Idiyappam in Tamil | இடியாப்பம் | String Hoppers in Tamil | how to make idiyappam

See this Recipe in English

இடியாப்பம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மற்றும் ஸ்ரீ லங்காவில் பிரபலமான காலை உணவு. கேரளா வில் நூல் புட்டு என்று அழைக்கப்படுகிறது. இடியாப்பம் அரிசி மாவு கொண்டு தயாரிக்கபடுகிறது. இதனை நீங்கள் தேங்காய் பால் சேர்த்து உண்ணலாம் அல்லது முட்டை குருமா மற்றும் சிக்கன் குருமாவுடனும் சுவையாக இருக்கும். இது தவிர மிளகு மற்றும் உப்பு சேர்த்து மிளகு இடியாப்பம் செய்யலாம் அல்லது சர்க்கரை மற்றும் தேங்காய் சேர்த்து இனிப்பு இடியாப்பம் செய்யலாம்.

idiyappam

வீட்டிலேயே இடியாப்பம் மாவு தயாரிப்பது எப்படி ?

  • பச்சரிசியை ஒன்று முதல் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • தண்ணீரை வடிகட்டி சுத்தமான துணியில் நிழலில் உலர்த்தவும், கண்டிப்பாக வெயிலில் உலர்த்தக்கூடாது.
  • உலர்ந்த பிறகு மிக்ஸி ஜாரில் அரிசியை சேர்த்து மிருதுவான மாவு தயாரிக்கவும்.
  • அதன் பிறகு ஒரு சல்லடை கொண்டு சலித்து வைத்துக் கொள்ளவும்.
  • வீட்டில் தயாரிக்கப்பட்ட மாவு கடையில் வாங்கும் மாவை விட மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.

மேலும் பலவிதமான உணவுகளை காண கீழே கிளிக் செய்யவும்

டிபன் வகைகள் – உடனடி தோசைஇட்லி அரிசி இடியாப்பம் , ரவா இட்லி, மசாலா இட்லி, பட்டூரா, கொத்து புரோட்டா, சிறுதானிய இட்லி, சில்லி இட்லி, குழிப்பணியாரம், பொடி இட்லி, பூரி, இடியாப்பம்.

See this Recipe in English

இடியாப்பம் செய்ய தேவையான பொருட்கள்

  •  அரிசி மாவு – 1 கப்
  •  தண்ணீர் – 1.5 கப்
  •  உப்பு  – தேவையான அளவு
  • எண்ணை – ஒரு ஸ்பூன்

செய்முறை

1. ஒரு கடாயில் அரிசி மாவு சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுக்கவும்.

idiyapam

2. ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்கவும் .

idiyapam

3. அதனை அரிசி மாவுடன் சிறிது சிறிதாக கலக்கவும்.

idiyapam

idiyappam

idiyappam

4. கை தாங்கும் சூடு வந்தவுடன் உங்கள் கைகளால் மிருதுவாக பிசையவும்.  தேவைப்பட்டால்.             சிறிது எண்ணை தொட்டுக் கொள்ளலாம்.

5. பிசைந்த மாவை சிறு சிறு பகுதிகளாக பிரித்து இடியாப்பக் குழலில் இடவும்.

idiyapam

6. இட்லித் தட்டு அல்லது இடியாப்ப தட்டில் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் ஆவியில்    வேகவிடவும்.    

idiyapam

idiyapam

7. சுவையான மற்றும் மிருதுவான இடியாப்பம் தயார்.

idiyappam

Leave a Reply