See this Recipe in English
முளைகட்டிய பச்சைப் பயிறு உடல்நலத்திற்கு மிகவும் ஏற்றதாகும். ப்ரோட்டின், விட்டமின், மினரல் போன்றவை அதிக அளவில் இருப்பதால் உடலுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதோடு உடலை வலுவாக்க உதவும். உடல் எடை குறைப்பதற்கும் மற்றும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் ஏற்றது தொடர்ந்து முளைகட்டிய பச்சை பயிறு சாலட் சாப்பிட்டு வந்தால் கணிசமான அளவில் உடல் எடையை குறைக்கலாம். சாலட் சாப்பிடுவதுடன் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது, உடற்பயிற்சி, மற்றும் நடைப்பயிற்சி செய்வது, உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது, ஆகியவற்றை சேர்த்து செய்யும் பொழுது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம் மேலும் சுறுசுறுப்புடனும் செயல்படுவதற்கு இது ஏற்ற உணவாகும்.
முளைகட்டிய பச்சைப் பயிறு செய்முறை
- பச்சை பயிரை முளை கட்டுவதற்கு அதனை 8 முதல் 12 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
- ஊறிய பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு வடி கட்டி போன்று துளைகள் உள்ள பாத்திரத்தில் வைக்கவும்.
- அதனை ஒரு ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்.
- மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை அதனை வைக்கவும்.
- தினமும் காலையும் மாலையும் அதனை ஒரு முறை கழுவி விட்டு துணியை மீண்டும் ஈரம் செய்து அதன் மேல் போடவும்.
- முதல் நாளிலேயே பச்சை பயிறு முளை கட்டி இருப்பதை காணலாம் விருப்பப்பட்ட அளவிற்கு வளர்ந்ததும் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.
See this Recipe in English
பச்சை பயிறு சாலட் செய்ய சில குறிப்புகள்
- சாலட் செய்வதற்கு பச்சை பயறுடன் சேர்த்து விருப்பப்பட்ட தானியங்களை முளை கட்டி சேர்த்துக் கொள்ளலாம் அல்லது வெறும் பச்சை பயிரில் மட்டுமே சாலட் செய்து சாப்பிடலாம்.
- கொண்டைக்கடலை காராமணி மற்றும் ராஜ்மா பீன்ஸ் ஆகியவை தவிர்த்து கொள்ளு, எள்ளு, வேர்க்கடலை, கம்பு ஆகியவற்றையும் முளைகட்டிய சாப்பிடலாம்.
- சாலட் செய்வதற்கு விருப்பமான காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்ளலாம், ஆப்பிள், கேரட், ஸ்ட்ராபெரி, திராட்சை, உலர் பழங்கள், பாதாம் பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
- முளைக்கட்டிய பயிறு வகைகளை அதிகம் வேக வைக்கக்கூடாது மற்றும் எண்ணெயில் பொரித்து சாப்பிடக்கூடாது.
- முளைக்கட்டிய பயறு வகைகளை சாப்பிட்ட பின்னர் உடலுக்கு வேலை தரவேண்டும். இவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் செரிமானமாகாத உணவுப் பொருட்களால் அமிலத்தன்மை சுரந்து அல்சர் ஏற்பட வாய்ப்புள்ளது.
- குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். வயது முதிர்ந்தவர்கள் முளை கட்டிய பயிறு வகைகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.
கத்திரிக்காய் சட்னி
ராகி புட்டு
சோயா கட்லட்
பாசிப்பருப்பு இட்லி
பட்டாணி மசாலா சுண்டல்
இடியாப்பம்
ரவா இட்லி
தேவையான பொருட்கள்
- பச்சை பயிறு – ½ கப் – 100g
- கொண்டை கடலை – ½ கப் – 100g
- சிகப்பு பீன்ஸ்/ராஜ்மா- ½ கப் – 100g
- காராமணி – ½ கப் – 100g
- வெங்காயம் – தேவையான அளவு
- தக்காளி – தேவையான அளவு
- ஆரஞ்சு சுளைகள் – 10
- பேரிச்சம்பழம் – 5
- உப்பு- தேவையான அளவு
- மிளகு தூள் – 1 தேக்கரண்டி
- எலுமிச்சை பழச்சாறு – 1- 2 தேக்கரண்டி
செய்முறை
1. பச்சைப்பயிறு முளை கட்டிய அதே முறையில் மூன்று விதமான பருப்பு வகைகள் முளை கட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. பின்னர் ஒரு பிரஷர் குக்கரில் முளை கட்டிய பருப்பு வகைகள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
3. அதனை மூடி வைத்து 2 விசில் வைத்து வேக வைக்கவும்.
4. வெந்த பின்னர் தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும்.
5. வேக வைத்துள்ள பருப்பு வகைகளுடன் தயாராக வைத்துள்ள முளைகட்டிய பச்சைப் பயிரை சேர்த்துக் கொள்ளவும்.
6. அதனுடன் சிறிதளவு வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.ஆரஞ்சு சுளைகளை நறுக்கி சேர்க்கவும். பேரீச்சம்பழம்சேர்த்துக் கொள்ள சேர்த்துக்கொள்ளலாம். அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
7. பின்னர் சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். பாதி எலுமிச்சம் பழத்தின் சாறு பிழிந்து சேர்த்துக்கொள்ளவும்.
8. எல்லாவற்றையும் நன்கு கலந்து பின்னர் பரிமாறவும். சுவையான முளைகட்டிய பச்சைப் பயிறு சாலட் தயார்.