Chana Masala Recipe in Tamil | சென்னா மசாலா | Chana Masala | Kondaikadalai Masala | How to make chana masala | Chapathi sidedish

See this Recipe in English

சென்னா மசாலா  சென்னா மசாலா பூரி மற்றும் பட்டூரா எனப்படும் மைதாவில் செய்யக்கூடிய பூரி ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும்.  இது பஞ்சாபில் இருந்து பெறப்பட்ட சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை.

சென்னா மசாலா வெள்ளை கொண்டைக்கடலை, வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், மற்றும் கரம் மசாலா, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.இதனை மேலும் ஆரோக்கியமாக விரும்பினால் முளைகட்டிய கொண்டைக்கடலையை பயன்படுத்திக் கொள்ளலாம்.  இதே முறையில் கருப்பு கொண்டைகடலை கொண்டும் செய்யலாம், அது சோளே மசாலா என்று அழைக்கப்படுகிறது.  சுவையான மசாலாவை எளிமையான முறையில் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

சுவையான சென்னா மசாலா செய்ய சில குறிப்புகள்

  • சென்னா மசாலா செய்ய கொண்டை கடலையை குறைந்தது 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • விருப்பப்பட்டால் கொண்டைக்கடலை தனியே வேகவைத்து மசாலாவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
  • உப்பு, காரம் ஆகியவற்றை விருப்பத்துக்கு தகுந்தார்போல்சேர்த்துக்கொள்ளலாம்.
  • விருப்பப்பட்டால் வெள்ளை கொண்டைக்கடலை க்கு பதிலாக கருப்பு கொண்டைக்கடலை உபயோகிக்கலாம். 

சைவ குருமா வகைகள் – வெஜிடபிள் சால்னாசோயா குருமாவடைகறிரோட்டுக்கடை காளான் மசாலாகத்திரிக்காய் கிரேவிபன்னீர் கிரேவிகும்பகோணம் கடப்பாதக்காளி குருமாஆந்திரா கத்திரிக்காய் மசாலாபூரி மசாலாவெஜிடபிள் குருமா, பன்னீர் பட்டர் மசாலாகாளிஃபிளவர் பட்டாணி குருமா.

See this Recipe in English

தேவையான பொருட்கள்

  •  4 தேக்கரண்டி எண்ணெய்/வெண்ணெய்
  •  1 பிரிஞ்சி இலை
  •  1 துண்டு பட்டை
  •  2 ஏலக்காய்
  •  1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  •  1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  •  2 தக்காளி
  •  1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  •  1 கப் வெள்ளை கொண்டைக்கடலை
  •  1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
  •  2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  •  1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  •  2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்
  •  1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  •  1 தேக்கரண்டி சென்னா மசாலா தூள்
  •  தேவையான அளவு உப்பு
  •  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு

 செய்முறை

1. ஒரு பிரஷர் குக்கரில் 4 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் 1 பிரிஞ்சி இலை, 2 ஏலக்காய், 1 பட்டை, 1  தேக்கரண்டி பெருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

2. ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும், வெங்காயம்                      மென்மையாகும் வரை வதக்கவும்.

3. அதனுடன் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.                      

4. அதனுடன்  சிவப்பு மிளகாய் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள்,                       தேவையான அளவு உப்பு, சென்னா மசாலா தூள், ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

5. பின்னர் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும்.

6. அதனுடன் 2 தக்காளி பழங்களை விழுதாக அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.

 7. பின்னர் 1/4 கப் தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து 10 – 12 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். 

8. அதனுடன் 8 மணி நேரம் ஊற வைத்த கொண்டைக்கடலை சேர்த்துக்கொள்ளவும்.

9. பின்னர் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து பிரஷர் குக்கரை மூடி 5 – 6 விசில் வைக்கவும்.

10. பிரஷர் போன பிறகு குக்கரை திறந்து மீண்டும் ஒரு முறை கிளறி விடவும். சுவையான சென்னா மசாலா தயார்.

Leave a Reply