Caramel Payasam in Tamil | கேரமல் பாயாசம் | How to make caramel payasam in Tamil

See this Recipe in English

கேரமல் பாயாசம் ஒரு புதுமையான, சுவையான, வித்தியாசமான பாயசம் வகை. தென்னிந்தியாவில் பலவிதமான பாசங்கள் புகழ்பெற்றவை பால்பாயசம், சேமியா பாயசம், ஜவ்வரிசி பாயாசம், போன்றவை விசேஷ நாட்களில் செய்யப்படுகின்றன. கேரமல் பாயாசம் என்பது சர்க்கரையை உருக்கி கேரமல் செய்து பின்னர் அதனை பாயசத்தில் சேர்த்து செய்யப்படும் சுவையான பாயாசம் வகை. வழக்கமான பாயசம் வகைகள் இருந்து இதன் சுவை மாறுபட்டு இருக்கும். குழந்தைகள் இதனை விரும்பி உண்பார்கள். சுவையான  கேரமல் பாயசம் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். 

சுவையான கேரமல் பாயாசம் செய்ய சில குறிப்புகள்

  • கேரமல் பாயாசம் சேமியா சேர்த்து செய்துள்ளேன் நீங்கள் சேமியாவிற்கு பதிலாக ஜவ்வரிசி, ரவை, போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை இதே முறையில் வறுத்து வேகவைத்து பின்னர் பாயசம் செய்யலாம்.
  • சேமியா வெந்தவுடன் பால் சேர்த்து 15 – 20 நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க வைத்தால் தான் பாயசம் கெட்டிப்பட்டு சுவையாக இருக்கும்.
  • கேரமல் பாயாசம் மிதமான இனிப்பு சுவையுடன் இருக்கும். நீங்கள்  உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
  • பாயசம் செய்வதற்கு காய்ச்சிய பால் பயன்படுத்தவும்.
  • கேரமல் செய்யும் பொழுது தீயை குறைவாக வைத்து கொள்ள வேண்டும் தீ அதிகமாக இருந்தால் சர்க்கரை கரிந்து விடும் வாய்ப்புள்ளது.
  • அதேபோல  கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கிளறவும் போதும் குறைவான தீயில் வைத்து கிளறவும்.

இதர பாயசம் வகைகள் – கோதுமை ரவை பாயசம்ரவா பாயசம், ஜவ்வரிசி பாயசம், சிறுதானிய பாயசம், பருப்பு பாயசம், பாதாம் பால்.

இதர இனிப்பு வகைகள் – பிரட் குலாப் ஜாமுன், கோதுமை ரவை கேசரி, காசி அல்வா, மால்புவா, கோதுமை அல்வா, குலாப் ஜாமுன், ரவா லட்டு, இனிப்பு காஜா, கடலை பர்ஃபி, ரவா  இனிப்பு அப்பம், கோவில் சக்கரை பொங்கல், ரசமலாய், நெய்யப்பம்.

 

See this Recipe in English

கேரமல் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்

  • நெய் – 2  தேக்கரண்டி
  • சேமியா – ¼  கப் – 50g
  • பால் – ¾  லிட்டர் – 750ml
  • சர்க்கரை – ¼  கப் + 3 தேக்கரண்டி
  • கண்டன்ஸ்டு மில்க் – ¼ கப்
  • நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை –  தேவையான அளவு

 செய்முறை 

1. ஒரு பாத்திரத்தில் 2  தேக்கரண்டி நெய் சேர்த்து,  சூடானதும் ¼  கப் சேமியா சேர்த்துக் கொள்ளவும்.

2. அதனை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.

3. சேமியா   வறுபட்ட பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக வேக வைத்துக் கொள்ளவும்.

4. சேமியா வெந்த பின்னர் ¾  லிட்டர் பால் சேர்த்துக் கொள்ளவும்.

 

5. மிதமான தீயில் 15 முதல் 20 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்துக் கொள்ளவும். அவ்வப்போது கிளறவும்.

6. பாயசம் நன்றாக கொதித்து  கெட்டியானதும் ¼  கப் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

7. ஒரு அடிகனமான பாத்திரத்தில் 3 தேக்கரண்டி சர்க்கரையை தூவியது போல் போட்டுக் கொள்ளவும்.

8. பின்னர் குறைவான தீயில் வைத்து சர்க்கரை கரைந்து கேரமல் ஆகும் வரை வைக்கவும்.

 9. பின்னர் ¼  கப் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கொள்ளவும்.

10.  குறைவான தீயில் கண்டென்ஸ்ட் மில்க் இன் நிறம் மாறி பிரவுன் கலர் ஆகும் வரை கிளறவும்.

11. பின்னர் தயார் செய்து வைத்துள்ள பாயசத்தில் கேரமல் கலவையை சேர்த்துக் கிளறவும்.

12. நன்கு கலந்த பின்னர் முந்திரி மற்றும் திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளவும்.

 13. சுவையான கேரமல் பாயசம் தயார். 

Leave a Reply