Nannari Sharbath in Tamil | நன்னாரி சர்பத் | Sarbath Recipe | Summer Drink | how to make nannari sarbath

See this Recipe in English

நன்னாரி வேர் ஒரு ஆயுர்வேத மூலிகை,  இது இந்தியா மட்டுமின்றி தெற்காசியாவின் பல பகுதிகளில் கிடைக்கிறது. நன்னாரி சர்பத் இயற்கையாகவே உடலை குளிர்விக்க பயன்படுகிறது மேலும் நீர் இழப்பு ஏற்படாமல் தடுத்து,  புத்துணர்ச்சி அளிக்க கூடியது. வெயில் காலங்களில் பொதுவாக ஏற்படக்கூடிய சிறுநீர் தொற்று, செரிமானக் கோளாறுகள்,  மலச்சிக்கல் மற்றும் பசியின்மை ஆகியவற்றை போக்கக்கூடியது,  கோடைகாலங்களில் தினமும் ஒரு கப் நன்னாரி சர்பத் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிக மிக நல்லது.  

நன்னாரி வேரில் பலவிதமான சிறப்புகள் உள்ளது.  இதனை பயன்படுத்தி பலவிதமான சர்பத் வகைகளை செய்யலாம்.  நன்னாரி  எலுமிச்சை சர்பத்,  நன்னாரி இளநீர் சர்பத்,  நன்னாரி நுங்கு சர்பத்,  நன்னாரி லெமன் சோடா  ஆகியவை பிரபலமாக தெருவோரக் கடைகளில் கிடைக்கும்.

இந்த பதிவில், பாதாம் பிசின் மற்றும் துளசி விதைகளை சேர்த்து நன்னாரி சர்பத் செய்முறையை பதிவிட்டுள்ளேன். பாதாம் பிசின் மற்றும் துளசி விதைகள் ஏராளமான நன்மைகளை கொண்டது மிக முக்கியமாக இவை இரண்டு பொருட்களுமே உடல் சூட்டை தணிக்க பயன்படக்கூடியது 

துளசி விதைகள் சப்ஜா விதைகள் என்றும் அழைக்கப்படுகிறது  இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்க உதவும், உடல் எடையை குறைப்பதற்கு மற்றும் மலச்சிக்கலுக்கு உகந்ததாகும்.

பாதாம் பிசின் இயற்கையாகவே உடல் சூட்டை தணித்து உடலை குளிர வைக்க பயன்படுகிறது. பாதாம் பிசின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உகந்தது மற்றும் உடல் தசைகளை வலுப்படுத்த ஏற்றதாகும். 

வீட்டிலேயே நன்னாரி சிரப் தயாரிப்பது எப்படி?

  • நன்னாரி வேர்களை 2 முதல் 3 முறை தண்ணீரில் நன்கு தேய்த்து களிமண் வேரில் இருந்து வெளியேறும் வரை கழுவ வேண்டும்.
  • அதில் ஈரப்பதம் இல்லாத வரை உலர வைக்கவும்.
  • நுண்ணிய வேர்களை எடுத்து நசுக்கி நடுப்பகுதியை அகற்றவும்.
  • அதை ஒரு கல்லில் எடுத்து நசுக்கவும்.
  • இப்போது இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • ஊறிய பின்னர், தண்ணீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுக்கவும்.
  • ஒரு கப் நன்னாரி வேர்க்கு ஒரு கப் வீதம் சர்க்கரை  சேர்த்துக் கொள்ளவும் மற்றும் 1 எலுமிச்சை பழத்தின் சாறு சேர்த்து கொதிக்க வைக்கவும். 
  • 20 முதல் 30  நிமிடங்கள் வரை அல்லது 1 கம்பிப் பதம் வரும் வரை கொதிக்க வைக்கவும்.
  • ஆறவைத்து, காற்றுப்புகாத பாட்டிலில் சேமித்து வைக்கவும்.

சுவையான நன்னாரி சர்பத் செய்ய சில குறிப்புகள்

  • துளசி விதைகள் மற்றும் பாதாம் பிசின் ஆகியவற்றை உங்கள் தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும், அவற்றின் சுவை மற்றும் மணம் இருக்காது என்பதால் சர்ப்பத்தின் சுவையில் எந்த மாற்றமும் இருக்காது.
  • பாதாம் பிசினை அப்படியே ஊற வைத்தால் 10 முதல் 15 மணி நேரம் வரை ஆகும்,  அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்த பின்னர் ஊற வைத்தால் இரண்டு மணிநேரங்களில் ஊறிவிடும்.
  • நன்னாரி  சிரப்பில் ஏற்கனவே சர்க்கரையை இருப்பதால், சர்பத்  செய்யும்பொழுது தனியாக சர்க்கரை சேர்க்க தேவையில்லை.
  • எலுமிச்சை பழத்தின் சுவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.
  •  கடைசியாக சிறிது ஐஸ் கட்டிகள் சேர்த்து கொள்ளலாம் அல்லது ஐஸ் வாட்டர் சேர்த்து செய்யலாம்.
  • நன்னாரி சிரப் பிராண்டை பொறுத்து சுவை மாறும் அதற்கேற்றார் போல் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

இதர குளிர்பான வகைகள்

பலுடா

பால் சர்பத்

பழ சர்பத்

கேரட் மில்க் ஷேக்

கோடை காலத்திற்கு 5 விதமான பானங்கள்

 

See this Recipe in English

நன்னாரி சர்பத் செய்ய தேவையான பொருட்கள் (2 கப் நன்னாரி சர்பத் செய்ய தேவையானவை) 

  • நன்னாரி சிரப் – 10  தேக்கரண்டி
  • தண்ணீர் – 300 ml
  • எழுமிச்சை சாறு – 4 தேக்கரண்டி
  • பாதாம் பிசின் – 3 துண்டுகள் 
  • துளசி விதைகள் – 2 – 3 தேக்கரண்டி

செய்முறை

1. ஒரு கப்பில் 2 – 3  பாதாம் பிசின் துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும்,  அப்படியே ஊற வைப்பதாக இருந்தால் 10 – 15  மணி நேரம் ஊற வைக்கவும்.

2. மிக்ஸியில் பொடியாக்கிய பின்னர் ஊற வைக்கவும்.  2 மணி  நேரத்தில்  ஊறிவிடும்.

3. ஒரு சிறிய கப்பில் 2 – 3  தேக்கரண்டி  துளசி விதைகள் சேர்த்துக் கொள்ளவும். 

4. சிறிதளவு தண்ணீர் சேர்த்து பதினைந்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

5. வீட்டில் தயாரித்த அல்லது கடைகளில் வாங்கிய நன்னாரி சிரப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

6. ஒரு கிளாஸில் 2  தேக்கரண்டி ஊறவைத்த பாதாம் பிசின் சேர்த்துக் கொள்ளவும்.

7. 2 – 3  தேக்கரண்டி ஊறவைத்த துளசி விதைகள் சேர்த்துக் கொள்ளவும்.

8. நன்னாரி சிரப் சேர்க்கவும், 150ml தண்ணீருக்கு 5  தேக்கரண்டி வீதம் நன்னாரி சிரப் சேர்த்து கொள்ளவும்.

9. 2  தேக்கரண்டி அல்லது  தேவையான அளவு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளவும்.

10. தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

11. நன்றாக கலக்கவும். விருப்பப்பட்டால் ஐஸ் வாட்டர் அல்லது ஐஸ்கட்டிகள் சேர்க்கலாம்.

12. சுவையான, உடலுக்கு குளிர்ச்சியான  நன்னாரி சர்பத் தயார். 

Leave a Reply