Eggless Mayonnaise in Tamil | முட்டை சேர்க்காத மயோனைஸ் | Mayonnaise without Egg | how to make eggless mayonnaise

See this Recipe in English

மயோனைஸ் பால்,  சமையல் எண்ணெய்,  வினிகர்  ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது  சிக்கன்,  ஷவர்மா,  சாண்ட்விச்,  பர்கர்  ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.  இதனை மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே  செய்யலாம்.  மயோனைஸ் செய்வதற்கு   ஹேண்ட் மிக்ஸர், பிலண்டர்,  போன்றவை இல்லாமல், வீட்டிலிருக்கும் மிக்ஸி பயன்படுத்தி மிகவும் சுலபமான முறையில் செய்யலாம்.  இதனை 1 – 2   நிமிடங்களுக்குள்ளாகவே செய்து முடிக்கலாம்.  சுவையான முட்டை சேர்க்காத மயோனைஸ் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

 சுவையான முட்டை சேர்க்காத மயோனைஸ் செய்ய சில குறிப்புகள்

  • ஏற்கனவே காய்ச்சி ஆற வைத்து, ஃப்ரிட்ஜில் வைத்த பாலை பயன்படுத்தவும். மயோனைஸ் செய்வதற்கு பால் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.
  • ஆலிவ் ஆயில் பயன் படுத்தி மயோனைஸ் செய்யப்படும்,  ஆலீவ் ஆயில் பயன் படுத்தலாம் அல்லது அதற்க்கு பதிலாக ஏதேனும் ஒரு சமையல் எண்ணெய் பயன்படுத்தி கொள்ளலாம்.  வாசனை ஏதுமில்லாத எண்ணையாக இருக்கவேண்டும்.  நல்லெண்ணெய்,  கடலை எண்ணெய்,  தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.
  • பூண்டு,  மிளகு  அல்லது நீங்கள் விருப்பப்பட்ட பொருளை சேர்த்து அரைத்துக் கொள்ளலாம் அது மயோனைஸ்க்கு கூடுதலான சுவையும் வாசனையும் தரும்.
  • பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் ஒரு வாரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
  • எண்ணெய், நீங்கள் பயன் படுத்தும் எண்ணை மற்றும் அதன் தரத்திற்கு ஏற்ப  குறிப்பிட்டுள்ள அளவைவிட சற்று கூடுதலாகவோ அல்லது சற்று குறைவாகவோ தேவைப்படும்.
  • உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை உங்கள் சுவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.
  • வினிகர் சேர்ப்பதற்கு பதிலாக அதே அளவு எலுமிச்சை பழ சாறு சேர்த்துக்கொள்ளலாம்.
  • மயோனைஸ் செய்யும்பொழுது எண்ணையை ஒட்டுமொத்தமாக சேர்க்காமல் சிறிது சிறிதாக சேர்த்து அடித்துக் கொள்ளவும்.  ஒட்டுமொத்தமாக சேர்க்கும் பொழுது மயோனைஸ் கெட்டித்தன்மை கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.

கோடை கால உணவுகள்

கஸ்டர்ட் சர்பத்

பால் சர்பத்

நன்னாரி சர்பத்

 பலுடா

கேரட் மில்க் ஷேக்

 

தேவையான பொருட்கள்

  • பால் –  ½  கப் – 125ml
  • சர்க்கரை – 1  தேக்கரண்டி
  • உப்பு  – ½  தேக்கரண்டி
  • வினிகர் – 1  தேக்கரண்டி
  • சமையல் எண்ணெய் – ¾  கப் – 180 ml

செய்முறை

1. ஒரு மிக்ஸி ஜாரில் ½  கப் பால் சேர்த்துக் கொள்ளவும்.

2. 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

3. 1/2 தேக்கரண்டி அல்லது தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

4. 1 தேக்கரண்டி வினிகர் சேர்த்துக் கொள்ளவும்.

5. மிக்ஸியின் பல்ஸ் (pulse) இல் வைத்து 10 வினாடிகள் விட்டுவிட்டு அடித்துக்கொள்ளவும். 

6. பின்னர் ¼  கப் சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

7. பல்ஸ் (pulse) இல் வைத்து 10 – 20 வினாடிகள் விட்டுவிட்டு அடித்துக்கொள்ளவும். 

8. இப்பொழுது மயோனைஸ் ஓரளவு கெட்டியாக இருப்பதை காணலாம்.

9. மீண்டும் ¼ கப் சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.  

10. 10 – 20 வினாடிகள் அதிக வேகத்தில் வைத்து அடித்துக்கொள்ளவும்.

11. மீண்டும் ¼  கப் சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

12. பல்ஸ் (pulse) இல் வைத்து 10 வினாடிகள் விட்டுவிட்டு அடித்துக்கொள்ளவும். 

13. மயோனைஸ்  கெட்டியாக இருப்பதை காணலாம்,  தேவைப்பட்டால் மீண்டும் எண்ணெய் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.

14. சுவையான முட்டை சேர்க்காத மயோனைஸ் தயார்.

Leave a Reply