வாழைப்பூ வடை வாழை மரத்தின் பல பாகங்கள் உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது வாழைக்காய் கொண்டு பொரியல் மற்றும் சாம்பார் செய்யப்படுகிறது. வாழைத்தண்டு பலவிதங்களில் உணவில் சேர்க்கப்படுகிறது. வாழைப்பூ பொரியல், மற்றும் வாழைப்பூ கூட்டு மிகவும் பிரபலமான மதிய உணவு வகை. அதேபோல வாழைப்பூ கொண்டு வடையும் செய்யலாம்.
உடனடி மெதுவடை, உருளைக்கிழங்கு ரிங்ஸ், சேமியா போண்டா, மொரு மொரு வடை, சாம்பார் வடை, இட்லி மாவு போண்டா, வெஜிடபிள் கட்லெட், மெதுவடை.
- 1 வாழைப்பூ
- 4 தேக்கரண்டி புளித்த மோர்
- சில கறிவேப்பிலை இலைகள்
- 3 வரமிளகாய்
- 1 தேக்கரண்டி சீரகம்
- 1/2 கப் கடலை பருப்பு
- எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
-
கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும்.
-
ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் மோர் கலந்து வைக்கவும்.
-
வாழைப் பூவின் மேலே உள்ள இதழ்களை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் பூவின் நடுவில் இருக்கும் நரம்பு போன்ற தடிமனான பகுதியை நீக்கவும்.
-
பின்னர் அவற்றை பொடிப்பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். அல்லது வாழைப்பூ கருத்து போகும் வாய்ப்புள்ளது.
-
ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், கறிவேப்பிலை இலைகள், வர மிளகாய், மற்றும் உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
-
பின்னர் ஊறவைத்த கடலைப்பருப்பில் தண்ணீரை வடித்துவிட்டு, அரைத்த கலவையுடன் கடலை பருப்பையும் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
-
மோரில் ஊற வைத்த வாழைப்பூவை வடித்து விட்டு அரைத்து வைத்துக் கலவையுடன் சேர்த்து இரண்டு அல்லது மூன்று சுற்றுகள் சுற்றி எடுக்கவும். கவனம்: அதனை நைசாக அரைக்க கூடாது இல்லையேல் வடை கசக்கும் வாய்ப்புள்ளது.
-
அரைத்த கலவையில் சிறுசிறு வடைகளாகத் தட்டவும் .
-
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்த வடைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் .
-
சுவையான வாழைப்பூ வடை தயார்.
முன் தயாரிப்பு
1. கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் மோர் கலந்து வைக்கவும்.
3. வாழைப் பூவின் மேலே உள்ள இதழ்களை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் பூவின் நடுவில் இருக்கும் நரம்பு போன்ற தடிமனான பகுதியை நீக்கவும்.
4. பின்னர் அவற்றை பொடிப்பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். அல்லது வாழைப்பூ கருத்து போகும் வாய்ப்புள்ளது.
செய்முறை
1. ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம் கறிவேப்பிலை இலைகள் வர மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
2. பின்னர் ஊறவைத்த கடலைப்பருப்பில் தண்ணீரை வடித்துவிட்டு, அரைத்த கலவையுடன் கடலை பருப்பையும் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
3. மோரில் ஊற வைத்த வாழைப்பூவை வடித்து விட்டு அரைத்து வைத்துக் கலவையுடன் சேர்த்து இரண்டு அல்லது மூன்று சுற்றுகள் சுற்றி எடுக்கவும்.
4. கவனம்: அதனை நைசாக அரைக்க கூடாது இல்லையேல் வடை கசக்கும் வாய்ப்புள்ளது.
5. அரைத்த கலவையில் சிறுசிறு வடைகளாகத் தட்டவும் .
6. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தட்டி வைத்த வடைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் .
7. சுவையான வாழைப்பூ வடை தயார் .