Salna in Tamil | Parotta salna in tamil | சால்னா | Salna recipe | Plain Salna

See this Recipe in English

சால்னா பரோட்டா மட்டுமன்றி சப்பாத்தி, இட்லி, தோசை ஆகியவற்றுடனும் சுவையாக இருக்கும்.  சால்னா பல ஊர்களில் பல விதமான முறைகளில் செய்யப்படுகிறது. குறிப்பாக ரோட்டு கடைகளில் கிடைக்கும் சால்னா மிகவும் சுவையாக இருக்கும்.  சுவையான சால்னா சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

 சுவையான சால்னா செய்ய சில குறிப்புகள்

  • சால்னா செய்ய வெங்காயத்தை வதக்கும் பொழுது பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • தவறாமல் புதினா இலைகளைச் சேர்த்துக் கொள்ளவும்,  புதினாவின் மணம் சால்னா விற்கு தனிச்சுவை தரும்.
  • மசாலா விழுது அரைக்க பெரிய வெங்காயதிற்கு பதிலாக சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கலாம். 
  • மசாலா விழுதை பச்சை வாசனை போக நன்றாக வதக்கிய பிறகு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். 
  • தேங்காய் விழுது அரைக்கும் பொழுது முந்திரி பருப்புடன் சிறிதளவு பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ளலாம்,  அல்லது முந்திரிப்பருப்பு சேர்க்காமல் வெறும் பொட்டுக்கடலை மட்டும் சேர்த்து அரைக்கலாம்.
  • உங்கள் காரத்திற்கேற்ப மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

இதர சைவ குருமா வகைகள் – சோயா குருமாவடைகறிரோட்டுக்கடை காளான் மசாலாகத்திரிக்காய் கிரேவிபன்னீர் கிரேவிகும்பகோணம் கடப்பாதக்காளி குருமாஆந்திரா கத்திரிக்காய் மசாலாபூரி மசாலாவெஜிடபிள் குருமாசென்னா மசாலாபன்னீர் பட்டர் மசாலாகாளிஃபிளவர் பட்டாணி குருமா.

அசைவ குருமா வகைகள் –  இறால் தொக்குசெட்டிநாடு சிக்கன் குழம்புமுட்டை மசாலாஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவிமுட்டை குழம்பு.

 

 

See this Recipe in English

 

சால்னா செய்ய தேவையான பொருட்கள்

மசாலா விழுது அரைக்க தேவையான பொருட்கள்

  • பிரிஞ்சி இலை – 2
  • பட்டை – 1  துண்டு 
  • கிராம்பு – 3 
  • ஏலக்காய் – 4
  • மிளகு – ½  தேக்கரண்டி
  • சீரகம் – ½  தேக்கரண்டி
  • பூண்டு பற்கள் – 8
  • இஞ்சி – 1  துண்டு
  • வெங்காயம் –  சிறிது

தேங்காய் விழுது அரைக்க தேவையான பொருட்கள்

  • துருவிய தேங்காய் – 1 கப்
  • முந்திரிப் பருப்பு – 6 – 8
  • கசகசா – ½  தேக்கரண்டி

இதர பொருட்கள்

  • கடலை எண்ணெய் – 6  தேக்கரண்டி 
  • சோம்பு – ½  தேக்கரண்டி
  • பட்டை – 1  துண்டு
  • ஏலக்காய் – 3
  • கிராம்பு – 3
  • பெரிய வெங்காயம் – 1   (நீளவாக்கில் நறுக்கியது)
  • பழுத்த தக்காளி – 1
  • புதினா இலைகள் –  சிறிது (பொடியாக நறுக்கியது)
  • மஞ்சள் தூள் – ½  தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 2  தேக்கரண்டி
  • மல்லித் தூள் – ½  தேக்கரண்டி
  • உப்பு –   தேவையான அளவு 

செய்முறை

1. ஒரு கடாயில் 6  தேக்கரண்டி கடலை எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

2. எண்ணெய் சூடானதும் 1/2 தேக்கரண்டி சோம்பு சேர்த்துக் கொள்ளவும்.

3. சோம்பு பொரிந்ததும்,  1 துண்டு பட்டை, 3 ஏலக்காய், மற்றும் 3 கிராம்பு சேர்த்துக் கொள்ளவும்.

4. லேசாக வறுத்த பின்னர் ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும்.

5. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் 1 பழுத்த தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்துக் கொள்ளவும்.

6. அதனுடன் சிறிதளவு புதினாவை பொடியாக நறுக்கி  சேர்த்து வதக்கவும்.

7. ஒரு மிக்ஸி ஜாரில் 2 பிரிஞ்சி இலை சேர்த்துக் கொள்ளவும்.

8. அதனுடன் 1 துண்டு பட்டை, 3 கிராம்பு 4 ஏலக்காய் சேர்க்கவும்.

9. 1/2 தேக்கரண்டி மிளகு சேர்த்துக் கொள்ளவும்.

10. 1/2 தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கொள்ளவும்.

11. 8 பல் பூண்டு சேர்த்துக் கொள்ளவும்.

12. 1 துண்டு இஞ்சி தோல் நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

13. சிறிதளவு வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.

 14. இதனை நைசாக அரைத்து எடுத்து வைக்கவும்.

15. வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்க்கவும்.

 16. பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும்.

17. வதங்கிய பின்னர் தேவையான அளவு உப்பு,  1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்,  2 தேக்கரண்டி மிளகாய் தூள்,  மற்றும் 1/2 தேக்கரண்டி மல்லித்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

18. மேலும் 1 நிமிடத்திற்கு வதக்கவும்.

19. பின்னர் தேவையான அளவு தண்ணீர்  சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.

20.  ஒரு மிக்ஸி ஜாரில்,  1 கப் தேங்காய், 6 – 8  முந்திரிப் பருப்பு  மற்றும் 1/2 தேக்கரண்டி கசகசா சேர்க்கவும்.

21. அதனை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

22.  ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும்வரை   மசாலா கொதித்த பின்னர்,  அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்க்கவும்.

23. தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.  அதனை மூடி வைத்து 10 முதல் 12 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

24. இப்பொழுது ஓரங்களில் என்னை பிரிந்து  இதமான வாசனை வருவதைப் பார்க்கலாம்.

25. சுவையான பரோட்டா சால்னா தயார்.

Leave a Reply