Curd Vadai in Tamil | தயிர் வடை | Thayir vadai | Thayir vadai recipe

தயிர்வடை தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான உணவு வகை. உளுந்த வடை செய்து அதனை  தாளித்த தயிர் கலவையில் ஊற வைத்து சாப்பிடுவதே தயிர்வடை என்று கூறப்படுகிறது. பொதுவாக தயிர்வடை கடைகளில் வாங்கி சாப்பிடுவார்கள் ஆனால் அதனை மிகவும் சுலபமான முறையில் வீட்டில் செய்யலாம். கடையில் செய்வது போன்ற அதே சுவையுடன் செய்வதற்கு ஒரு சில குறிப்புகளை நாம் சரியாக செய்தாலே போதும் சுவையான தயிர் வடை செய்து வீட்டில் உள்ள அனைவரது பாராட்டுகளையும் பெறலாம்.  சுவையான தயிர் வடை நீங்களும் ஒருமுறை செய்து சுவைத்து மகிழுங்கள்.

 சுவையான தயிர் வடை செய்ய சில குறிப்புகள்

  1. தயிர் வடை செய்வதற்கு வடை பொரிக்கும்போது மொறுமொறுப்பாக வேண்டாம் வடை வெந்து ஓரளவு பொன்னிறமானதும் எடுத்து விடலாம்.
  2. தயிர் சேர்க்கும் பொழுது சரியான புளிப்பு சுவையுள்ள தயிர் சேர்த்துக் கொள்ளவும். மிகவும் புளித்த அல்லது புளிப்பில்லாத தயிர் பயன்படுத்த வேண்டாம்.
  3. வடை செய்தபின்னர் தயிர் உப்பு கலந்த தண்ணீரில் 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின்னர் தயிரில் போடவும்.
  4. தண்ணீரிலிருந்து வடையை எடுத்து தயிரில் போடும் போது தண்ணீரை பிழியக்கூடாது ஊறவைத்த தண்ணீருடன் தயிரில் ஊற வைக்கும் பொழுது தான் மென்மையாகவும் அதே சமயத்தில் சுவையாகவும் இருக்கும்.

இதர சிற்றுண்டி வகைகள் – காராபூந்தி,  சில்லி மசாலா இட்லி, மெது பக்கோடா, செட்டிநாடு ஸ்பெஷல் கார சீயம், மசாலா பிரட் டோஸ்ட், ராகி புட்டு, சோயா கட்லட், மசாலா பாஸ்தா,  பிரட் சில்லி, பாசிப்பருப்பு ஃப்ரை, போண்டா சூப், பிரெட் பீட்சா, உடனடி மெதுவடை,  உருளைக்கிழங்கு ரிங்ஸ், சேமியா போண்டா, சாம்பார் வடை,காலிஃப்ளவர்  ஸ்னாக்ஸ்.

 

 

தயிர் வடை செய்ய தேவையான பொருட்கள்

  • உளுத்தம் பருப்பு –  1 கப் / 200 g
  • எண்ணை  – பொரிக்க தேவையான அளவு
  • தயிர் –  1 லிட்டர்
  • சமையல் எண்ணெய் –  2  தேக்கரண்டி 
  • கடுகு –  ½  தேக்கரண்டி
  • சீரகம் –  ½  தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு –  ½  தேக்கரண்டி
  • கடலைப்பருப்பு –  1 தேக்கரண்டி 
  • கருவேப்பிலை –  சிறிதளவு
  • காய்ந்த மிளகாய் – 1 
  • இஞ்சி – 1  துண்டு 
  • பச்சை மிளகாய் – 2 
  • உப்பு –  தேவையான அளவு

செய்முறை

  1. உளுத்தம் பருப்பை நன்றாக கழுவி 2 முதல் 4 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  2. ஊறிய பின்னர் கிரைண்டர் அல்லது மிக்சி ஜாரில் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  3. பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  4. அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் துளையிட்டு சூடான எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
  5. மாவு வெந்து பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து விட்டு எடுக்கவும்.
  6. இதே போல எல்லா மாவிலும் வடை செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். 
  7. ஒரு பவுலில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அதனுடன் 1/2 தேக்கரண்டி உப்பு மற்றும் 3 தேக்கரண்டி தயிர் சேர்த்துக்  கலக்கவும்.
  8. பொரித்து வைத்துள்ள வடைகளை போட்டு 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
  9. ஒரு லிட்டர் தயிரை கட்டிகளில்லாமல் அடித்துக் கொள்ளவும்.
  10. ஒரு பானில் 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து சூடானதும் 1/2 தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி சீரகம், 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு,  1 தேக்கரண்டி கடலைப்பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
  11. அதனுடன் சிறிதளவு கருவேப்பிலை, 1 காய்ந்த மிளகாய், 1 துண்டு இஞ்சி மற்றும் 2 பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  12. இவற்றை ஓரளவு வதக்கிய பின்னர் தயாராக வைத்துள்ள தயிரில் சேர்த்துக் கொள்ளவும்.
  13. அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
  14. பின்னர் ஊற வைத்துள்ள வடைகளை ஒவ்வொன்றாக ஒரு ட்ரேயில் அடுக்கி கொள்ளவும்.
  15. அதன்மீது தாளித்து வைத்துள்ள தயிர் கலவையை ஊற்றவும்.
  16. நன்றாக கலந்த பின்னர் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
  17. ஊறிய பின்னர் பரிமாறவும்
  18. சுவையான தயிர் வடை தயார். 

செய்முறை

1. உளுத்தம் பருப்பை நன்றாக கழுவி 2 முதல் 4 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.

2. ஊறிய பின்னர் கிரைண்டர் அல்லது மிக்சி ஜாரில் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

3. பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

4. அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் துளையிட்டுக் கொள்ளவும்.

5. சூடான எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

6. மாவு வெந்து பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து விட்டு எடுக்கவும்.

7. இதே போல எல்லா மாவிலும் வடை செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். 

8. ஒரு பவுலில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் 1/2 தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கலக்கவும்.

9. 3 தேக்கரண்டி தயிர் சேர்த்துக் கலக்கவும்.

10. பொரித்து வைத்துள்ள வடைகளை போட்டு 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

11. ஒரு லிட்டர் தயிரை கட்டிகளில்லாமல் அடித்துக் கொள்ளவும்.

12. ஒரு பானில் 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து சூடானதும் 1/2 தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி சீரகம், 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு,  1 தேக்கரண்டி கடலைப்பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு கருவேப்பிலை, 1 காய்ந்த மிளகாய், 1 துண்டு இஞ்சி மற்றும் 2 பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

13. இவற்றை ஓரளவு வதக்கிய பின்னர் தயாராக வைத்துள்ள தயிரில் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

14. பின்னர் ஊற வைத்துள்ள வடைகளை ஒவ்வொன்றாக ஒரு ட்ரேயில் அடுக்கி கொள்ளவும்.

15. அதன்மீது தாளித்து வைத்துள்ள தயிர் கலவையை ஊற்றவும்.

16. நன்றாக கலந்த பின்னர் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.

17. ஊறிய பின்னர் பரிமாறவும்.

18. சுவையான தயிர் வடை தயார். 

Leave a Reply