Rose Milk recipe in Tamil | ரோஸ் மில்க் | How to make rose milk | Summer Drink

See this Recipe in English

ரோஸ்மில்க் பால், சர்க்கரை, ரோஸ் சிரப், ஆகியவற்றை கொண்டு உடனடியாக மற்றும் சுலபமாக தயாரிக்கக்கூடிய குளிர்பானம்.  ரோஸ் மில்க் வெயில் காலங்களுக்கு மிகவும் ஏற்றது மேலும் உடலுக்கு கேடு விளைவிக்காத, குளிர்ச்சி தரக்கூடிய, மற்றும் குழந்தைகளுக்கு தரக்கூடிய சுவையான மற்றும் ஆரோக்கியமான குளிர்பானம். 

சுவையான ரோஸ் மில்க் செய்ய சில குறிப்புகள்

  • ரோஸ் சிரப் கிடைக்கவில்லையெனில் அரை தேக்கரண்டி அளவு ரோஸ் எஸ்ஸென்ஸ்  சேர்த்துக் கொள்ளவும்.
  • சர்க்கரை தேவைக்கு தகுந்தவாறு சேர்த்துக் கொள்ளவும்.
  • பாலுடன் ஐஸ் கிரீம் சேர்த்து ரோஸ் மில்க் செய்தால் மேலும் சுவையுடன் இருக்கும்.
  • ரோஸ் மில்க் மேலும் சுவையாக இருப்பதற்கு அதனுடன் 2 அல்லது 3 கரண்டி ஐஸ் க்ரீம் சேர்த்துக் கொள்ளலாம்
  • சிறிதளவு பாதாமை பொடியாக்கி பாலுடன் கலந்தால் சுவையான  பாதாம் ரோஸ்மில்க் தயார்.
  • சிறிதளவு ஏலக்காய்த்தூள் சேர்த்து ஏலக்காய் ரோஸ் மில்க் செய்யலாம்.

இதர வகைகள் – பால் சர்பத், பழ சர்பத்,  கேரட் மில்க் ஷேக்,பாதாம் பால், கேரமல் பாயாசம், கோதுமை ரவை பாயசம்ரவா பாயசம், ஜவ்வரிசி பாயசம், சிறுதானிய பாயசம், பருப்பு பாயசம், பாதாம் பால், தர்பூசணி ஜூஸ், மதுரை ஸ்பேஷல் ஜிகர்தண்டா


ரோஸ் செய்ய தேவையான பொருட்கள்

  • 1 லிட்டர்  பால் 
  • 1/2 கப் சர்க்கரை
  • 6 தேக்கரண்டி ரோஸ் சிரப்

ரோஸ் மில்க் செய்முறை

 1. ஒரு  ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு பால் சேர்த்து காய்ச்சிக் கொள்ளவும்.

 2. பால் காய்ந்த பிறகு 1/2 கப் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலக்கவும்.

 3.பின்னர் 6 தேக்கரண்டி ரோஸ் சிரப் சேர்த்து நன்கு கலக்கவும்.

 4. இப்பொழுது பாலை ஆற வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

 5. 2 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறலாம் அல்லது ஐஸ் கட்டிகள் சேர்த்து உடனடியாக பரிமாறலாம்.

 6. சுவையான மற்றும் ஆரோக்கியமான ரோஸ்மில்க் தயார்.

 

Leave a Reply