Masala Pasta in Tamil | மசாலா பாஸ்தா | Pasta recipe in Tamil | How to make Pasta

See this Recipe in English

மசாலா பாஸ்தா காலை நேர உணவாகவும், மாலை சிற்றுண்டி, அல்லது இரவு நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில்  வைத்து அனுப்பலாம்.   எப்போதும் சாப்பிடும் இட்லி அல்லது தோசை  போர் அடிக்கும் பொழுது சில சமயங்களில் இது போன்ற பாஸ்தா வகைகளை செய்து சாப்பிடலாம்.  பொதுவாக  பாஸ்தா  சாஸ் சேர்த்து செய்யப்படுகிறது மேலை நாடுகளில் செய்யப்படும் முறை, இதனை நமது சுவைக்கு ஏற்றவாறு மசாலா பொருட்களை சேர்த்து மசாலா பாஸ்தா செய்யலாம்.  சுவையான மசாலா பாஸ்தாவை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

 சுவையான பாஸ்தா செய்ய சில குறிப்புகள்

  1. பலவிதமான பாஸ்தா கடைகளில் கிடைக்கின்றன கோதுமை பாஸ்தா, மல்டி கிரெய்ன் பாஸ்தா, போன்றவை கிடைக்கிறது. நீங்கள் எந்த விதமான பாஸ்தா வையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  2. பாஸ்தாவை தண்ணீரில் வேக வைக்கும் பொழுது 10 முதல் 15 நிமிடங்களுக்கு வேக வைத்துக் கொள்ளலாம் அல்லது பாக்கெட்டில் போட்டிருக்கும் வழிமுறையை பின்பற்றி வேக வைத்துக்கொள்ளலாம்.
  3. இரண்டு மூன்று நிறங்களில் குடமிளகாயை நான் சேர்த்துள்ளேன் நீங்கள் உங்கள் விருப்பப்படி சேர்த்துக்கொள்ளலாம். 
  4. குடை மிளகாயை  நீங்கள் விருப்பபட்டால் சேர்க்கலாம் அல்லது குடைமிளகாய் சேர்க்காமலும் செய்யலாம்.
  5. கேரட்,  உருளைக்கிழங்கு,  பட்டாணி  போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

ஓவன் இல்லாமல் பீட்சா/கேக் – ஓவென் இல்லாமல் பீஸ்ஸாஓவன் இல்லாமல் பீட்சா, பீஸ்ஸா செய்வது எப்படி?, முட்டை சேர்க்காத டூட்டி ஃப்ரூட்டி கேக், முட்டை சேர்க்காத சாக்லெட் ரவா கேக்,ஹனி  கேக், ரவா கேக், ஓவன் இல்லாமல் கப் கேக் செய்வது எப்படி?, ஓவன் இல்லாமல் வெண்ணிலா கேக், முட்டை சேர்க்காத சாக்லேட் கேக், ஓரியோ கேக், பர்கர் பன்.

இதர மேற்கத்திய உணவுகள் – பிரெட் பீட்சா, மசாலா பாஸ்தா, பன்னீர் பர்கர், சிக்கன் பர்கர்,  முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக் , முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக், தவா பர்கர், வெஜிடபிள் பர்கர் .

See this Recipe in English

பாஸ்தா செய்ய தேவையான பொருட்கள்

  • பாஸ்தா –  2 கப் –  200g
  • சமையல் எண்ணெய் – 3  தேக்கரண்டி
  • குடைமிளகாய் –  தேவையான அளவு
  • பெரிய வெங்காயம் – 2 
  • இஞ்சி பூண்டு விழுது – 1  தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 3 
  • கொத்தமல்லி –   சிறிதளவு
  • தக்காளி – 2
  • மஞ்சள் தூள் –  1/4 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் –  1 தேக்கரண்டி
  • சிவப்பு மிளகாய் தூள் –  1/2 தேக்கரண்டி
  • கரம் மசாலா –  1/2 தேக்கரண்டி
  • மல்லித்தூள் –  1/2 தேக்கரண்டி 
  • உப்பு –  தேவையான அளவு
  • டொமேட்டோ சாஸ் –  1 தேக்கரண்டி 
  • எலுமிச்சை பழ சாறு –  1 தேக்கரண்டி

செய்முறை

  1. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்,  அதனுடன் அரை தேக்கரண்டி உப்பு  மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  2. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் 2 கப்  பாஸ்தா சேர்த்துக் கொள்ளவும்.
  3. பத்து முதல் பதினைந்து நிமிடங்களுக்கு அல்லது மென்மையாகும் வரை வேக வைத்துக் கொள்ளவும்.
  4. வெந்த பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.
  5. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  6. எண்ணெய் சூடானதும் குடைமிளகாய் சேர்த்து பொன்நிறம் ஆகும் வரை வறுத்துக்கொள்ளவும்.
  7. பின்னர் அதனை தனியே எடுத்து வைக்கவும்.
  8. அதே எண்ணெயில் இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும்.
  9. அதனுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
  10. 3 பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்
  11. இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
  12. பின்னர் இரண்டு தக்காளி பழங்களை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும்.
  13. அதனுடன் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா, மற்றும் அரை தேக்கரண்டி மல்லித்தூள், தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.
  14. மிளகாய்தூளின் பச்சை வாசனை போன பிறகு ஒரு தேக்கரண்டி டொமேட்டோ சாஸ் சேர்த்து கலக்கவும்.
  15. அதனுடன்  வேக வைத்து வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து கலக்கவும்.
  16. நன்கு கலந்த பின்னர் தயார் செய்து வைத்துள்ள குடைமிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கிளறவும்.
  17. சுவையான மசாலா பாஸ்தா தயார்.

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.  

2. அதனுடன் அரை தேக்கரண்டி உப்பு  மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

3. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் 2 கப்  பாஸ்தா சேர்த்துக் கொள்ளவும்.

4. பத்து முதல் பதினைந்து நிமிடங்களுக்கு அல்லது மென்மையாகும் வரை வேக வைத்துக் கொள்ளவும்.

5. வெந்த பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

6. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் குடைமிளகாய் சேர்த்து பொன்நிறம் ஆகும் வரை வறுத்துக்கொள்ளவும்.

7. பின்னர் அதனை தனியே எடுத்து வைக்கவும்.

8. அதே எண்ணெயில் இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும்.

9. அதனுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 3 பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

10. இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.

11. பின்னர் இரண்டு தக்காளி பழங்களை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும்.

12. அதனுடன் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், அரை தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், அரை தேக்கரண்டி கரம் மசாலா, மற்றும் அரை தேக்கரண்டி மல்லித்தூள், தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.

13. மிளகாய்தூளின் பச்சை வாசனை போன பிறகு ஒரு தேக்கரண்டி டொமேட்டோ சாஸ் சேர்த்து கலக்கவும்.

14. அதனுடன்  வேக வைத்து வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து கலக்கவும்.

 

15. நன்கு கலந்த பின்னர் தயார் செய்து வைத்துள்ள குடைமிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கிளறவும்.

16. சுவையான மசாலா பாஸ்தா தயார்.

Leave a Reply