See this Recipe in English
சீரக சாதம் விரைவில் செய்யக்கூடிய ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு வகையாகும். இது குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற உணவாகும். சீரக சாதம் மஸ்ரூம் மசாலா, பன்னீர் பட்டர் மசாலா, மற்றும் தாளித்த பருப்புடன் சுவையாக இருக்கும்.
சுவையான ஜீரக சாதம் செய்ய சில குறிப்புகள்
- சீரக சாதம் செய்வதற்கு பாஸ்மதி அரிசி அல்லது சாதாரண அரிசி பயன்படுத்தலாம்.
- சாதம் வடிக்கும் போது அதிகம் குழையாமல் உதிர் உதிராக வடித்து கொள்ளவும்.
- சீரக சாதத்தை பிரஷர் குக்கரில் எளிமையான முறையில் செய்யலாம் அல்லது பட்டை, லவங்கம், மராத்தி முக்கு, மற்றும் சீரகம் தாளித்து வடித்த சாதத்துடன் கலந்து பரிமாறலாம், இரண்டு முறைகலுமே சுவையாக இருக்கும்.
- விருப்பப்பட்டால் காரத்திற்கு 2 பச்சை மிளகாய் அல்லது வர மிளகாய் சேர்த்துக்கொள்ளலாம்.
இதர மதிய உணவுகள்
காலிஃப்ளவர் சாதம்
தக்காளி சாதம்
புதினா சாதம்
தேங்காய் சாதம்
அரிசி பருப்பு சாதம்
சீரக சாதம் விரைவில் செய்யக்கூடிய ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு வகையாகும். இது குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற உணவாகும். சீரக சாதம் மஸ்ரூம் மசாலா, பன்னீர் பட்டர் மசாலா, மற்றும் தாளித்த பருப்புடன் சுவையாக இருக்கும்.
- 1 தேக்கரண்டி நெய்
- 1 கப் பாஸ்மதி அரிசி
- 3 தேக்கரண்டி சீரகம்
- 1 துண்டு பட்டை
- 1 அன்னாசி மொக்கு
- 1 ஏலக்காய்
- 3 லவங்கம்
- உப்பு தேவையான அளவு
-
பாஸ்மதி அரிசியை கழுவி 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து, ஊறியதும் தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
-
பிரஷர் குக்கரில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
-
சூடானதும் பட்டை லவங்கம் ஏலக்காய் மற்றும் அன்னாசி மொக்கு சேர்த்து தாளிக்கவும்.
-
பிறகு சீரகத்தை சேர்த்து வறுக்கவும்.
-
ஊற வைத்த அரிசியை சேர்த்து கலக்கவும்.
-
ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் சேர்த்து மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
-
பின்னர் பிரஷர் குக்கரை மூடி ஒரு சித்தம் வைக்கவும். சத்தம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
-
பிரஷர் ரிலீசானதும் குக்கரை திறந்து மென்மையாக கிளறிவிடவும்.
See this Recipe in English
செய்முறை
1. பாஸ்மதி அரிசியை கழுவி 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து, ஊறியதும் தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.
2. பிரஷர் குக்கரில் நெய்யை ஊற்றி சூடாக்கவும். சூடானதும் பட்டை, லவங்கம், ஏலக்காய், மற்றும் அன்னாசி மொக்கு சேர்த்து தாளிக்கவும்.
3. பிறகு சீரகத்தை சேர்த்து வறுக்கவும்.
4. ஊற வைத்த அரிசியை சேர்த்து கலக்கவும்.
5. ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் சேர்த்து மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
6. பின்னர் பிரஷர் குக்கரை மூடி ஒரு சித்தம் வைக்கவும். சத்தம் வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
7. பிரஷர் ரிலீசானதும் குக்கரை திறந்து மென்மையாக கிளறிவிடவும். சுவையான சீரக சாதம் தயார். இது எல்லாவிதமான சைவ மற்றும் அசைவ குருமாவுடன் சுவையாக இருக்கும்.