Chicken Burger in Tamil | சிக்கன் பர்கர் | Chicken Burger Recipe | How to make chicken burger

சிக்கன் பர்கர் ஒரு சுவையான சிற்றுண்டி வகை.  சிக்கனில் எப்பொழுதும் பிரியாணி மற்றும் குழம்பு வகைகள் செய்வதைக் காட்டிலும், இது போன்ற வித்தியாசமான உணவு வகைகளை செய்தால், வீட்டில் இருப்பவர்கள் விரும்பி உண்பார்கள். அதே சமயத்தில், கடைகளில் நாம் செலவு செய்யும் பணமும் மிச்சம், உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.  சிக்கன் பர்கர் தவிர காய்கறிகளை வைத்து செய்யும் வெஜிடபிள் பர்கர் மற்றும்  தவா பர்கர்  ஆகியவற்றிற்கான  லிங்கை கீழே குறிப்பிட்டுள்ளேன் கிளிக் செய்து படித்து பார்க்கவும்.  சுவையான சிக்கன் பர்கர் ஆரோக்கியமான முறையில் சுகாதாரமாக வீட்டிலேயே செய்து சுவைத்து மகிழுங்கள்.

 

 சுவையான  சிக்கன் பர்கர் செய்ய சில குறிப்புகள்

  • எலும்பில்லாத சிக்கன் வாங்கி வீட்டில் அரைத்துக் கொள்ளலாம் அல்லது கடைகளில் கிடைக்கும் கொத்துக்கறி பயன்படுத்தலாம்.
  • சிக்கனை அரைக்கும் பொழுது பச்சைமிளகாயை நீங்கள் விருப்பபட்டால் சேர்க்கலாம் அல்லது சேர்க்காமலும் செய்யலாம்.
  • மிளகாய்த்தூள் உங்கள் காரத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்.
  • சிக்கன்  கட்லட் பொரிக்கும் பொழுது ஒவ்வொரு பக்கமும் 8 முதல் 10 நிமிடங்கள் வரை  வேக வைக்கவும்.  அவ்வப்போது திருப்பி போடவும் அல்லது கரிந்துவிடும் வாய்ப்புள்ளது.

இதர வகைகள் – பர்கர் வடை, தவா பர்கர், வெஜிடபிள் பர்கர்,  சோயா கட்லட்பாசிப்பருப்பு இட்லி,  மசாலா பாஸ்தா, பாசிப்பருப்பு ஃப்ரை, பிரட் சில்லி, போண்டா சூப், பிரெட் பீட்சா, உடனடி மெதுவடை, உருளைக்கிழங்கு ரிங்ஸ், சேமியா போண்டா , மொரு மொரு வடை, காலிஃப்ளவர்  ஸ்னாக்ஸ், ரவா இட்லி, ஓவென் இல்லாமல் பீஸ்ஸா, வெஜிடபிள் கட்லெட்.

 

 

தேவையான பொருட்கள்

சிக்கன்  கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்

  • சிக்கன் – 400g ( எலும்பு இல்லாதது)
  • பிரட் – 2
  • பால் –  பிரட்டை ஊறவைக்க தேவையான அளவு
  • பச்சை மிளகாய் – 2
  • முட்டை – 2 – 3
  • மஞ்சள் தூள் – ½  தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 1  தேக்கரண்டி
  • கரம் மசாலா – ½  தேக்கரண்டி
  • மிளகு தூள் – ½  தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது – ½  தேக்கரண்டி
  • சோயா சாஸ் – ½  தேக்கரண்டி
  • உப்பு –  தேவையான அளவு
  • மைதா மாவு – ¼  கப்
  • பிரெட் கிரம் – ¼  கப்
  • சமையல் எண்ணெய் –  பொரிக்க தேவையான அளவு

பர்கர் சாஸ் செய்ய தேவையான பொருட்கள்

  • மயோனைஸ் – 3  தேக்கரண்டி
  • டொமேட்டோ கெட்சப் – 1  தேக்கரண்டி
  • சில்லி சாஸ் – 1  தேக்கரண்டி

இதர பொருட்கள்

  • பர்கர் பன் –  தேவையான அளவு
  • லெட்யூஸ் –  தேவையான அளவு
  • வெங்காயம் –  தேவையான அளவு
  • தக்காளி –  தேவையான அளவு
  • சீஸ்  துண்டுகள்  – தேவையான அளவு

 செய்முறை

1. இரண்டு பிரட் துண்டுகளை சிறியதாக நறுக்கி ஒரு கப்பில் வைத்துக் கொள்ளவும்.

2. அதில் சிறிதளவு பால் ஊற்றி 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

3. 400 கிராம் எலும்பில்லாத சிக்கனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளவும்.

4. அதனுடன் ஊற வைத்த பிரட் துண்டுகளை சேர்த்து லேசாக அரைத்துக் கொள்ளவும்.

5. பின்னர் 2 பச்சை மிளகாய், 1 முட்டை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ், ஆகியவற்றை சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும்.

6. அரைத்த கலவையை தனியே எடுத்து வைக்கவும்.

7. ஒரு கப்பில் 3 தேக்கரண்டி மயோனைஸ் சேர்த்துக் கொள்ளவும்.

8. அதனுடன் 1 தேக்கரண்டி டொமேட்டோ கெட்சப் மற்றும் 1 தேக்கரண்டி சில்லி சாஸ் சேர்த்து கலக்கவும்.

9. அரைத்து வைத்துள்ள சிக்கனை ஓரளவுக்கு பெரிய உருண்டைகளாக உருட்டி லேசாக தட்டி கொள்ளவும்.

10. அதனை மைதா மாவில் பிரட்டி எடுத்து பின்னர்  2 முட்டைகளை உடைத்து ஊற்றி அதில்  முக்கி எடுக்கவும்,  பின்னர்  bread crumbs இல் பிரட்டி எடுக்கவும்.

11. ஒரு வாணலியில் சமையல் எண்ணெய் சேர்த்து சூடானதும் தயாராக வைத்துள்ள சிக்கன் கட்லட் சேர்த்து பொரிக்கவும்.

12. ஒவ்வொரு பக்கங்களும் 10 நிமிடங்களுக்கு வேக வைத்துக்கொள்ளவும் அவ்வப்போது திருப்பி போடவும்.

13. சிக்கன் நன்றாக வெந்து பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து தனியே வைக்கவும்.

14. ஒரு பர்கர் பன்னை பாதியாக வெட்டிக் கொள்ளவும். அதில் 2 தேக்கரண்டி பர்கர் சாஸ் தடவி கொள்ளவும்.

15. பின்னர் லெட்யூஸ் வைக்கவும்.

16. அதன்மீது தக்காளி மற்றும் வெங்காயத்தை மெலிதாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

17. பின்னர் தயாராக வைத்துள்ள சிக்கன்  கட்லெட் வைக்கவும்.

18. அதன் மீது ஒரு துண்டு சீஸ் வைக்கவும்.

19. பர்கர் பன் இன்னொரு பக்கமும் பர்கர் சாஸ் தடவி மூடி வைக்கவும். சுவையான சிக்கன் பர்கர் தயார்.

 

Leave a Reply