Medhu Vadai recipe in Tamil | மெதுவடை | Vadai recipe in Tamil | Medu vadai | How to make vadai

See this Recipe in English

மெதுவடை இந்தியாவின் மிகவும் பாரம்பரியமிக்க உணவு வகை, தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறப்படுகிறது. இது தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மற்றும் கேரளாவின் மிகவும் புகழ்பெற்றதாகும். 

மெதுவடை  தோல் நீக்கிய வெள்ளை உளுந்து கொண்டு செய்யப்படுகிறது.  இது ஊரவைப்பது மற்றும் அரைப்பது,  மிகவும் முக்கியமானதாகும். இதற்கு மாவு அரைக்க மிக்ஸி அல்லது கிரைண்டர் இரண்டையும் பயன்படுத்தலாம்,  பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு, ஆகியவை சேர்க்கப்படுகிறது. இது தவிர விரத நாட்களில் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து செய்யப்படுகிறது.  மெதுவடை இல்லாத விசேஷ வீடுகள் தமிழ்நாட்டில் பார்க்க முடியாது.

சுவையான உளுந்து வடை செய்ய சில குறிப்புகள்

  • மொறுமொறுப்பான உளுந்து வடை செய்வதற்கு தரமான தோல் நீக்கிய உளுந்தை 4 முதல் 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • உளுந்து ஊற வைக்கும் போது 4 தேக்கரண்டி அரிசி சேர்த்து ஊறவைத்தால், உளுந்து வடை  அருமையாக இருக்கும்,  அல்லது 1 or 2 தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
  • மாவு அரைக்கும் பொழுது அதிகமாக நீர் சேர்க்காமல் 3 அல்லது  4 ஐஸ்கட்டிகள் அல்லது 1/2 கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். மாவு கெட்டியாக இருந்தால் தான் வடை செய்ய முடியும்.
  • வடை மாவு அரைத்த பின்னர் அதனை பிரிட்ஜில் வைக்கக் கூடாது,  பிரிட்ஜில் வைத்த மாவில் வடை செய்யும் பொழுது எண்ணையை அதிகம் குடிக்கும். 
  • வடை செய்யும் பொழுது  சமையல் எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும்,  அல்லது வடை கரிந்துவிடும் வாய்ப்புள்ளது, மிகவும் குறைவான சூட்டில் இருந்தால் வடை உள்பக்கம் வேகாமல் இருக்கும். 

இதர வகைகள் – பர்கர் வடைதயிர் வடை, உடனடி மெதுவடை, சாம்பார் வடை, வாழைப்பூ வடை, மொரு மொரு வடை, மெது பக்கோடா,  போண்டா சூப், சேமியா போண்டா, இட்லி மாவு போண்டா, மைசூர் போண்டா

 

See this Recipe in English

தேவையான பொருட்கள்

  • 2 கப் வெள்ளை உளுந்து   (400 கிராம்)
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • கருவேப்பிலை சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
  • 1 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணை பொரிக்க தேவையான அளவு

 செய்முறை

1. உளுந்தை கழுவிவிட்டு 4 முதல் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.

2. உளுந்து ஊறிய பின்னர்,  கிரைண்டரில் சேர்க்கவும்.

3. சிறிதளவு தண்ணீர் அல்லது 3 or 4 ஐஸ் கட்டிகள் சேர்த்து  நைசாக அரைக்கவும்.

 

4. ஒருவேளை உளுந்து மாவு நீர்த்துவிட்டால் சிறிதளவு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும்.

5. மாவு அரைத்து எடுத்த பின்னர், 1 சிறிய துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது,  2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது, 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது,  கருவேப்பிலை சிறிதளவு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

6. நீங்கள் மிக்ஸியில் அரைத்தால் இதேபோல செய்யவும் அதனுடன் 1/2  தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளவும்.

7. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கையை  ஈரமாகி கொண்டு சிறிதளவு மாவை எடுத்து உருட்டவும், நடுவில் சிறிய ஓட்டை போட்டு எண்ணெயில் போடவும்.

8. 2 நிமிடங்களுக்குப் பிறகு மெதுவாக வடைகளை திருப்பி போடவும்.

9. பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து விட்டு எடுக்கவும். 

10. சுவையான மெதுவடை தயார்  தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் சூடாகப் பரிமாறவும்.

Leave a Reply