Moong Dal Fry in Tamil | பாசிப்பருப்பு ஃப்ரை | Crispy Moong dal recipe

மொறுமொறுப்பான பாசிப்பருப்பு வருவல் மூங் தால் ஃப்ரை என்று அழைக்கப்படுகிறது.  இது  சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சிற்றுண்டி வகை. மாலை நேரங்களில் கொரிப்பதற்கு சிப்ஸ் போன்றவற்றை தவிர்த்து இதுபோன்று பாசிப்பருப்பை வறுத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது அதே சமயத்தில் விலையும் குறைவு. நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில் செய்யலாம். இதனை ஒரு மாதம் வரை  ஏர் டைட் டப்பாவில் போட்டு மூடி வைக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்தது.

சுவையான பாசிப்பருப்பு ஃப்ரை செய்ய சில குறிப்புகள்

  1. மூங் தால் ஃப்ரை செய்வதற்கு தரமான பாசிப்பருப்பு பயன்படுத்திக் கொள்ளவும்.
  2. 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் ஊற வைத்து பின்னர்  பயன்படுத்தவும்.
  3. பருப்பு சரியாக ஊற வில்லை என்றால் ஃப்ரை செய்யும்போது கடிப்பதற்கு கடினமாக இருக்கும்.
  4. சலசலப்பு அடங்கும் வரை வறுத்துக் கொள்ளவும் அதேநேரத்தில் பாசிபருப்பு நிறம் மாறாமல் இருக்க வேண்டும்.
  5. நான் சுவைக்காக உப்பு மட்டும் சேர்த்து உள்ளேன். நீங்கள் விருப்பப்பட்டால் மிளகாய் தூள் அல்லது மிளகுத்தூள் சேர்த்து கொள்ளலாம்.

இதர சிற்றுண்டி வகைகள் – காராபூந்தி,  சில்லி மசாலா இட்லி, மெது பக்கோடா, செட்டிநாடு ஸ்பெஷல் கார சீயம், மசாலா பிரட் டோஸ்ட், ராகி புட்டு, சோயா கட்லட், மசாலா பாஸ்தா,  பிரட் சில்லி, பாசிப்பருப்பு ஃப்ரை, போண்டா சூப், பிரெட் பீட்சா, உடனடி மெதுவடை,  உருளைக்கிழங்கு ரிங்ஸ், சேமியா போண்டா, சாம்பார் வடை,காலிஃப்ளவர்  ஸ்னாக்ஸ்.

தேவையான பொருட்கள்

  • பாசிப்பருப்பு –  1 கப் / 200g
  • உப்பு –  ½  தேக்கரண்டி
  • சமையல் எண்ணெய் –  பொரிக்க தேவையான அளவு

செய்முறை

  1. ஒரு கப் பாசிப்பருப்பை 2 முறை அலசிக் கொள்ளவும்.
  2. பின்னர் தண்ணீர் ஊற்றி  3 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  3. மூன்று மணி நேரத்திற்குப் பிறகு ஒரு வடிகட்டியில் போட்டு தண்ணீரை வடித்து விடவும்.
  4. பின்னர் ஒரு காட்டன் துணியை விரித்து வைத்து 1/2 மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை காய வைக்கவும்.
  5. பாசிப்பருப்பு நன்றாக காய்ந்த பின்னர் ஒரு வடிகட்டியில் இரண்டு கைப்பிடி அளவு  போட்டுக் கொள்ளவும்.
  6. அதனை வடிகட்டி உடன் சேர்த்து சூடான எண்ணெயில் வைத்து பொரிக்கவும்.
  7. ஒரு ஸ்பூன் கொண்டு அவ்வப்போது கிளறி விடவும்.
  8. சலசலப்பு அடங்கிய பின்னர் எண்ணெயை வடித்து விட்டு தனியே எடுக்கவும்.
  9. கிச்சன் டிஷ்யூ பேப்பரில் வைத்து எண்ணெயை வடிக்கவும்.
  10. பின்னர் சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
  11. சுவையான பாசிப்பருப்பு ஃப்ரை தயார்.
  12. ஆறிய பின்னர் ஏர் டைட் டப்பாவில் போட்டு வைக்கவும். 

செய்முறை

1. ஒரு கப் பாசிப்பருப்பை 2 முறை அலசிக் கொள்ளவும்.

2. பின்னர் தண்ணீர் ஊற்றி  3 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

3. மூன்று மணி நேரத்திற்குப் பிறகு ஒரு வடிகட்டியில் போட்டு தண்ணீரை வடித்து விடவும்.

4. பின்னர் ஒரு காட்டன் துணியை விரித்து வைத்து 1/2 மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை காய வைக்கவும்.

5. பாசிப்பருப்பு நன்றாக காய்ந்த பின்னர் ஒரு வடிகட்டியில் இரண்டு கைப்பிடி அளவு  போட்டுக் கொள்ளவும்.

6. அதனை வடிகட்டி உடன் சேர்த்து சூடான எண்ணெயில் வைத்து பொரிக்கவும்.

7. ஒரு ஸ்பூன் கொண்டு அவ்வப்போது கிளறி விடவும்.

8. சலசலப்பு அடங்கிய பின்னர் எண்ணெயை வடித்து விட்டு தனியே எடுக்கவும்.

9. கிச்சன் டிஷ்யூ பேப்பரில் வைத்து எண்ணெயை வடிக்கவும்.

10. மேலே ஒட்டியிருக்கும் எண்ணெயை ஒரு கிச்சன் பேப்பர் வைத்து ஒற்றி எடுக்கவும்.

11. பின்னர் சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

12. சுவையான பாசிப்பருப்பு ஃப்ரை தயார்.

13. ஆறிய பின்னர் ஏர் டைட் டப்பாவில் போட்டு வைக்கவும்.

Leave a Reply