரண்டி லெமன் ஜெல்லி  மற்றும் 3 தேக்கரண்டி ஜெல்லி ஸ்டாபெரி சேர்த்துக் கொள்ளவும்.

5. தயாராக உள்ள பாலிலிருந்து 1 கப் சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது 1 ஸ்பூன் கொண்டு மெதுவாக கலக்கி கொள்ளவும்.

 6. இதன் மேல் 1 கரண்டி வெண்ணிலா ஐஸ்கிரீம் வைக்கவும்.

 7. மேலும் சிறிதளவு ரோஸ் சிரப் ஊற்றவும்.

8. கடைசியாக 1 தேக்கரண்டி டூட்டி ஃப்ரூட்டி தூவி விடவும்.  சுவையான பலுடா தயார். 

 

Leave a Reply