Kulfi recipe in Tamil | குல்பி | Easy kulfi recipe | How to make Kulfi

See this Recipe in English

குல்பி சுவையான குல்ஃபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில்  வீட்டிலேயேசெய்யலாம்.  கடைகளில் வாங்குவதை காட்டிலும் சுவையாகவும் அதே சமயத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும்.  சுவையான குல்ஃபி நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

 சுவையான  குல்பி செய்ய சில குறிப்புகள்

  • குல்பி செய்வதற்கு தண்ணீர் சேர்க்காத கெட்டியான பால் சேர்த்துக் கொள்ளவும்.
  • பாலை நன்றாக  வத்த விடவும் அப்பொழுதுதான் குல்பி சுவையாக இருக்கும்.
  • சர்க்கரைக்கு பதிலாக நீங்கள் அதே அளவு கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கொள்ளலாம்.
  • விருப்பப்பட்டால் முந்திரி மற்றும் பாதாம்  உடன் பிஸ்தா, வால்நட் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • கான்பிளவர் சேர்ப்பதற்கு பதிலாக கோதுமை அல்லது மைதா மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
  • கார்ன் ஃப்ளோர் உடன் பால் சேர்ப்பதற்கு பதிலாக தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளலாம். 
  • பாலை நன்றாக ஆற வைத்து அதன் பின்னர் குல்பி மோல்டில் சேர்க்கவும்.

இதர வகைகள் – மலாய் குல்பி, பால் சர்பத், பழ சர்பத்ரோஸ் மில்க், கேரட் மில்க் ஷேக்,பாதாம் பால், கேரமல் பாயாசம், கோதுமை ரவை பாயசம்ரவா பாயசம், ஜவ்வரிசி பாயசம், சிறுதானிய பாயசம், பருப்பு பாயசம், பாதாம் பால், தர்பூசணி ஜூஸ், மதுரை ஸ்பேஷல் ஜிகர்தண்டா

 

 

 

See this Recipe in English

 

தேவையான பொருட்கள் 

  • பால் – 1   லிட்டர் + 3 தேக்கரண்டி
  • சர்க்கரை – ½  கப் 
  • கார்ன் ஃப்ளோர் – 1  மேஜைக்கரண்டி
  • பாதாம் – 10
  • முந்திரிப் பருப்பு – 10
  • ஏலக்காய் – 3

செய்முறை

1. ஒரு   பாத்திரத்தில் ஒரு லிட்டர் பால் சேர்த்துக் கொள்ளவும்.

2. மிதமான தீயில் வைத்து பாலை காய்ச்சவும்.

3. 1 லிட்டர் பால் 1/2 லிட்டராக வற்றி வரும் வரை காய்ச்சவும்.

 4. ஒரு சிறிய கப்பில் 1 மேசைக்கரண்டி கான்பிளவர் சேர்த்து அதனுடன் 3 தேக்கரண்டி பால் சேர்த்து கலக்கவும்.

5. பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் 10 பாதாம் பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.

6. அதனுடன் 10 முந்திரி பருப்பு மற்றும் சிறிதளவு ஏலக்காய் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

7. இப்பொழுது பாலில் 1/2  கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

8. சர்க்கரை கரையும் வரை கலக்கவும் பின்னர் கரைத்து வைத்துள்ள  கான்பிளவர் சேர்த்து கலக்கவும்.

9. 2 – 3 நிமிடங்களுக்கு கலந்த பின்னர் பால்  கெட்டியாக இருப்பதை பார்க்கலாம்.

10. இப்பொழுது பொடித்து வைத்துள்ள முந்திரி, பாதாம் மற்றும் ஏலக்காய் சேர்த்து கொள்ளவும்.

11. நன்றாக கலந்த  பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஆறவிடவும்.

12. ஆறிய பின்னர் ஒரு குல்பி மோல்ட் ,  ஐஸ் கிரீம் மோல்ட்,  அல்லது டீ கிளாஸில் ஊற்றி கொள்ளவும்.

 13. அதன்மீது அலுமினியம் பேப்பர் அல்லது பிளாஸ்டிக் பேப்பர் வைத்து மூடவும். கத்தியால் சிறிய துளையிட்டு அதில் ஐஸ்க்ரீம் குச்சியை வைக்க வேண்டும்.

14.  இப்பொழுது  ஃப்ரீசரில் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வைக்கலாம் அல்லது இரவு முழுவதும் வைக்கலாம். 8 மணி நேரத்திற்குப் பிறகு அலுமினியம் பேப்பரை நீக்கவும்.

 15. அதனை 10 – 20 வினாடிகளுக்கு தண்ணீரில் வைக்கவும். பின்னர் லேசா சுற்றி வெளியே எடுக்கவும்.

 16. சுவையான குல்பி தயார்.  

Leave a Reply