Pav Bhaji recipe in Tamil | பாவ் பாஜி | Mumbai Style Pav Bhaji | How to make Pav Bhaji | Easy Pav Bhaji Recipe

See this Recipe in English

பாவ் பாஜி இந்தியா முழுவதும் கிடைக்கும் உணவு வகை, ஆனால் மும்பையில் இது மிகவும் பிரபலம். இது பன் மற்றும் காய்கறிகளுடன் பரிமாறப்படும் ஒரு சுவையான உணவு வகை. மேலும் இதில் நிறைய வெண்ணெய் சேர்க்கும் பொழுது, இது சுவையாகவும், மணமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். பாவ் பாஜி சுலபமாக வீட்டில் செய்யலாம். இது  சுவையான மதிய உணவு மற்றும் மாலை வேளைகளில் சிறந்த சிற்றுண்டி ஆகும்.

பாபாஜியின் பலவிதமாக செய்யப்படுகிறது. இதில் காய்கறிகளுடன் மஷ்ரூம் / காளான் சேர்த்து செய்யும் பொழுது சுவையான பாவ் பாஜி செய்யலாம். மேலும் சீஸ் துருவி மேலே சேர்க்கும் பொழுது சுவையான பாவ் பாஜி செய்யலாம். அதேபோல மிளகாய்த்தூள், கரம்மசாலா, போன்றவற்றை சேர்க்காமல் வெள்ளை நிறத்தில் பாவ் பாஜி செய்யலாம். இது மும்பை மற்றும் வட இந்தியா தவிர சென்னையில் தற்போதைய காலங்களில் பிரபலமாகி வருகிறது.

சுவையான பாவ் பாஜி செய்ய சில குறிப்புகள்

  • பாவ் பாஜி செய்யும்பொழுது நீங்கள் உங்களுக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக காலிஃப்ளவர், குடைமிளகாய், பீட்ரூட்,  போன்றவை சுவையாக இருக்கும்.
  • உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வெண்ணை குறைத்தோ அல்லது கூடவா சேர்த்துக்கொள்ளலாம். அதிக அளவில் வெள்ளை சேர்க்கும்போது சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
  • காய்கறிகளை வேக வைக்க நீங்கள் பிரஷர் குக்கர் பயன்படுத்தலாம் அல்லது பாத்திரத்தை மூடி வைத்து வேக வைக்கலாம்.
  • நீங்கள் விருப்பப்பட்டால் ஆரஞ்சு நிறம் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது நிறம் சேர்க்காமல் செய்யலாம்.

இதர ஸ்நாக்ஸ் வகைகள் – பன்னீர் பர்கர்பர்கர் பன், பர்கர் வடை, சோயா கட்லட், மசாலா பாஸ்தா,  பிரட் சில்லி, பிரெட் பீட்சா,  பட்டாணி மசாலா சுண்டல், காலிஃப்ளவர்  ஸ்னாக்ஸ், வெஜிடபிள் பர்கர்

 

 

See this Recipe in English

பஜ்ஜி செய்ய தேவையான பொருட்கள்

  • 10 தேக்கரண்டி வெண்ணை
  • 3 தக்காளி (நறுக்கியது)
  • 2 கேரட் (பொடியாக நறுக்கியது)
  • 10  பீன்ஸ் பொடியாக (நறுக்கியது)
  • 2 உருளைக்கிழங்கு (நறுக்கியது)
  • 1/2 கப் பச்சை பட்டாணி 
  • உப்பு தேவையான அளவு
  • 1 பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி சீரகத்தூள்
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு
  • 1 சிட்டிகை கேசரி கலர்
  • 6  பன்
  • 1/2 எலுமிச்சை பழம்

 பாவ் பாஜி செய்முறை

1. ஒரு பாத்திரம் அல்லது பிரஷர் குக்கரில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும்.

2. அதனுடன் 3 நறுக்கிய தக்காளி, 2 பொடியாக நறுக்கிய கேரட், 10 பீன்ஸ் ஆகியவற்றை சேர்க்கவும்.

3. மேலும் அரை கப் பச்சை பட்டாணி 2 பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு தேவையான அளவு உப்பு மற்றும் இந்த காய்கறிகள்  வேக தேவையான தண்ணீர் ஆகியவற்றை சேர்க்கவும்.

 4. பிரஷர் குக்கரை மூடி 3- 4 விசில் வைக்கவும் அல்லது மூடி வைத்து 20 – 25 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

 5. காய்கறிகள் நன்கு வெந்த பின்னர் ஒரு ம வைத்து மசித்து விடவும்.

6. இப்பொழுது ஒரு வானலியில் 4 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து சூடாக்கவும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று சேர்த்து வதக்கவும்.

7. அதனுடன் 1 தேக்கரண்டி இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

8. பின்னர் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி  சீரகத்தூள் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு ஆகியவற்றை  சேர்த்துக் கலக்கவும்.

9. பின்னர் 1 தேக்கரண்டி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, ஆகியவற்றை சேர்த்து மிளகாய் தூள் பச்சை வாசனை போகும் வரை கலக்கவும்.

 10. பின்னர் வேகவைத்த காய்கறிகளை இதனுடன் சேர்த்து கலக்கவும்.

11. இப்பொழுது 1 சிட்டிகை கேசரி கலர், 1/4 கப் தண்ணீரில் கரைத்து இதனுடன் சேர்த்து கலக்கவும்.

12. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

13. கடைசியாக 1 தேக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும், இப்போது பாவ்பாஜி மசாலா தயாராக உள்ளது.

 

14. ஒரு  தோசைக்கல்லில்  2 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து, சூடாக்கவும் பின்னர் பன் நடுவில் வெட்டி 2 பக்கமும் திருப்பி போட்டு வேக வைக்கவும்.

15. இப்போது பாவ் பாஜி மசாலா, பன் மற்றும் சிறிதளவு வெங்காயம் மற்றும் எலுமிச்சை பழம் சேர்த்து 1 தேக்கரண்டி வெண்ணெய் ஆகியவற்றுடன் பரிமாறவும். சுவையான பாவ் பாஜி தயார்.

Leave a Reply