See this Recipe in English
நெய்பிஸ்கட் மைதா மாவு சர்க்கரை மற்றும் நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனை பேக்கரி சுவையில் மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். இதற்கு அதிக அளவிலான பொருட்கள் தேவைப்படாது 3 – 4 பொருட்களை கொண்டே மிகவும் சுலபமாகவும் விரைவாகவும் செய்யலாம்.
சுவையான நெய் பிஸ்கட் செய்ய சில குறிப்புகள்
- நெய் பிஸ்கட் செய்வதற்கு மைதா மாவுக்கு பதிலாக அதே அளவு கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
- சர்க்கரை உங்கள் சுவைக்கேற்ப சேர்த்து சேர்த்துக்கொள்ளலாம்.
- சர்க்கரையுடன் நெய் சேர்க்கும் பொழுது அதனை உருக்கி சேர்த்துக்கொள்ளவும் கெட்டியாக சேர்க்கக்கூடாது.
- ஏலக்காய் சேர்ப்பதற்கு பதிலாக கால் தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
- பிஸ்கட்டை பேக் செய்யும் பொழுது 15 – 16 நிமிடங்கள் வைத்தால் பிஸ்கட் லேசான பொன்னிறத்தில் மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
- ஓவனில் இருந்து எடுத்த பிறகு அதனை 10 நிமிடங்கள் ஆற விட்டு பின்னர் சுவைக்கவும்.
இதர வகைகள்
கோதுமை பிஸ்கட்
ஓரியோ கேக்
முட்டை சேர்க்காத டூட்டி ஃப்ரூட்டி கேக்
முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக்
முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக்
ஹனி கேக்
ரவா கேக்
முட்டை சேர்க்காத சாக்லேட் கேக்
தேவையான பொருட்கள்
- சர்க்கரை – ½ கப்
- ஏலக்காய் – 2
- நெய் – ½ கப்
- மைதா மாவு – 1 கப்
செய்முறை
1. ஒரு மிக்ஸி ஜாரில் 1/2 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
2. அதனுடன் இரண்டு ஏலக்காய் சேர்க்கவும்.
3. அதனை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
4. பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டவும்.
5. அதனுடன் அரை கப் உருக்கிய நெய் சேர்த்துக் கொள்ளவும்.
6. கட்டியில்லாமல் கலக்கவும்.
7. பின்னர் ஒரு கப் மைதா மாவு சேர்க்கவும்.
8. அதனை சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும்.
9. பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி லேசாக தட்டி கொள்ளவும்.
10. அதனை ஒரு இன்ச் அளவு இடைவெளி யில் பேக்கிங் ட்ரேயில் அடுக்கவும்.
11. ஓவனை 180C/360F பிரீ ஹீட் செய்து கொள்ளவும். ஓவனில் வைத்து 12 முதல் 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.
12. பின்னர் வெளியே எடுத்து 10 நிமிடங்களுக்கு ஆற விடவும். சுவையான பேக்கரி ஸ்டைல் நெய் பிஸ்கட் தயார்.