Muttai Kulambu Recipe in Tamil | முட்டை குழம்பு | Egg curry recipe | Egg Gravy | How to make muttai kuzhambu

See this Recipe in English

முட்டை குழம்பு  அல்லது முட்டை மசாலா ஒரு சுவையான  மற்றும் மிகவும் சுலபமான குழம்பு வகை.  இது இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, சாதம், சிக்கன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, சீரக சாதம், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும்.  முட்டை குழம்பு சுவையுடன் கூடிய ஆரோக்கியம் மிகுந்த உணவு வகை. இந்த குழம்பில் முட்டை தவிர உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம், அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர் சேர்த்துக்கொள்ளலாம். 

முட்டை குழம்பு பல விதங்களில் செய்யப்படுகிறது. வெங்காயம், தக்காளி கொண்டு மசாலா போல் செய்து அதனுடன் வேகவைத்த முட்டை சேர்த்துக் கலக்கலாம்.  இந்த குருமாவில் முட்டை தவிர வேகவைத்த காய்கறிகள், பொரித்த உருளைக்கிழங்கு, போன்றவற்றை கொண்டும் செய்யலாம், அல்லது பனீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அவித்த முட்டையை புரட்டுவது போல் மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு, போன்றவற்றை போட்டு பிரட்டி அதனை குழம்புடன் கலக்கலாம் இது பன்னீர் குருமா.

 சுவையான முட்டை குழம்பு செய்ய சில குறிப்புகள்

  • முட்டையை வேக வைக்க, பாத்திரத்தில் தேவையான அளவு முட்டைகளைச் சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றவும். அதனை அடுப்பில் வைத்து சூடாக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் பாத்திரத்தை மூடி வைத்து அடுப்பை அணைத்து விடவும் 10 – 12 நிமிடங்களுக்கு விட்டுவிடவும் பின்னர் தோலுரித்து பயன்படுத்தவும் சரியான பக்குவத்தில் வேக வைத்த முட்டைகள் கிடைக்கும். 
  • விருப்பமில்லை எனில் நீங்கள் தேங்காய் விழுது சேர்க்க வேண்டாம்.
  • தேங்காய் விழுது பதிலாக திக்கான தேங்காய்ப்பால் சேர்த்துக் கொள்ளலாம். 

சைவ குருமா வகைகள் – சால்னா,  சோயா குருமாவடைகறிரோட்டுக்கடை காளான் மசாலாகத்திரிக்காய் கிரேவிபன்னீர் கிரேவிகும்பகோணம் கடப்பாதக்காளி குருமாஆந்திரா கத்திரிக்காய் மசாலாபூரி மசாலாவெஜிடபிள் குருமாசென்னா மசாலாபன்னீர் பட்டர் மசாலாகாளிஃபிளவர் பட்டாணி குருமா.

அசைவ குருமா வகைகள் –  இறால் தொக்குசெட்டிநாடு சிக்கன் குழம்புமுட்டை மசாலாஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி,முட்டை மசாலா.

 

 

See this Recipe in English

 முட்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

 முட்டை மசாலாவிற்கு

  •  5 வேக வைத்த முட்டைகள்( தோல் உரித்தது)
  •  2 தேக்கரண்டி எண்ணெய் 
  •  1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  •  1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  •  தேவையான அளவு உப்பு

குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

  • 3 தேக்கரண்டி எண்ணெய்
  • 3 ஏலக்காய்
  • 3 லவங்கம்
  • 1 சிறிய துண்டு பட்டை
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 2 பச்சை மிளகாய் கீறியது
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி மல்லித்தூள்
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • 1.5 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
  • 2  தக்காளி பொடியாக நறுக்கியது
  • 1/4 கப் துருவிய தேங்காய்
  • தேவையான அளவு உப்பு

 செய்முறை

1. 5 முட்டைகளை வேக வைத்து தோலுரித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.  ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

2. பின்னர் 5 முட்டைகளை பாதியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

3. முட்டைகளின் 2 பக்கமும் 1-2 நிமிடங்களுக்கு பிரட்டி எடுத்து தனியே வைக்கவும்.

4. ஒரு கடாயில் 3 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் 3 ஏலக்காய்,  3 லவங்கம்,  1 சிறிய துண்டு பட்டை, ஆகியவற்றை சேர்க்கவும்.

5. அதனுடன் 1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

6. வெங்காயம் ஓரளவு வதங்கிய பிறகு, 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள், ஆகியவற்றை சேர்த்து இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

7. இப்பொழுது தேவையான அளவு உப்பு,  1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மல்லித்தூள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா, 1.5 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

8. அதனுடன் 2 தக்காளி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். 

9. தக்காளி மென்மையாக வெந்த பிறகு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.

10. பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து, அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

11. இப்பொழுது தேங்காய் விழுது சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.

12. பின்னர் தயாராக வைத்துள்ள முட்டைகளை சேர்த்து மூடி போட்டு 1 நிமிடத்திற்கு வேக வைக்கவும்.

12. இப்பொழுது மூடியை திறந்து முட்டைகளை மீண்டும் திருப்பி போடவும்.

13. ஒரு நிமிடத்திற்கு பின் அடுப்பை அனைத்து விடவும்,  சுவையான முட்டை குழம்பு தயார். 

Leave a Reply