Kara Kozhukattai in Tamil | மணி கொழுக்கட்டை | கார கொழுக்கட்டை | Kozhukattai Recipe | How to make mani kozhukattai

See this Recipe in English

மணி கொழுகட்டை | கார கொழுக்கட்டை அம்மிணிக் கொழுக்கட்டை என்றும் கூறப்படுகிறது.  இதனை மிகச் சுலபமான முறையில் செய்யலாம் புதிதாக சமையல் கற்றுக் கொள்பவர்கள் மற்றும் கொழுக்கட்டை செய்பவர்கள் கூட மிகச் சுலபமான முறையில் இதனை செய்து முடிக்கலாம். விநாயகர் சதுர்த்தி அன்று பூரண கொழுக்கட்டை பிடி, கொழுக்கட்டை போன்ற இனிப்பு பதார்த்தங்கள் உடன் இதுபோல காரக்கொழுக்கட்டை வைத்து படைக்கலாம் அதேபோல தொடர்ந்து இனிப்பு வகைகளை சாப்பிடும் பொழுது திகட்டும் வாய்ப்புள்ளது. இனிப்பு கொழுக்கட்டை களுடன் கார கொழுக்கட்டை சேர்த்து சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.

 சுவையான கார கொழுக்கட்டை செய்ய சில குறிப்புகள்

  • கடைகளில் கிடைக்கும் இடியாப்ப மாவு அல்லது கொழுக்கட்டை மாவு பயன்படுத்தலாம் அல்லது அரிசி மாவு பயன்படுத்தியும் இதே முறையில் செய்யலாம்.
  • அரிசி மாவு பயன்படுத்துவதாக இருந்தால் அதனை வறுத்த பின்னர் கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கிளறவும். 
  • தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்த பின்னர் மாவுடன் சேர்க்கவும்.  சூடாக இருக்கும் போது சேர்த்தால் அரிசி மாவு வேகாது.
  • உருட்டி வைத்த கொழுக்கட்டை மாவை 7 முதல் 8 நிமிடங்கள் வேக வைத்தாலே போதுமானது கொதிக்கும் நீரில் அரிசி மாவு சேர்த்து பிசையும் பொழுது  ஓரளவு வெந்துவிடும்.

இதர வகைகள்

ராகி பிடி கொழுக்கட்டை

இனிப்பு பிடி கொழுக்கட்டை

தேங்காய் பூரண கொழுக்கட்டை

 கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை

எள்ளு பூரண கொழுக்கட்டை

 

 

 தேவையான பொருட்கள்

  • இடியாப்ப மாவு/கொழுக்கட்டை மாவு – ½  கப்
  • நல்லெண்ணெய் – 2 – 3  தேக்கரண்டி
  • கடுகு – ½  தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு – ½  தேக்கரண்டி
  • கருவேப்பிலை –  சிறிது
  • காய்ந்த மிளகாய் – 1 
  • பெருங்காயம் – 1  சிட்டிகை
  • உப்பு –  தேவையான அளவு
  • துருவிய தேங்காய் – 4  தேக்கரண்டி

 செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் ½ கப் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும்.

2. குறைவான தீயில் 3 முதல் 5 நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும். 

3. ஒரு பேனில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

4. அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

5. கொதித்த நீரை அரிசி மாவுடன் சேர்த்து கிளறவும்.

6. மாவு திரண்டு வந்த பிறகு ஒரு அகலமான பவுலில் கொட்டி கொள்ளவும்.

7. கை பொறுக்கும் சூடு வந்த பிறகு அதனை மென்மையாக பிசைந்து கொள்ளவும்.

8. பின்னர் அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி உருட்டி வைத்துள்ள மாவை வைக்கவும்.

9. இட்லி பாத்திரத்தில் வைத்து 7 – 8 நிமிடங்கள் வேக வைக்கவும்.

10. ஒரு கடாயில் 2  தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் ½   தேக்கரண்டி கடுகு, ½  தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 1  காய்ந்த மிளகாய்,  சிறிது  கருவேப்பிலை, ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

11. சிட்டிகை பெருங்காயத்தூள்,  தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

12. அதனுடன் வேக வைத் கொழுக்கட்டைகளை சேர்த்து கிளறவும்.

13. கடைசியாக துருவிய தேங்காய் சேர்த்து இறக்கவும்.

14. சுவையான கார கொழுக்கட்டை தயார்.

Leave a Reply