சிக்கன் வறுவல் மசாலா அரைத்து செய்யப்படும் அசைவ உணவு. இது ரசம் சாதம், நெய் சோறு, பிரியாணி, சப்பாத்தி, தோசை, ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். சிக்கன் வறுவல் நாம் பலவிதமாக செய்யலாம், செட்டிநாடு சிக்கன் வறுவல், சிக்கன் ரோஸ்ட், சிக்கன் மசாலா ப்ரை, ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக செய்யப்படுகிறது. இந்த செய்முறையில் சுலபமான முறையில் விரைவாக சிக்கன் வறுவல் எவ்வாறு செய்வது என்பதை காணலாம்.
இதர சைவ குருமா வகைகள் – சால்னா, சோயா குருமா, வடைகறி, ரோட்டுக்கடை காளான் மசாலா, கத்திரிக்காய் கிரேவி, பன்னீர் கிரேவி, கும்பகோணம் கடப்பா, தக்காளி குருமா, ஆந்திரா கத்திரிக்காய் மசாலா, பூரி மசாலா, வெஜிடபிள் குருமா, சென்னா மசாலா, பன்னீர் பட்டர் மசாலா, காளிஃபிளவர் பட்டாணி குருமா.
அசைவ குருமா வகைகள் – இறால் தொக்கு, செட்டிநாடு சிக்கன் குழம்பு, முட்டை மசாலா, ஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி, முட்டை குழம்பு.
சிக்கன் ஊற வைக்க தேவையான பொருட்கள்
- சிக்கன் – 500 கிராம்
- உப்பு – தேவையான அளவு
- மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 1.5 தேக்கரண்டி
பூண்டு விழுது அரைக்க தேவையான பொருட்கள்
- பச்சை மிளகாய் – 3
- இஞ்சி – 1 துண்டு
- பூண்டு – 6 -7 பற்கள்
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
- காஷ்மீரி சிவப்பு மிளகாய் – 4
- சீரகம் – 1/2 தேக்கரண்டி
- மிளகு – 1/2 தேக்கரண்டி
- மல்லி – 1 தேக்கரண்டி
சிக்கன் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்
- சமையல் எண்ணெய் – 8 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் – 1 ( பொடியாக நறுக்கியது)
- கொத்தமல்லி இலை – சிறிது
- தக்காளி – 1 ( விழுதாக அரைத்தது)
- உப்பு – தேவையான அளவு
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
செய்முறை
1. 1/2 கிலோ சிக்கனை கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
2. 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 1.5 தேக்கரண்டி மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து வைக்கவும்.
3. அதனை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
4. ஒரு அம்மிக்கல் அல்லது மிக்சி ஜாரில் 3 பச்சை மிளகாய்,1 துண்டு இஞ்சி மற்றும் 6 – 7 பல் பூண்டு சேர்த்து நசுக்கி எடுத்துக்கொள்ளவும்.
5. ஒரு பேனில் 4 காய்ந்த மிளகாய்/ காஷ்மீரி சிவப்பு மிளகாய், 1/2 தேக்கரண்டி சீரகம், 1/2 தேக்கரண்டி மிளகு, 1 தேக்கரண்டி மல்லி, ஆகியவற்றை சேர்த்து மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
6. அதனை நைசாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
7. சிக்கன் 1 மணி நேரம் ஊறிய பிறகு, ஒரு பேனில் 4 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்துக் சூடாக்கவும்.
8. அதனுடன் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து 4 – 5 நிமிடங்களுக்கு வேக வைத்துக் கொள்ளவும்.
9. பின்னர் அதனை தனியே எடுத்து வைக்கவும்.
10. ஒரு கடாயில் 4 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
11. எண்ணெய் சூடானதும் 1 பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
12. வெங்காயம் ஓரளவு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி – பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
13. பின்னர் 1 பழுத்த தக்காளியை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.
14. தக்காளி வேகும் வரை வதக்கி கொள்ளவும்.
15. அதனுடன் தேவையான அளவு உப்பு, 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா, மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா பொடி சேர்த்து கலக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைக்கவும்.
16. இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள சிக்கனை அதனுடன் சேர்த்து கலக்கவும்.
17. மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
18. கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.
19. சுவையான சிக்கன் வருவல் தயாராக உள்ளது.