Egg Fried Rice in Tamil | முட்டை ஃப்ரைட் ரைஸ் | Fried Rice Recipe | How to make egg fried rice

See this Recipe in English

முட்டை ஃப்ரைட் ரைஸ்  ஒரு சுவையான சைனாவில் இருந்து பெறப்பட்ட உணவு வகை.  முட்டை பிரைட் ரைஸ், சில்லி சிக்கன், சிக்கன் ப்ரை, கோபி மஞ்சூரியன், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும். இது கேரட், பீன்ஸ், வெங்காயத்தாள், பட்டாணி, போன்ற காய்கறிகளோடு முட்டை சேர்த்து செய்யப்படுகிறது. இது தவிர சிக்கன் ப்ரைட் ரைஸ், காய்கறி பிரைட் ரைஸ், இறால் ஃப்ரைடு ரைஸ், மீன் ஃப்ரைட் ரைஸ், போன்றவையும் இந்தியாவின் தெருவோர கடைகளில் மிகவும் பிரபலம்.

முட்டை ஃப்ரைட் ரைஸ் மதியம் மற்றும் இரவு நேரங்களில் சுவையாக இருக்கும். மேலும் குழந்தைகளின்  உணவு டப்பாவிற்கு (lunch box) ஏற்ற உணவாகும். முட்டை ஃப்ரைட் ரைஸ் பலவிதங்களில் செய்யப்படுகிறது. சிலர் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், சில்லி சாஸ், கரம் மசாலா, மிளகாய் தூள், போன்றவற்றை சேர்த்து பிரைட் ரைஸ் செய்வார்கள். அது முற்றிலும் தவறானதாகும்.  பிரைட் ரைஸ் செய்யும் பொழுது பொடியாக நறுக்கிய பூண்டு, கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், போன்ற காய்கறிகள் மற்றும் மிளகுத்தூள், சோயா சாஸ் போன்றவை சேர்த்து செய்யப்படுகிறது.

சுவையான ஃப்ரைட் ரைஸ் செய்ய சில குறிப்புகள்

  • ப்ரைடு ரைஸ் செய்ய வடித்த சாதம் பயன்படுத்தவேண்டும். பிரஷர் குக்கரில் சாதம் வைத்து பயன்படுத்தும் பொழுது  சரியான சுவை கிடைக்காது.
  • சாதம் வடிக்கும் போது 90 சதவிகிதம் வெந்த பின்பு பயன்படுத்த வேண்டும். முழுவதுமாக வேகவைத்தால் பஞ்சு போன்று இருக்கும் அதனால் கிளறும்போது உடைய வாய்ப்பிருக்கிறது.
  • மேலும் பிரைட் ரைஸ் செய்ய காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு நிமிடம் காய்கறிகளை வாட்டி எடுத்தால் போதும்.
  • மிளகுத்தூள் உங்கள் காரத்திற்கு தகுந்தாற்போல் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • விருப்பப்பட்டால் கடைசியாக 1 தேக்கரண்டி சோயா சாஸ் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதர வகைகள் – சிக்கன் பிரியாணி,   சிக்கன் கிரேவி,  செட்டிநாடு சிக்கன் குழம்பு,  தலப்பாகட்டி பிரியாணிஇறால் தொக்கு, சிக்கன் வருவல்முட்டை மசாலா, முட்டை தம் பிரியாணி, சிக்கன் 65முட்டை ஃப்ரைட் ரைஸ், சில்லி சிக்கன், முட்டை குழம்பு,  முட்டை கொத்து பரோட்டா.

 

 

See this Recipe in English

முட்டை ஃப்ரைட் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்

  • 1 கப் பாஸ்மதி அரிசி (150 grams)
  • 4 முட்டை
  • 4 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  • 5  பூண்டு பற்கள்
  • 1/2 வெங்காயம்
  • 1/4 கப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள்
  • 1/4 கப் பொடியாக நறுக்கிய கேரட்
  • 10 பொடியாக நறுக்கிய பீன்ஸ்
  • உப்பு தேவையான அளவு
  • 1.5 தேக்கரண்டி மிளகுத்தூள்

முட்டை ஃப்ரைட் ரைஸ் செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் 1 கப் பாஸ்மதி அரிசி சேர்த்து கழுவி விட்டு 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

2. ஒரு பாத்திரத்தில் 3 அல்லது 4 கப் தண்ணீர் சேர்த்து சூடானதும் அதில் 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து கலக்கவும்.

3. மேலும் 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.

4. இப்பொழுது ஊறவைத்து தண்ணீர் வடித்து வைத்துள்ள பாசுமதி அரிசியை சேர்த்து கலக்கவும்.

5. 10 முதல் 12 நிமிடங்களுக்கு வேக வைத்துக் கொள்ளவும். முழுமையாக வேகாமல் 90 சதவிகிதம் வெந்தவுடன் தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும்.

6. ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்கவும்

7. ஒரு கடாயில் 4 முட்டை சேர்த்துக் கொள்ளவும்.

8. அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்து கலக்கவும்.

 9. முட்டை மென்மையாக வெந்தவுடன் தனியே எடுத்து வைக்கவும்.

 10. அதே கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

 11. எண்ணெய் சூடானதும் 5 பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள் சேர்த்து கலக்கவும்.

 12. ஓரளவு பொன்னிறமானதும் 1/2 பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொள்ளவும்.

 13. வெங்காயம் மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும்.

14. இப்பொழுது 1/4 கப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், 1/4 கப் பொடியாக நறுக்கிய கேரட், மற்றும் 10 பொடியாக நறுக்கிய பீன்ஸ் ஆகியவற்றை சேர்க்கவும்.

 15. 1 நிமிடம் அதிக தீயில் வைத்து வதக்கவும்.

 16. இப்பொழுது தேவையான அளவு உப்பு மற்றும் 1 தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்து கலக்கவும்.

 17. இப்பொழுது வடித்து ஆற வைத்துள்ள சாதத்தை சேர்த்துக் கொள்ளவும்.

18. சாதம் உடையாமல் மெதுவாக கிளறவும்.

19. கடைசியாக தயாராக வைத்துள்ள முட்டையை சேர்த்து கலக்கவும் சுவையான முட்டை ப்ரைடு ரைஸ் தயார்.

 20. பரிமாறுவதற்கு முன்பு சிறிதளவு வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

Leave a Reply