See this Recipe in English
சிக்கன் 65 ஒரு சுவையான மற்றும் மொறுமொறுப்பான உணவுவகை. இது மாலை நேர சிற்றுண்டியாக அல்லது மதிய நேரத்தில் பிரியாணி, நெய் சோறு, ஆகியவற்றுடன் பரிமாறலாம். இது எலும்பில்லாத சிக்கன், மிளகாய்தூள், மஞ்சள்தூள், மற்றும் இதர இந்திய மசாலா வகைகளுடன் சேர்த்து செய்யப்படுகிறது. இதை நீங்கள் நெய் சோறு மற்றும் வெஜிடபிள் பிரியாணி ஆகியவற்றுடன் பரிமாறும்போது காரமாகவும் மற்ற அசைவ உணவுகளுடன் பரிமாறும்போது காரம் குறைவாகவும் செய்யலாம்.
சிக்கன் 65 பல விதங்களில் செய்யப்படுகிறது. இதனை மசாலா வகைகளுடன் ஊறவைத்து பொரிக்கலாம், அல்லது ஊறவைத்து பொரித்தெடுத்து, பின்னர் பொடியாக நறுக்கிய பூண்டு பச்சை மிளகாய் மற்றும் சில்லி சாஸ் உடன் சேர்த்து கலந்து சைனீஸ் ஸ்டைலில் செய்யலாம் . அதேபோல ஊறவைக்கும் பொழுதும் காரத்திற்கு தகுந்தவாறு மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம். முட்டைக்கு பதிலாக கெட்டியான தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.
சுவையான சிக்கன் 65 செய்ய சில குறிப்புகள்
- சிக்கன் செய்யும் பொழுது உங்கள் காரத்திற்கு தகுந்தவாறு மிளகாய்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
- மேலும் அரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது மற்றும் கரம் மசாலா சேர்த்து கொண்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
- சிக்கன் பொரித்து எடுத்த பின்பு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் வெங்காயம், ஆகியவற்றுடன் சில்லி சாஸ், சோயா சாஸ், குடை மிளகாய், ஆகியவற்றை சேர்த்து கலந்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
- ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்தால் மேலும் ஒரு மொறுமொறுப்பாக இருக்கும்.
- முட்டைக்கு பதிலாக நீங்கள் கால் கப் கெட்டித் தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.
இதர வகைகள் – சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவி, செட்டிநாடு சிக்கன் குழம்பு, தலப்பாகட்டி பிரியாணி, இறால் தொக்கு, சிக்கன் வருவல், முட்டை மசாலா, முட்டை தம் பிரியாணி, சிக்கன் 65, முட்டை ஃப்ரைட் ரைஸ், சில்லி சிக்கன், முட்டை குழம்பு, முட்டை கொத்து பரோட்டா.
See this Recipe in English
தேவையான பொருட்கள்
- 1/2 கிலோ எலும்பில்லாத சிக்கன்
- தேவையான அளவு உப்பு
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
- 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
- 1 தேக்கரண்டி மல்லித்தூள்
- 1/2 தேக்கரண்டி மிளகு தூள்
- 2 தேக்கரண்டி சோள மாவு
- 2 தேக்கரண்டி மைதா மாவு
- 1 எலுமிச்சம் பழத்தின் சாறு
- 1 முட்டை
- எண்ணெய் பொரிக்க தேவையான அளவு
- சிறிதளவு கறிவேப்பிலை
- சிறிதளவு பச்சை மிளகாய்
செய்முறை
1. சிக்கனை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அதனுடன் தேவையான அளவு உப்பு, 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், ஆகியவற்றை சேர்க்கவும்.
3. பின்னர் 1 தேக்கரண்டி மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி சீரகத்தூள், 1 தேக்கரண்டி மல்லித்தூள், 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள், ஆகியவற்றை சேர்க்கவும்.
4. பின்னர் 2 தேக்கரண்டி சோள மாவு, 2 தேக்கரண்டி மைதா மாவு, 1 எலுமிச்சம் பழத்தின் சாறு மற்றும் ஒரு முட்டை ஆகியவற்றை சேர்க்கவும்.
5. அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
6. 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
7. சூடான எண்ணெயில் சிக்கனை ஒவ்வொன்றாக சேர்த்து பொரிக்கவும்.
8. இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு திருப்பிப் போடவும்.
9. சிக்கன் நன்கு வெந்த பிறகு எண்ணெய் வடித்து தனியே எடுத்து வைக்கவும்.
10. கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை அதே எண்ணெயில் சேர்த்து பொரிக்கவும்.
11. சிக்கனுடன் கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து கலக்கவும். சுவையான சிக்கன் 65 தயார்.