Crispy Kovakkai Fry in Tamil | கோவக்காய் வறுவல் | Teatime Snacks | Quick Snacks

See this Recipe in English

கோவக்காய் வறுவல் கோவக்காய் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த காய்கறி. கோவக்காய் பயன்படுத்தி பலவிதமான உணவுகளை செய்யலாம். தமிழ்நாட்டைவிட கோவக்காய் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகவும் பிரபலமான,  கோவக்காயை வைத்து பொரியல்,  வறுவல்,  துவட்டல், கொழுந்து,  கலந்த சாதம் போன்ற பல விதமான உணவு வகைகளை செய்யலாம்.கோவக்காய் வறுவல் சுவையான மற்றும் மொறுமொறுப்பான வறுவல்.  மாலை நேரங்களில் காபி அல்லது டீ யுடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். மதிய உணவுடன் சாப்பிடுவதற்கும் பிரமாதமாக இருக்கும். எலுமிச்சை சாதம்,  தக்காளி  சாதம்,  தயிர் சாதம்,  தேங்காய் சாதம்    ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். 

சுவையான கோவக்காய் வறுவல் செய்ய சில குறிப்புகள்

  • வறுவல் செய்வதற்கு கோவக்காயை மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • காய்கறி சீவும் கட்டையில்  மெலிதாக நறுக்கிக் கொள்ளலாம்.
  • பொரிக்கும் பொழுது மிதமான தீயை விட சற்று கூடுதலாக வைத்துக் கொள்ளவும்.
  • கோவக்காய் பொன்னிறமாகும் வரை வறுக்கவும் நன்றாக சிவந்த பின்னர் எடுத்தால் மொறுமொறுப்பாக இருக்கும் அல்லது மென்மையாக இருக்க வாய்ப்புள்ளது.
  • இதில் சேர்க்கப்பட்டுள்ள மிளகாய் தூள், மிளகாய் மற்றும் மல்லி ஆகியவற்றை சேர்த்து அரைப்பது, தனி மிளகாய் தூள் சேர்ப்பதாக இருந்தால் அதனுடன் மல்லித்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
  • இதே முறையில் வெங்காயம் மற்றும் வெண்டைக்காய் ஆகியவற்றை மெல்லியதாக சீவி பொரித்து எடுக்கலாம்.
  • விருப்பப்பட்டால் சிறிதளவு கறிவேப்பிலையை தனியாக வறுத்து மேலே தூவிக் கொள்ளலாம்.

இதர வகைகள்

பாசிப்பருப்பு ஃப்ரை

காலிஃப்ளவர் 65

 மெது பக்கோடா 

செட்டிநாடு ஸ்பெஷல் கார சீயம்

பர்கர் வடை

தயிர் வடை

பிரட் சில்லி

 தேவையான பொருட்கள்

  • கோவக்காய் – 300g
  • பூண்டு – 5 – 6  பற்கள்
  • பச்சை மிளகாய் – 2
  • கருவேப்பிலை –  சிறிது
  • உப்பு –  சுவைக்கேற்ப
  • மஞ்சள் தூள் – ¼  தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 1 ½  தேக்கரண்டி
  • அரிசி மாவு – 2  தேக்கரண்டி
  • கடலை மாவு – ½  தேக்கரண்டி
  • பெருங்காய தூள் –  சிறிதளவு
  • சமையல் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை

1. கோவக்காயை ஒருமுறை கழுவி காம்பு பகுதியை வெட்டி எடுக்கவும். பின்னர் அதனை நைஸாக வெட்டிக்கொள்ளவும் அல்லது சிப்ஸ் கட்டையில் தேய்த்து மெலிசாக சீவிக் கொள்ளவும்.

2. அதனுடன் 5 பல் பூண்டு பற்களை தட்டி சேர்த்துக் கொள்ளவும், 2  பச்சை மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை சேர்க்கவும்.

3. தேவையான அளவு உப்பு, 2 தேக்கரண்டி அரிசி மாவை சேர்த்துக் கொள்ளவும்.

4. 3 தேக்கரண்டி கடலைமாவு சேர்க்கவும்.

 

5. 2 தேக்கரண்டி அல்லது காரத்திற்கேற்ப மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

6. கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

 

7. பின்னர் எல்லாவற்றையும் நன்றாக கலந்த பின்னர்,  சிறிது தண்ணீர் சேர்த்து பக்கோடா பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

8. கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெயை சூடாக்கி, மிதமான தீயை விட சற்று கூடுதலான தீயில் வைத்து கொள்ளவும்.

9. கோவக்காயை சிறிது சிறிதாக எடுத்து போடவும். அவ்வப்போது திருப்பி போடவும்.

10. பொன்னிறமாகும் வரை வறுத்து பின்னர் எண்ணையை வடித்து தனியே எடுக்கவும்.

11. சுவையான கோவக்காய் வறுவல் தயார்.

Leave a Reply